Saturday, December 25, 2010

தியாகராஜ கிருதி - இந்தகன்ன தெல்ப - ராகம் ஸாவேரி - Intakanna Telpa - Raga Saveri

பல்லவி
இந்தகன்ன தெல்ப தரமா
ஜக3தீ3ஸ்1வர நே நீகிதரமா 1நீதோ (இ)

சரணம்
சரணம் 1
நீடி லோனி 2ராஜீவமுரா ராம
நின்னு நம்மி ப்3ரதுகு 3ஜீவமுரா (இ)


சரணம் 2
நீவே தனகிஹ பரமு ராம
நின்னு நம்மின காபுரமு (இ)


சரணம் 3
4னமுனு கோரு 4சாதகமு ரீதி
காசிதி ஹ்ரு2த்பாதகமு (இ)


சரணம் 4
ரஜனீஸு1 ஜூசு குமுத3மு ரீதி
ராஜில்லு நினு ஜூட3 முத3மு (இ)


சரணம் 5
நீ 5கருணே 6ராஜ யோக3மு மாகு
7நீ மயமே ராஜ போ43மு (இ)


சரணம் 6
ராக4வ ஸு14 கர 8மூர்தி
த்யாக3ராஜு நீவாட3னி 8கீர்தி (இ)


பொருள் - சுருக்கம்
  • பல்லுகிற்கும் ஈசனே!
  • இராமா!
  • இராகவா! நன்மை செய்யும் உருவோனே!

  • உன்னிடம் இதைவிடத் தெரிவிக்க இயலுமா?
  • நானுனக்கு அயலா?

    • நீரினுள் மீனய்யா; உன்னை நம்பிப் பிழைக்கும் சீவனய்யா!
    • நீர்முகிலைக் கோரும் சாதகப் பறவை போன்று, காத்துள்ளேன் உனதிதயம் இரங்குதற்கு!
    • இரவரசனின் வரவை நோக்கும் குமுதத்தைப் போன்று, திகழும் உன்னைக் காண்பது களிப்பு!

    • நீயே தனக்கு இம்மையும் மறுமையும்; உன்னை நம்பிய குடித்தனமய்யா!
    • உனது கருணையே ராஜ யோகம் எமக்கு; உன் மயமே அரச போகம்.

    • இத்தியாகராசன் உன்னவனெனப் பெயரய்யா.


  • உன்னிடம் இதைவிடத் தெரிவிக்க இயலுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்தகன்ன/ தெல்ப/ தரமா/
இதைவிட/ தெரிவிக்க/ இயலுமா/

ஜக3த்/-ஈஸ்1வர/ நே/ நீகு/-இதரமா/ நீதோ/ (இ)
பல்லுகிற்கும்/ ஈசனே/ நான்/ உனக்கு/ அயலா/ உன்னிடம்/ இதைவிட...


சரணம்
சரணம் 1
நீடி லோனி/ ராஜீவமுரா/ ராம/
நீரினுள்/ மீனய்யா/ இராமா/

நின்னு/ நம்மி/ ப்3ரதுகு/ ஜீவமுரா/ (இ)
உன்னை/ நம்பி/ பிழைக்கும்/ சீவனய்யா/


சரணம் 2
நீவே/ தனகு/-இஹ/ பரமு/ ராம/
நீயே/ தனக்கு/ இம்மையும்/ மறுமையும்/ இராமா/

நின்னு/ நம்மின/ காபுரமு/ (இ)
உன்னை/ நம்பிய/ குடித்தனமய்யா/


சரணம் 3
4னமுனு/ கோரு/ சாதகமு/ ரீதி/
நீர்முகிலை/ கோரும்/ சாதகப் பறவை/ போன்று/

காசிதி/ ஹ்ரு2த்/-பாதகமு/ (இ)
காத்துள்ளேன்/ (உனது) இதயம்/ இரங்குதற்கு/


சரணம் 4
ரஜனீ/-ஈஸு1/ ஜூசு/ குமுத3மு/ ரீதி/
இரவு/ அரசனின்/ (வரவை) நோக்கும்/ குமுதத்தை/ போன்று/

ராஜில்லு/ நினு/ ஜூட3/ முத3மு/ (இ)
திகழும்/ உன்னை/ காண்பது/ களிப்பு/


சரணம் 5
நீ/ கருணே/ ராஜ/ யோக3மு/ மாகு/
உனது/ கருணையே/ ராஜ/ யோகம்/ எமக்கு/

நீ/ மயமே/ ராஜ/ போ43மு/ (இ)
உன்/ மயமே/ அரச/ போகம்/


சரணம் 6
ராக4வ/ ஸு14/ கர/ மூர்தி/
இராகவா/ நன்மை/ செய்யும்/ உருவோனே/

த்யாக3ராஜு/ நீவாடு3/-அனி/ கீர்தி/ (இ)
(இத்)தியாகராசன்/ உன்னவன்/ என/ பெயரய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீதோ - நாதோ : இவ்விடத்தில் 'நாதோ' என்பது பொருந்தாது.

5 - கருணே - கருண : இதே சரணத்தின் அடுத்த வரியில் வரும் 'மயமே' என்ற சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'கருணே' ஏற்கப்பட்டது.

7 - மயமே - மாயமே : இவ்விடத்தில் 'மயமே' என்பதுதான் பொருந்தும்.

8 - மூர்தி - கீர்தி : மூர்தே - கீர்தே : மூர்தி - கீர்தி என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
4 - சாதகமு - சாதகப் பறவை மழை நீரைத்தான் குடிக்குமாம். எனவே அது நீர்முகிலினை எதிர்நோக்கியருப்பதாகக் கூறப்படும்.

6 - ராஜ யோக3மு - ராஜ யோகம் - பெரும் பேற்றினைக் குறிக்கும். கோள்களின் குறிப்பிட்ட சேர்க்கைக்கு இந்தப் பெயராகும். அவ்வமயம் பிறந்தவன், பெரும் பெயரும் புகழும் அடைவான் என தமிழ் அகராதி கூறும். அவ்வமயம் பிறந்தவன், அரசனாவான் என்று சம்ஸ்கிருத அகராதி கூறும். – ராஜ யோகம் பற்றி மேற்கொண்டு விவரங்களறிய.

Top

விளக்கம்
2 - ராஜீவமு - இச்சொல், தாமரை மலரையும், ஒருவித மீனையும் குறிக்கும். பிற சரணங்களில் தியாகராஜர் கூறியவற்றையும் சேர்த்து நோக்குகையில், இவ்விடத்தில், 'மீன்' என்ற பொருளே பொருந்தும். ஏனெனில், நீரில்லாது மீன் உயிர் வாழ இயலாது. தாமரை மலரும் நீரில்லாது வாடிப்போகும். ஆனால் மீன், நீரில்லாது நிமிடமும் உயிர் வாழாது.

3 - ஜீவமுரா - இவ்விடத்தில், 'சீவான்மா' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

7 - நீ மயமே - உன்மயம் - 'தன்மயம்' எனப்படும் வழிபடும் பொருளினில் ஒன்றுதல்

இரவரசன் - மதி

Top


Updated on 25 Dec 2010

No comments: