Sunday, January 9, 2011

தியாகராஜ கிருதி - பரா ஸ1க்தி மனுப - ராகம் ஸாவேரி - Parasakti Manupa - Raga Saveri

பல்லவி
1பரா ஸ1க்தி மனுப ராதா3 நாபை
பராகேலனம்மா

அனுபல்லவி
புராணி த4ர்ம ஸம்வர்த4னி 2ஸ்ரீ-
புரா
தீ4ஸ்1வரி ராஜ ஸே12ரி (ப)

சரணம்
சரணம் 1
3வராஹி த4 தே3வ ராஜ ஜலஜ
4வ ராக்ஷஸாது3லு வராலு கோரு
4வரானன 4நக3 வராத்மஜ முனி
வரார்சித நனு ப்3ரோவ ராதா3 ஓ (ப)


சரணம் 2
5விஸா1ல நயனே குஸா1லுகா3
நீது3 ஸேவ ஜேஸி 6த்ரி-த3ஸா1தி4-
பாது3லு ஸா1ஸ்1வதுலை பரவஸா17நதி
ஸேய ஸா1ந்தமுன ஜூசு 8ஸா1ம்ப4வி ஓ (ப)


சரணம் 3
நிரபராது49நிராகரிஞ்சு
து3ராத்மகுலனிந்து3 ராக
ஸேயக3 ராதா3 வர த்யாக3ராஜ நுத
ஸு143 ராம ஸோத3ரி த4ரா த4ர ஸுதே (ப)


பொருள் - சுருக்கம்
  • பராசக்தி!
  • பழம்பொருளே! அறம்வளர்த்த நாயகியே! ஸ்ரீபுரத் தலைவியே! பிறையணிபவளே!
  • உயர் அரவு அணிவோன், தேவர் தலைவன், மலரோன், அரக்கர்கள் ஆகியோரும் வரங்கள் கோரும் இனிய வதனத்தினளே! உயர் மலை மகளே! முனிவரிற் சிறந்தோர் தொழுபவளே!
  • அகன்ற கண்களுடையவளே! மகிழ்வுடன், உனது சேவை செய்து, முப்பத்துமூவர் தலைவன் ஆகியோர் அமரராகி, மெய்ம் மறந்து தொழுதிட, அமைதியுடன் நோக்கும் சாம்பவியே!
  • தியாகராசன் போற்றும் உயர் நன்மை அருள்பவளே! இராமனின் சோதரியே! இமவான் மகளே!

    • (என்னை) கவனிக்கலாகாதா?
    • என்மேல் அசட்டையேனம்மா?
    • என்னைக் காக்கலாகாதா?
    • குற்றமற்றோரைப் புறக்கணிக்கும் தீய உள்ளத்தினரை, இங்கு வாராது செய்யலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரா/ ஸ1க்தி/ மனுப ராதா3/ நாபை/
பரா/ சக்தி/ (என்னை) கவனிக்கலாகாதா/ என்மேல்/

பராகு/-ஏல/-அம்மா/
அசட்டை/ ஏன்/ அம்மா/


அனுபல்லவி
புராணி/ த4ர்ம ஸம்வர்த4னி/
பழம்பொருளே/ அறம்வளர்த்த நாயகியே/

ஸ்ரீ-புர/-அதி4-ஈஸ்1வரி/ ராஜ/ ஸே12ரி/ (ப)
ஸ்ரீ புர/ தலைவியே/ பிறை/ யணிபவளே/


சரணம்
சரணம் 1
வர/-அஹி/ த4ர/ தே3வ/ ராஜ/
உயர்/ அரவு/ அணிவோன்/ தேவர்/ தலைவன்/

ஜலஜ ப4வ/ ராக்ஷஸ/-ஆது3லு/ வராலு/ கோரு/
மலரோன்/ அரக்கர்கள்/ ஆகியோரும்/ வரங்கள்/ கோரும்/

வர/-ஆனன/ நக3/ வர/-ஆத்மஜ/ முனி/
இனிய/ வதனத்தினளே/ மலை/ உயர்/ மகளே/ முனிவரிற்/

வர/-அர்சித/ நனு/ ப்3ரோவ ராதா3/ ஓ/ (ப)
சிறந்தோர்/ தொழுபவளே/ என்னை/ காக்கலாகாதா/ ஓ/ பராசக்தி...


சரணம் 2
விஸா1ல/ நயனே/ குஸா1லுகா3/
அகன்ற/ கண்களுடையவளே/ மகிழ்வுடன்/

நீது3/ ஸேவ/ ஜேஸி/ த்ரி-த31/-அதி4ப/-
உனது/ சேவை/ செய்து/ முப்பத்து (மூவர்)/ தலைவன்/

ஆது3லு/ ஸா1ஸ்1வதுலை/ பரவஸா1ல/
ஆகியோர்/ அமரராகி/ மெய்ம் மறந்து/

நதி ஸேய/ ஸா1ந்தமுன/ ஜூசு/ ஸா1ம்ப4வி/ ஓ/ (ப)
தொழுதிட/ அமைதியுடன்/ நோக்கும்/ சாம்பவியே/ ஓ/ பராசக்தி...


சரணம் 3
நிரபராது4ல/ நிராகரிஞ்சு/
குற்றமற்றோரை/ புறக்கணிக்கும்/

து3ராத்மகுலனு/-இந்து3/ ராக/
தீய உள்ளத்தினரை/ இங்கு/ வாராது/

ஸேயக3 ராதா3/ வர/ த்யாக3ராஜ/ நுத/
செய்யலாகாதா/ உயர்/ தியாகராசன்/ போற்றும்/

ஸு143/ ராம/ ஸோத3ரி/ த4ரா/ த4ர/ ஸுதே/ (ப)
நன்மை அருள்பவளே/ இராமனின்/ சோதரியே/ புவி/ சுமப்போன் (இமவான்)/ மகளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - வரானன - நக3 வராத்மஜ : வரானனே - நக3 வராத்மஜே.

5 - விஸா1ல நயனே - விஸா1ல நயன.

7 - நதி - நுதி.

9 - நிராகரிஞ்சு - நிராகரிஞ்சே.

Top

மேற்கோள்கள்
1 - பரா ஸ1க்தி - 'பரா' என்ற சொல்லுக்கு, காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்.

2 - ஸ்ரீ புர - இன்றைய 'லால்குடி' எனப்படும் 'திருத்தவத்துறை'க்கு, 'ஸ்ரீபுரம்' என்று பெயருண்டு. ஆனால், அனுபல்லவியில், தியாகராஜர், திருவையாறு உறை 'அறம் வளர்த்த நாயகி'யைக் குறிப்பிட்டுள்ளதால், இது, லால்குடியினைக் குறிக்காது. ஸ்ரீவி்த்தையினில், ஸ்ரீசக்கரத்திற்கு, 'ஸ்ரீ யந்திரம்' என்றும் 'ஸ்ரீபுரம்' என்றும் பெயராகும். இதுகுறித்து, பேராசிரியர் திரு DS சர்மா அவர்களின் 'லலிதா ஸஹஸ்ர நாம'த்தின் முன்னுரை நோக்கவும்.

'ஸ்ரீ சக்கரம்' குறித்து, மேற்கூறிய, காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

6 - த்ரி-த31 - முப்பத்துமூவர் - 12 ஆதித்தியர்; 8 வசுக்கள்; 11 ஈசர்கள்; 2 அஸ்வினியர் = 33 : இதனை சுருக்கமாக 'முப்பதினர்' எனப்படும்

Top

விளக்கம்
3 - வராஹி த4 - உயர் அரவு அணிவோன் - 'சிவனும் அம்மையிடம் வரம் கோருகின்றான்' என்பதனால், தியாகராஜர், இங்கு, 'பராசக்தி' என்று குறிப்பிடுவது, பரம்பொருளாகிய 'லலிதா மகா திரிபுர சுந்தரி'யினை யாகும். எனவே, முத்தொழிலில், 'அழித்தல்' செய்யும், திரிமூர்த்திகளில் ஒருவராக, 'சிவனை'க் குறிப்பிடுகின்றார்.

8 - ஸா1ம்ப4வி - சாம்பவி - இதற்கு, பொதுவாக, 'சம்புவின் மனைவி' என்று பொருளானாலும், ஸ்ரீவித்தையில், 'சாம்பவி' என்ற சொல்லுக்குத் தனி பொருளுண்டு.

9 - நிராகரிஞ்சு - புறக்கணிக்கும் : தியாகராஜர், இங்கு கூறும் சூழ்நிலை, என்னவென்று விளங்கவில்லை.

Top

அறம்வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.
ஸ்ரீபுரம் - ஸ்ரீசக்கரம்
அரவணிவோன் - சிவன்
தேவர் தலைவன் - இந்திரன்
மலரோன் - பிரமன்
முப்பத்துமூவர் தலைவன் - இந்திரன்

Top


Updated on 10 Jan 2011

No comments: