ஜய ஜய ஸ்ரீ ரகு4 ராம
ஸஜ்ஜன ஹ்ரு2த3யார்ணவ ஸோம
சரணம்
சரணம் 1
ஸம்மதமுன நா மேனு நீ
ஸொம்மனி வேடு3கொன்னானு (ஜய)
சரணம் 2
க3தி ஹீனுடை3யலஸி
வச்சிதி நீவே காவலஸி (ஜய)
சரணம் 3
அன்யுல நே கோரிதினா
ராஜன்ய நின்னு தூ3ரிதினா (ஜய)
சரணம் 4
நின்னே நா மதி3 கோர ராம
நன்னலயிஞ்சுட மேரா (ஜய)
சரணம் 5
நனு மரவகு ஸு1ப4 கரமா
1நின்னனுஸரிஞ்ச நா தரமா (ஜய)
சரணம் 6
மாகிகனெவ்வரு லேரு ஜூட3
நீகிக ந்யாயமு காது3 (ஜய)
சரணம் 7
ஆத3ரிஞ்சனு பராகாயீ
கே2த3முலிகனெந்தா3க (ஜய)
சரணம் 8
விபரீதமுலெஞ்சிதினோ
ஏயபராத4மு ஜேஸிதினோ (ஜய)
சரணம் 9
வாஸி லேத3னுசு சலமோ நே
ஜேஸின பூஜா ப2லமோ (ஜய)
சரணம் 10
நீ ஸரி வேல்புலு லேரு ராம
நா ஸரி தீ3னுலு லேரு (ஜய)
சரணம் 11
தெலுபனு எவ்வரு லேதா3 நா
கலவரமுலு வின ராதா3 (ஜய)
சரணம் 12
பாத3முலகு வந்த3னமு நா
மீத3னேல த3ந்த3னமு (ஜய)
சரணம் 13
தாள ஜாலயீ ரட்டு ராம
ஜாலமேல செய்யி பட்டு (ஜய)
சரணம் 14
நர வருலீ த4ரலோன நீ
கருண லேத3னக3 வலெனா (ஜய)
சரணம் 15
நேரமெஞ்சுடகு போக ஸரி
வாரலு நவ்வக3னீக (ஜய)
சரணம் 16
மானமு நீதே3 ஸும்மி
அபி4மானமுனேலுகொம்மி (ஜய)
சரணம் 17
பாத3முலே க3தியண்டி கலி
பா3த4 தரமு காத3ண்டி (ஜய)
சரணம் 18
சக்கனி நீ ரூபமுனு கனி
ஸொக்கிதி நா ஹ்ரு2த3யமுன (ஜய)
சரணம் 19
கடகட பாவன நாம
மனஸிடு திருக3னி ஸ்ரீ ராம (ஜய)
சரணம் 20
ஆஸி1ஞ்சின நா பைனி
நீகாஸு1 நிண்ட3 த3ய ரானி (ஜய)
சரணம் 21
நா பா4க்3யமு நீதே3ரா பத்3ம-
நாப4 2அமர பரிவார (ஜய)
சரணம் 22
சாலு சாலு ரகு4 வீர
நன்னேலுகோரா மனஸார (ஜய)
சரணம் 23
ராஜித 3நவ மணி பூ4ஷ த்யாக3-
ராஜ வினுத ம்ரு2து3 பா4ஷ (ஜய)
பொருள் - சுருக்கம்
- ஜய ஜய இரகு ராமா! நல்லோர் இதயக்கடலின் மதியே!
- மன்னா!
- இராமா!
- நன்மை செய்வோனே!
- புனித நாமத்தோனே!
- கமல உந்தியோனே! வானோர் பரிவாரத்தோனே!
- இரகு வீரா!
- ஒளிரும் நவமணி ஆபரணங்களோனே! தியாகராசன் போற்றும் இனிய சொல்லோனே!
- சம்மதத்துடன், எனதுடல் உனது சொத்தென வேண்டிக்கொண்டேன்;
- புகலற்றவனாக, களைத்து வந்தேன்; நீயே (யெனக்கு) வேண்டும்;
- மற்றெவரையும் நான் வேண்டினேனா? உன்னைக் குறை கூறினேனா?
- உன்னையே யென் மனம் விழைய, என்னை அலைக்கழித்தல் தகுமோ?
- என்னை மறவாதே, உன்னை அனுசரிக்க என்னால் இயலுமா?
- எமக்கினி எவருமில்லை! பார்த்துக் கொண்டிருக்க உனக்கினியும் நியாயமாகாது;
- (என்னை) ஆதரிப்பதற்கு அசட்டையோ? இந்த துன்பங்கள் இன்னமும் எதுவரைக்கும்?
- முறைகேடுகள் (ஏதும்) எண்ணினேனோ? ஏதும் குற்றமிழைத்தேனோ?
- எனக்குத் தகுதி யில்லையென தாமதமோ? நான் செய்த வழிபாட்டின் பயனோ?
- உனக்கீடான தெய்வமில்லை; எனக்கீடான கேடுகெட்டோரில்லை.
- (உனக்குத்) தெரிவிக்க யாருமில்லையோ? எனது உளறல்களைக் கேட்கலாகாதோ?
- (உனது) திருவடிகளை வணங்கினேன்; என் மீதேன் கள்ளத்தனம்?
- தாளவியலேன் இவ்விழிவினை; தாமதமேன்? எனது கைப் பற்றுவாயாக!
- மனிதரிற் சிறந்தோரும், இப்புவியிலுனது கருணை யிலதெனக் கூற வேண்டுமோ?
- (எனது) குற்றம் காணப் போகாதே; சரி சமமானோர் நகைக்கச் செய்யாதே;
- (எனது) மானம் உனதேயன்றோ! என்னையன்புடன் ஆண்டுகொள்ளேன்!
- (உனது) திருவடிகளே புகலென்றேன்; கலியின் தொல்லைகளைப் பொறுக்க இயலாதென்றேன்;
- இனிய உனதுருவம் கண்டு சொக்கினேன் எனதுள்ளத்தினில்;
- ஐயகோ! (உனது) மனம் இப்பக்கம் திரும்பட்டும்;
- உன்னை விரும்பிய என்மீது உனக்கு விரைவில் நிரம்பக் கருணை வரட்டும்!
- எனது பேறு உன்னதேயய்யா;
- போதும் போதுமய்யா (தாமதம்); என்னை ஆண்டுகொள்வாயய்யா, மனதார!
- சம்மதத்துடன், எனதுடல் உனது சொத்தென வேண்டிக்கொண்டேன்;
- ஜய ஜய இரகு ராமா! நல்லோர் இதயக்கடலின் மதியே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ ஜய/ ஸ்ரீ ரகு4/ ராம/
ஜய/ ஜய/ ஸ்ரீ ரகு/ ராமா/
ஸஜ்ஜன/ ஹ்ரு2த3ய/-அர்ணவ/ ஸோம/
நல்லோர்/ இதய/ கடலின்/ மதியே/
சரணம்
சரணம் 1
ஸம்மதமுன/ நா/ மேனு/ நீ/
சம்மதத்துடன்/ எனது/ உடல்/ உனது/
ஸொம்மு/-அனி/ வேடு3கொன்னானு/ (ஜய)
சொத்து/ என/ வேண்டிக்கொண்டேன்/
சரணம் 2
க3தி/ ஹீனுடை3/-அலஸி/
புகல்/ அற்றவனாக/ களைத்து/
வச்சிதி/ நீவே/ காவலஸி/ (ஜய)
வந்தேன்/ நீயே/ (யெனக்கு) வேண்டும்/
சரணம் 3
அன்யுல/ நே/ கோரிதினா/
மற்றெவரையும்/ நான்/ வேண்டினேனா/
ராஜன்ய/ நின்னு/ தூ3ரிதினா/ (ஜய)
மன்னா/ உன்னை/ குறை கூறினேனா/
சரணம் 4
நின்னே/ நா/ மதி3/ கோர/ ராம/
உன்னையே/ யென்/ மனம்/ விழைய/ இராமா/
நன்னு/-அலயிஞ்சுட/ மேரா/ (ஜய)
என்னை/ அலைக்கழித்தல்/ தகுமோ/
சரணம் 5
நனு/ மரவகு/ ஸு1ப4/ கரமா/
என்னை/ மறவாதே/ நன்மை/ செய்வோனே/
நின்னு/-அனுஸரிஞ்ச/ நா/ தரமா/ (ஜய)
உன்னை/ அனுசரிக்க/ என்னால்/ இயலுமா/
சரணம் 6
மாகு/-இகனு/-எவ்வரு/ லேரு/ ஜூட3/
எமக்கு/ இனி/ எவரும்/ இல்லை/ பார்த்துக் கொண்டிருக்க/
நீகு/-இக/ ந்யாயமு/ காது3/ (ஜய)
உனக்கு/ இனியும்/ நியாயம்/ ஆகாது/
சரணம் 7
ஆத3ரிஞ்சனு/ பராகா/-ஈ/
(என்னை) ஆதரிப்பதற்கு/ அசட்டையோ/ இந்த/
கே2த3முலு/-இகனு/-எந்தா3க/ (ஜய)
துன்பங்கள்/ இன்னமும்/ எதுவரைக்கும்/
சரணம் 8
விபரீதமுலு/-எஞ்சிதினோ/
முறைகேடுகள் (ஏதும்)/ எண்ணினேனோ/
ஏ/-அபராத4மு/ ஜேஸிதினோ/ (ஜய)
ஏதும்/ குற்றம்/ இழைத்தேனோ/
சரணம் 9
வாஸி/ லேது3/-அனுசு/ சலமோ/ நே/
(எனக்கு) தகுதி/ யில்லை/ யென/ தாமதமோ/ நான்/
ஜேஸின/ பூஜா/ ப2லமோ/ (ஜய)
செய்த/ வழிபாட்டின்/ பயனோ/
சரணம் 10
நீ/ ஸரி/ வேல்புலு/ லேரு/ ராம/
உனக்கு/ ஈடான/ தெய்வம்/ இல்லை/ இராமா/
நா/ ஸரி/ தீ3னுலு/ லேரு/ (ஜய)
எனக்கு/ ஈடான/ கேடுகெட்டோர்/ இல்லை/
சரணம் 11
தெலுபனு/ எவ்வரு/ லேதா3/ நா/
(உனக்குத்) தெரிவிக்க/ யாரும்/ இல்லையோ/ எனது/
கலவரமுலு/ வின ராதா3/ (ஜய)
உளறல்களை/ கேட்கலாகாதோ/
சரணம் 12
பாத3முலகு/ வந்த3னமு/ நா/
(உனது) திருவடிகளை/ வணங்கினேன்/ என்/
மீத3னு/ ஏல/ த3ந்த3னமு/ (ஜய)
மீது/ ஏன்/ கள்ளத்தனம்/
சரணம் 13
தாள/ ஜால/-ஈ/ ரட்டு/ ராம/
தாள/ இயலேன்/ இந்த/ இழிவினை/ இராமா/
ஜாலமு/-ஏல/ செய்யி/ பட்டு/ (ஜய)
தாமதம்/ ஏன்/ (எனது) கை/ பற்றுவாயாக/
சரணம் 14
நர/ வருலு/-ஈ/ த4ரலோன/ நீ/
மனிதரிற்/ சிறந்தோரும்/ இந்த/ புவியில்/ உனது/
கருண/ லேது3/-அனக3/ வலெனா/ (ஜய)
கருணை/ யிலது/ (என) கூற/ வேண்டுமோ/
சரணம் 15
நேரமு/-எஞ்சுடகு/ போக/
(எனது) குற்றம்/ காண/ போகாதே/
ஸரி வாரலு/ நவ்வக3னு/-ஈக/ (ஜய)
சரி சமமானோர்/ நகைக்க/ செய்யாதே/
சரணம் 16
மானமு/ நீதே3/ ஸும்மி/
(எனது) மானம்/ உனதே/ யன்றோ/
அபி4மானமுன/-ஏலுகொம்மி/ (ஜய)
(என்னை) அன்புடன்/ ஆண்டுகொள்ளேன்/
சரணம் 17
பாத3முலே/ க3தி/-அண்டி/ கலி/
(உனது) திருவடிகளே/ புகல்/ என்றேன்/ கலியின்/
பா3த4/ தரமு/ காது3/-அண்டி/ (ஜய)
தொல்லைகளை/ பொறுக்க/ இயலாது/ என்றேன்/
சரணம் 18
சக்கனி/ நீ/ ரூபமுனு/ கனி/
இனிய/ உனது/ உருவம்/ கண்டு/
ஸொக்கிதி/ நா/ ஹ்ரு2த3யமுன/ (ஜய)
சொக்கினேன்/ எனது/ உள்ளத்தினில்/
சரணம் 19
கடகட/ பாவன/ நாம/
ஐயகோ/ புனித/ நாமத்தோனே/
மனஸு/-இடு/ திருக3னி/ ஸ்ரீ ராம/ (ஜய)
(உனது) மனம்/ இப்பக்கம்/ திரும்பட்டும்/ ஸ்ரீ ராமா/
சரணம் 20
ஆஸி1ஞ்சின/ நா/ பைனி/
(உன்னை) விரும்பிய/ என்/ மீது/
நீகு/-ஆஸு1/ நிண்ட3/ த3ய/ ரானி/ (ஜய)
உனக்கு/ விரைவில்/ நிரம்ப/ கருணை/ வரட்டும்/
சரணம் 21
நா/ பா4க்3யமு/ நீதே3ரா/ பத்3ம/-
எனது/ பேறு/ உன்னதேயய்யா/ கமல/
நாப4/ அமர/ பரிவார/ (ஜய)
உந்தியோனே/ வானோர்/ பரிவாரத்தோனே/
சரணம் 22
சாலு/ சாலு/ ரகு4/ வீர/
போதும்/ போதுமய்யா (தாமதம்)/ இரகு/ வீரா/
நன்னு/-ஏலுகோரா/ மனஸார/ (ஜய)
என்னை/ ஆண்டுகொள்வாயய்யா/ மனதார/
சரணம் 23
ராஜித/ நவ/ மணி/ பூ4ஷ/
ஒளிரும்/ நவ/ மணி/ ஆபரணங்களோனே/
த்யாக3ராஜ/ வினுத/ ம்ரு2து3/ பா4ஷ/ (ஜய)
தியாகராசன்/ போற்றும்/ இனிய/ சொல்லோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
3 - நவ மணி - நவ ரத்தினங்கள் - முத்து, மாணிக்கம், புஷ்பராகம், வைரம், மரகதம், பவழம், நீலம், கோமேதகம், வைடூரியம்.
Top
விளக்கம்
1 - நின்னனுஸரிஞ்ச - உன்னை அனுசரிக்க என்னால் இயலுமா - தியாகராஜர் இங்ஙனம் கூறுவதன் நோக்கம், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், இராமன் தனக்கு விதித்துக்கொண்ட வரம்பு அத்தனை உயர்ந்தது என்றும் அந்த அளவுக்கு மனிதர்கள் தங்களை நடத்திக் கொள்வது கடினம் என்பதுமாகும்.
இராமனுக்கு, 'மரியாதை புருஷோத்தமன்' என்று பெயராகும். இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று - இராமன், மரியாதை (வரம்பு) மீறாது நடப்பவன் என்பது. மற்றொன்று, இராமன், வரம்புகளை மீறாது, அதன் தரத்தினையே உயர்த்தியவன் என்பதும். இராமன், அடவிக்குச் செல்லுமுன்பு, தசரதர், கௌசலை, இலக்குவன் கூறியவை, மற்றும், அடவியில், இராமனைத் திரும்ப அழைக்கச் சென்ற, பரதன் மற்றும் வசிட்டர் முதலாக மற்ற புரோகிதர்களும் கூறியவற்றை நோக்குகையில், இராமன், தந்தையின் ஆணைக்குட்பட்டு, காடு செல்ல மறுத்திருந்தாலும், அது வரம்புக்குட்பட்டுத்தான் இருந்திருக்கும். ஆனால், இராமனோ, 'தந்தை சொல் தட்டமாட்டேன்' என்று, பிடிவாதமாக, பதினான்கு ஆண்டுகள் வனத்தில் கழித்து, எண்ணற்றத் துயரங்கள் அனுபவித்ததை நோக்குகையில், இராமன் மரியாதையின் தரத்தினையே உயர்த்தினான் என்பது விளங்கும்.
Top
இப்படி, மரியாதையின் தரத்தையும் உயர்த்துமளவுக்கு, சாதாரண மனிதர்கள் நடந்துகொள்வது மிக்குக் கடினமாகும், என்று தியாகராஜர் கூறுகின்றார் என்பது எனது கருத்து. ஆனால், தியாகராஜரே, தனது வாழ்க்கையில், மிக்கு உயர்ந்த பண்புகளுடன் விளங்கி, அதனால், மட்டற்ற துன்பங்களுக்கு ஆளானார், என்பது அவரது கீர்த்தனைகளிலிருந்து தெரியவருகின்றது. அப்படிப்பட்ட, மரியாதைக்குட்பட்டு நடக்கும், தியாகராஜரே, 'இராமனை அனுசரித்து நடப்பது கடினம்' என்று கருதினால், இராமனின் மரியாதையின் தரம் எத்தகையது என்று நாம் அனுமானிக்கலாம். எத்தகைய, இராமன் எனும் ஆசானுக்கு, எத்தகைய, தியாகராஜர் என்ற சீடன், என்று வியக்கத் தோன்றுகின்றது.
2 - அமர பரிவார - வானோர் பரிவாரத்தோன் - வானோர்கள்தான் வானரர்களாகத் தோன்றி, இராமனுக்கு சேவை செய்தார்கள்.
எனக்குத் தகுதியில்லையென - 'உனக்கு வசதியில்லையென' என்றும் கொள்ளலாம்
Top
Updated on 23 Dec 2010
No comments:
Post a Comment