த3ரி தா3பு லேக வேடி3தே
த3ய 1ராதே3மோ ஸ்ரீ ராம
அனுபல்லவி
2கரி த4னமுலு 3கலிகி3தே
கருணிஞ்சி ப்3ரோதுவேமோ (த3)
சரணம்
அல நாடு3 நிர்ஜர வைரி
பா3லுனி ஜூசி ப்3ரோசிதிவி கானி
வலசி பத3முல நம்மிதே
வரமீ 4தோசெனா த்யாக3ராஜு (த3)
பொருள் - சுருக்கம்
- புகலோ, போக்கோ இன்றி வேண்டினால், கருணை வாராதோ, என்னமோ?
- கரிகள், செல்வங்கள் உண்டானால், கருணித்துக் காப்பாயோ, என்னமோ?
- அந்த நாள், மூப்பற்றோர் பகைவன் மைந்தனைக் கண்டு காத்தாய்; ஆயின்
- விரும்பி (உனது) திருவடிகளை நம்பினால் வரமருளத் தோன்றியதா?
- அந்த நாள், மூப்பற்றோர் பகைவன் மைந்தனைக் கண்டு காத்தாய்; ஆயின்
- தியாகராசன் புகலோ, போக்கோ இன்றி வேண்டினால், கருணை வாராதோ, என்னமோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ரி/ தா3பு/ லேக/ வேடி3தே/
புகலோ/ போக்கோ/ இன்றி/ வேண்டினால்/
த3ய/ ராது3/-ஏமோ/ ஸ்ரீ ராம/
கருணை/ வாராதோ/ என்னமோ/ ஸ்ரீ ராமா/
அனுபல்லவி
கரி/ த4னமுலு/ கலிகி3தே/
கரிகள்/ செல்வங்கள்/ உண்டானால்/
கருணிஞ்சி/ ப்3ரோதுவு/-ஏமோ/ (த3)
கருணித்து/ காப்பாயோ/ என்னமோ/
சரணம்
அல/ நாடு3/ நிர்ஜர/ வைரி/
அந்த/ நாள்/ மூப்பற்றோர்/ பகைவன்/
பா3லுனி/ ஜூசி/ ப்3ரோசிதிவி/ கானி/
மைந்தனை/ கண்டு/ காத்தாய்/ ஆயின்/
வலசி/ பத3முல/ நம்மிதே/
விரும்பி/ (உனது) திருவடிகளை/ நம்பினால்/
வரமு/-ஈ/ தோசெனா/ த்யாக3ராஜு/ (த3)
வரம்/ அருள/ தோன்றியதா/ தியாகராசன்/ புகலோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கலிகி3தே - கல்கி3தே.
4 - தோசெனா - தோசுனா.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஏமோ - என்னமோ - கிண்டலாக.
2 - கரி த4னமுலு - கரிகள், செல்வங்கள். தியாகராஜர், பிரகலாதனை, உதாரணமாகக் கொடுத்துள்ளமையால், அவன்போன்று, அவருக்கும் அரச போகங்கள் உண்டானால், இறைவன் அருள்வானோ, என்று கிண்டல் செய்கின்றார்.
கரி - யானை
மூப்பற்றோர் பகைவன் மைந்தன் - இரணிய கசிபு மைந்தன் - பிரகலாதன்
Top
Updated on 07 Jan 2011
No comments:
Post a Comment