Tuesday, January 4, 2011

தியாகராஜ கிருதி - துலஸி ஜக3ஜ்-ஜனனி - ராகம் ஸாவேரி - Tulasi Jagajjanani - Raga Saveri

பல்லவி
துலஸி ஜக3ஜ்-ஜனனி து3ரிதாபஹாரிணீ

அனுபல்லவி
நிலவரமகு3 நீ ஸரி வேல்புலு லேரட ப்3ரோவுமிகனு (து)

சரணம்
சரண யுக3ம்பு3லு 1நது3லகு பரம வைகுண்ட2மட
ஸரஸிஜாக்ஷி நீ மத்4யமு ஸகல ஸுராவாஸமட
ஸி1ரமுன நைக3ம கோடுலு செலகு3சுன்னாரட
ஸரஸ த்யாக3ராஜாதி3 வர ப4க்துலு பாடே3ரட (து)


பொருள் - சுருக்கம்
  • துளசி! உலகினை ஈன்றவளே! பாவங்களைக் களைபவளே!
  • கமலக் கண்ணீ!

    • நிலையான உனக்கு நிகர் தெய்வங்கள் இல்லையாம்;
    • (உனது) திருவடி யிணை நதிகளுக்கு உயர் வைகுண்டமாம்;
    • உனது இடை அனைத்து தேவர் உறைவிடமாம்;
    • (உனது) தலையினில் மறை நூல்கள் யாவும் திகழ்கின்றனராம்;
    • இனிய தியாகராசன் ஆகிய உயர் தொண்டர்கள் (புகழ்) பாடினராம்.


  • காப்பாய் இனியும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
துலஸி/ ஜக3த்/-ஜனனி/ து3ரித/-அபஹாரிணீ/
துளசி/ உலகினை/ ஈன்றவளே/ பாவங்களை/ களைபவளே/


அனுபல்லவி
நிலவரமகு3/ நீ/ ஸரி/ வேல்புலு/ லேரு-அட/ ப்3ரோவுமு/-இகனு/ (து)
நிலையான/ உனக்கு/ நிகர்/ தெய்வங்கள்/ இல்லையாம்/ காப்பாய்/ இனியும்/


சரணம்
சரண/ யுக3ம்பு3லு/ நது3லகு/ பரம/ வைகுண்ட2மு-அட/
(உனது) திருவடி/ யிணை/ நதிகளுக்கு/ உயர்/ வைகுண்டமாம்/

ஸரஸிஜ/-அக்ஷி/ நீ/ மத்4யமு/ ஸகல/ ஸுர/-ஆவாஸமு-அட/
கமல/ கண்ணீ/ உனது/ இடை/ அனைத்து/ தேவர்/ உறைவிடமாம்/

ஸி1ரமுன/ நைக3ம/ கோடுலு/ செலகு3சு-உன்னாரு-அட/
(உனது) தலையினில்/ மறை நூல்கள்/ யாவும்/ திகழ்கின்றனராம்/

ஸரஸ/ த்யாக3ராஜ/-ஆதி3/ வர/ ப4க்துலு/ பாடே3ரு-அட/ (து)
இனிய/ தியாகராசன்/ ஆகிய/ உயர்/ தொண்டர்கள்/ (புகழ்) பாடினராம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நது3லகு - நருலகு. கீழ்க்கண்ட துளசியின் சரிதத்தின்படி, 'நது3லகு' என்பதுதான் பொருந்தும் என்று நினைக்கின்றேன். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
துளசியின் சரிதம், தேவி பாகவதத்திலும் (9-வது புத்தகம்), பிரம்ம வைவார்த்த புராணத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரம்ம வைவார்த்த புராணத்தின் முழு ஆங்கில மொழிபெயர்ப்பு காணவும்.

சிறந்த பாகவத சொற்பொழிவாளர், திரு TS பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள், 'துளசி மகாத்மிய'த்தினில், பெண்கள், தினமும், துளசியை வழிபடுகையில் கூறும் தோத்திரத்திரனைக் கொடுத்துள்ளார் -

யன்-மூலே ஸர்வ தீர்தா2னி
யன்-மத்4யே ஸர்வ தே3வதா:
யத3க்3ரே ஸர்வ வேதா3ஸ்1
தாம் துளஸீம் நமாம்யஹம்

"எவள் மூலத்தினில் அனைத்து தீர்த்தங்களும்,
எவள் இடையில் அனைத்து தேவதைகளும்,
எவள் தலையில் அனைத்து வேதங்களும் உள்ளனவோ,
அந்தத் துளசியினைத் தொழுகின்றேன் நான்."

Top

மேற்கூறிய வலைத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 'துளசியின் சரித'த்தின்படி, விஷ்ணு, துளசியிடம் கூறியதாவது -

"உனதுடல், இந்தப் புனித பாரத பூமியினில், புகழ்மிக்க, தெளிந்த, புனித கண்டகி நதியாகும். உனது முடி, புனித மரங்களாகும். மரங்கள் உன்னிலிருந்து தோன்றுவதனால், அவை 'துளசி மரங்கள்' எனப்படும். மூவுலகத்திலுள்ளோர், உன்னை தளங்களினாலும், மலர்களினாலும் வழிபடுவர். இங்ஙனம், மரங்களிலும், மலர்களிலும் துளசி தலைசிறந்ததாகக் கருதப்படும்." (அத்தியாயம் 16).

"அனைத்து புனிதத் தலங்களிலும் நீ உறைவாய். மக்களுக்கு மிக்குயர் புண்ணியம் அருள்வாய். அனைத்து புண்ணியத் தலங்களும் துளசி மரத்தினடியினில் கூடும். இங்ஙனம், யாவர்க்கும் புண்ணியம் கிடைக்கும்." (அத்தியாயம் 17)

"நீ, கண்டகி நதியின் தலைமை தேவதையாவாய். அதனால், பாரத பூமிக்குப் புண்ணியம் அருள்வாய். நீ, என்னுடைய விரிவாகிய 'உப்பு நீர்'க் கடலின் மனைவியாவாய்." (அத்தியாயம் 17)

Top

விளக்கம்



Updated on 05 Jan 2011

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணத்தில் ’மறை நூல்கள்/ யாவும்/ திகழ்கின்றனராம் ’ என்று கொடுத்துள்ளீர். மறைநூல்கள் என்பது அஃறிணை. ஆதலால் வினைச் சொல் திகழ்கின்றன என்று இருக்கவேண்டும்.
ஆனால் தெலுங்கில் ’నైగమ కోటులు చెలగుచున్నారట ’/ naigama kOTulu celaguc(u)nnAr(a)Ta என்பதில் வினைச்சொல் உயர்திணையில் உள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜர், பல கீர்த்தனைகளில், இத்தகைய உயர்திணைச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக, 'ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர சுந்த3ருல' என்று கூறுகின்றார். இந்தப் பாடலிலும், 'கோடுலு' என்பதனால், அது உயர்திணை ஆகாது. ஆங்கிலத்தில் இதனை 'host' என்று மொழிபெயர்க்கப்படும்.

'திகழ்கின்றனர்' என்று மொழிபெயர்க்கையில், இத்தகைய விமரிசனம் வரும் என்று எதிர் பார்த்தேன். ஆனால், தியாகராஜர் கூறிய சொற்களை, கூடியவரையில், அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பது என்று நான் எண்ணியுள்ளதால், இத்தகைய குழப்பங்கள் நேர வாய்ப்புள்ளது. இது தவிர்க்க இயலாதது.

வணக்கம்,
கோவிந்தன்