Friday, December 24, 2010

தியாகராஜ கிருதி - வரமைன நேத்ரோத்ஸவ - ராகம் பரஜு - Varamaina Netrotsava - Raga Paraju - Prahlada Bhakti Vijayam

பல்லவி
வரமைன நேத்ரோத்ஸவமுனு கனுகொ3
தரணி வெட3லெ ஜூட3ரே

அனுபல்லவி
4ரனு விதீ4ந்த்3ருலு கர சாமரமுல-
னிரு-க33லனு மெரய
நிரதமுனனு க33னமுன ஸுருல சேதி
விருல வான குரிய (வ)

சரணம்
சரணம் 1
பரம பா43வத சயமுலு பா3கு33
ஹரி நாமமு ஸேய
து3ரமுன 1ப்ரஹ்லாது3டு3 கனிகரமுன
ஹரியனி தல-போய (வ)


சரணம் 2
வாரிதி4 ராஜு நாரத3 ஸனகாது3லு
ஸாரெகு நுதியிம்பக3
வாரமு ஸ்ரீ த்யாக3ராஜ வரது33ல்ல
வாரல கனி ப்3ரோவக3 (வ)


பொருள் - சுருக்கம்
காணீரே!

  • கண்ணுக்குப் பெரும் விருந்தினைக் கண்டுகொள்ளப் பகலவன் எழுந்தனன்.

    • புவியில், பிரமனும், இந்திரனும் கை சாமரங்களுடன் (அரியின்) இருபக்கமும் திகழ,
    • விடாது, வானிலிருந்து, வானோர் கைகளினின்று மலர் மழை பொழிய,

    • பெரும் பாகவதக் குழுமங்கள், சிறக்க அரியின் நாமங்களை யுரைக்க,
    • வேகமாக, பிரகலாதன் கனிவுடன் 'அரி' யென தியானிக்க,

    • கடலரசன், நாரதர் மற்றும் சனகாதியர்கள் இடையறாது அரியினைப் போற்ற,
    • என்றும் தியாகராசனுக்கருள்வோன், அவர்கள் யாவரையும் கண்டு, காத்தருள,


  • கண்ணுக்குப் பெரும் விருந்தினைக் கண்டுகொள்ளப் பகலவன் எழுந்தனன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வரமைன/ நேத்ர/-உத்ஸவமுனு/ கனுகொ3ன/
பெரும்/ கண்ணுக்கு/ (விழாவினை) விருந்தினை/ கண்டுகொள்ள/

தரணி/ வெட3லெ/ ஜூட3ரே/
பகலவன்/ (புறப்பட்டனன்) எழுந்தனன்/ காணீரே/


அனுபல்லவி
4ரனு/ விதி4/-இந்த்3ருலு/ கர/ சாமரமுலனு/-
புவியில்/ பிரமனும்/ இந்திரனும்/ கை/ சாமரங்களுடன்/

இரு/-க33லனு/ மெரய/
(அரியின்) இரு/ பக்கமும்/ திகழ/

நிரதமுனனு/ க33னமுன/ ஸுருல/ சேதி/
விடாது/ வானிலிருந்து/ வானோர்/ கைகளினின்று/

விருல/ வான/ குரிய/ (வ)
மலர்/ மழை/ பொழிய/ பெரும்...


சரணம்
சரணம் 1
பரம/ பா43வத/ சயமுலு/ பா3கு33/
பெரும்/ பாகவத/ குழுமங்கள்/ சிறக்க/

ஹரி/ நாமமு/ ஸேய/
அரியின்/ நாமங்களை/ யுரைக்க/

து3ரமுன/ ப்ரஹ்லாது3டு3/ கனிகரமுன/
வேகமாக/ பிரகலாதன்/ கனிவுடன்/

ஹரி/-அனி/ தல-போய/ (வ)
'அரி'/ யென/ தியானிக்க/ பெரும்...


சரணம் 2
வாரிதி4/ ராஜு/ நாரத3/ ஸனக-ஆது3லு/
கடல்/ அரசன்/ நாரதர்/ (மற்றும்) சனகாதியர்கள்/

ஸாரெகு/ நுதியிம்பக3/
இடையறாது/ (அரியினை) போற்ற/

வாரமு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வரது3டு3/-
என்றும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ அருள்வோன்/

அல்ல வாரல/ கனி/ ப்3ரோவக3/ (வ)
அவர்கள் யாவரையும்/ கண்டு/ காத்தருள/ பெரும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்ரஹ்லாது3டு3 - ப்ரஹ்லாது3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இந்த கீர்த்தனை, 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் கடைசி (மங்களம் தவிர) பாடலாகும்.

சனகாதியர் - பிரமனின் மைந்தர்கள் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர்
இவர்களில் சனத்குமாரர் முருகனெனப்படுவார்.
தியாகராசனுக்கருள்வோன் - அரியினைக் குறிக்கும்.

Top


Updated on 24 Dec 2010

No comments: