Sunday, December 26, 2010

தியாகராஜ கிருதி - இந்த தாமஸமைதே - ராகம் ஸாவேரி - Inta Taamasamaite - Raga Saveri

பல்லவி
இந்த தாமஸமைதே எந்தனி
ஸைரிந்து ஏமி ஸேயுது3 ராம

அனுபல்லவி
கந்து ஜனக நன்னு விந்த ஜேஸிதே நின்னு
ஊரந்த நவ்வரா ஸீதா காந்த நனு கருணிம்ப (இ)

சரணம்
சரணம் 1
ராஜீவ லோசன ராஜிதோ ராவேமிரா
ஜீவனமு நீவேரா 1ஜீமூதாப4 தனோ
ராஜீவாஸன ஜனக ராஜில்லு ரகு4 வம்ஸ1
ராஜ ராஜ நீவேரா ஜீவாதா4ர (இ)


சரணம் 2
ஸுந்த3ர மூர்தி நாயந்து33ய ராது3
நேனெந்து3 போது3ரா நீயந்து3 சித்தமு கானி-
2யெந்து3ன்னாவோ ராகேந்து3 ஸே12ர நுத
நீகெந்து3 அனுமானமிந்து3 வத3ன (இ)


சரணம் 3
கௌ3ரவமேதி3 ஸ்1ரு2ங்கா3ர வாரிதே4
ப்3ரோவக3 ராதா3 பாவனு காராதா3 முனி ஹ்ரு23-
யாகா3ர ப்ரத்யக்ஷமு காராதா3யிக முத்3து3
கார த்யாக3ராஜுனி கா3ரவிம்ப (இ)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • காமன் தந்தையே! சீதை மணாளா!
  • கமலக்கண்ணா! பரிதி நிகருடலோனே! மலரோனை யீன்றோனே! திகழும் இரகு குல பேரரசே!
  • அழகிய உருவோனே! பிறைசூடி போற்றுவோனே! மதி வதனனே!
  • வனப்புக் கடலே! முனிவருள்ளத்தில் உறைவோனே!

  • இத்தனைத் தாமதமானால் எவ்வளவென்று பொறுப்பேன்?
  • ஏது செய்வேன்?

    • என்னை அயலாக்கினால், உன்னை ஊரெல்லாம் நகைக்காதா?

    • இணங்கி வாராயேனய்யா?
    • (எனது) வாழ்க்கை நீயேய்யா!
    • நீயேயய்யா வாழ்வின் அடிப்படை!

    • என்னிடம் கருணை வாராது; நான் எங்கு செல்வேனய்யா?
    • உன்னிடம் எனது சித்தம்; ஆயின், எங்குள்ளாயோ, வாராது?
    • உனக்கு எதனில் ஐயம்?

    • கௌரவமென்ன?
    • காக்கலாகாதா?
    • புனிதனாக்கக் கூடாதா?
    • கண்ணெதிரில் வரக் கூடாதா இன்னமும், எழில் வழிய?


  • இத்தியாகராசனிடம் கனிவு கொள்ள, கருணிக்க, இத்தனைத் தாமதமானால் எவ்வளவென்று பொறுப்பேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ தாமஸமு/-ஐதே/ எந்த/-அனி/
இத்தனை/ தாமதம்/ ஆனால்/ எவ்வளவு/ என்று/

ஸைரிந்து/ ஏமி/ ஸேயுது3/ ராம/
பொறுப்பேன்/ ஏது/ செய்வேன்/ இராமா/


அனுபல்லவி
கந்து/ ஜனக/ நன்னு/ விந்த/ ஜேஸிதே/ நின்னு/
காமன்/ தந்தையே/ என்னை/ அயல்/ ஆக்கினால்/ உன்னை/

ஊரந்த/ நவ்வரா/ ஸீதா/ காந்த/ நனு/ கருணிம்ப/ (இ)
ஊரெல்லாம்/ நகைக்காதா/ சீதை/ மணாளா/ என்னை/ கருணிக்க/ இத்தனை....


சரணம்
சரணம் 1
ராஜீவ/ லோசன/ ராஜிதோ/ ராவு/-ஏமிரா/
கமல/ கண்ணா/ இணங்கி/ வாராய்/ ஏனய்யா/

ஜீவனமு/ நீவேரா/ ஜீமூத/-ஆப4/ தனோ/
(எனது) வாழ்க்கை/ நீயேய்யா/ பரிதி/ நிகர்/ உடலோனே/

ராஜீவ-ஆஸன/ ஜனக/ ராஜில்லு/ ரகு4/ வம்ஸ1/
மலரோனை/ யீன்றோனே/ திகழும்/ இரகு/ குல/

ராஜ ராஜ/ நீவேரா/ ஜீவ/-ஆதா4ர/ (இ)
பேரரசே/ நீயேயய்யா/ வாழ்வின்/ அடிப்படை/


சரணம் 2
ஸுந்த3ர/ மூர்தி/ நா-அந்து3/ த3ய/ ராது3/
அழகிய/ உருவோனே/ என்னிடம்/ கருணை/ வாராது/

நேனு/-எந்து3/ போது3ரா/ நீ-அந்து3/ சித்தமு/ கானி/-
நான்/ எங்கு/ செல்வேனய்யா/ உன்னிடம்/ (எனது) சித்தம்/ ஆயின்/

எந்து3/-உன்னாவோ/ ராக/-இந்து3/ ஸே12ர/ நுத/
எங்கு/ உள்ளாயோ/ வாராது/ பிறை/ சூடி/ போற்றும்/

நீகு/-எந்து3/ அனுமானமு/-இந்து3/ வத3ன/ (இ)
உனக்கு/ எதனில்/ ஐயம்/ மதி/ வதனனே/


சரணம் 3
கௌ3ரவமு/-ஏதி3/ ஸ்1ரு2ங்கா3ர/ வாரிதே4/
கௌரவம்/ என்ன/ வனப்பு/ கடலே/

ப்3ரோவக3 ராதா3/ பாவனு/ காராதா3/ முனி/ ஹ்ரு23ய/-
காக்கலாகாதா/ புனிதன்/ ஆக்கக் கூடாதா/ முனிவர்/ உள்ளத்தில்/

ஆகா3ர/ ப்ரத்யக்ஷமு/ காராதா3/-இக/ முத்3து3/
உறைவோனே/ கண்ணெதிரில்/ வரக் கூடாதா/ இன்னமும்/ எழில்/

கார/ த்யாக3ராஜுனி/ கா3ரவிம்ப/ (இ)
வழிய/ (இத்)தியாகராசனிடம்/ கனிவு கொள்ள/ இத்தனை....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஜீமூதாப4 தனோ - 'ஜீமூத' என்ற சொல்லுக்கு 'முகில்' என்றும் 'பரிதி' என்றும் பொருள்களுண்டு. இவ்விடத்தில், 'பரிதி நிகர் உடலோனே' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், சில புத்தகங்களில், 'முகில் நிகர் உடலோனே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

2 - எந்து3ன்னாவோ ராகேந்து3 ஸே12ர நுத - இதனை 'எந்து3ன்னாவோ + ராகா இந்து3 ஸே12ர' என்று பிரித்து, 'ராகா' என்ற சொல்லுடன் 'இந்து3' என்பதனை இணைத்து, 'ராகேந்து3' - 'முழுமதி' என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விடத்தில், இது, பிறையணியும் சிவனைக் குறிப்பதனால், 'முழுமதி யணியும் சிவன்' என்று கூறுவது பொருந்தாதாகையால், 'ராக' என்ற சொல்லினை 'எந்து3ன்னாவோ' என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.

பிறைசூடி - சிவன்

Top


Updated on 27 Dec 2010

No comments: