Monday, December 13, 2010

தியாகராஜ கிருதி - ராகா ஸ1ஸி1 வத3ன - ராகம் டக்க - Raakaa Sasi Vadana - Raga Takka

பல்லவி
ராகா ஸ1ஸி1 வத3ன இங்க பராகா

அனுபல்லவி
நீகா கு3ணமு காராத3வனீ
காந்த கருணா ஸ்வாந்த (ரா)

சரணம்
சரணம் 1
நம்மியுன்ன நிஜ தா3ஸுலகு
நம்மிகலனொஸகி3 1மரதுரா
தம்மி கனுலனொக பாரி நனு
13ய ஜூட3 ராதா3 1மரியாதா3 (ரா)


சரணம் 2
பாரி பாரி நின்னனுதி3னமு
கோரி கோரின வாரினியீ
தா3ரி ப்3ரோசிதிவா 1மாயா
தா4ரி 1ராரா1யேலுகோரா (ரா)


சரணம் 3
நீவே தெலுஸுகொந்து3வனுசுனு
பா4விஞ்சுசுனு நேனு நீ பத3
ஸேவ ஜேஸிதி மாஹானு-
பா4வ த்யாக3ராஜுனிபை (ரா)


பொருள் - சுருக்கம்
  • முழுமதி வதனனே!
  • புவிமகள் மணாளா! கருணை யுள்ளத்தோனே!
  • மாயையின் ஆதாரமே!
  • பெருந்தகையே!

  • இன்னமும் அசட்டையா?
  • உனக்கு அந்த குணம் கூடாதய்யா,
    • நம்பியுள்ள உண்மைத் தொண்டர்களுக்கு, நம்பிக்கையூட்டி (பின்) மறப்பரோ?
    • கமலக்கண்களாலொரு முறை என்னைக் கருணிக்கலாகாதா? மரியாதையோ?

    • திரும்பத்திரும்ப உன்னை அன்றாடம் விரும்பி வேண்டியவர்களை இந்த விதமாகக் காத்தாயோ?
    • வாருமைய்யா! ஆளுமைய்யா!

    • நீயே தெரிந்துகொள்வாயென்று கருதிக் கொண்டு, நான் நினது திருவடிச் சேவை செய்தேன்.


  • தியாகராசனின் மீது இன்னமும் அசட்டையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராகா/ ஸ1ஸி1/ வத3ன/ இங்க/ பராகா/
முழு/ மதி/ வதனனே/ இன்னமும்/ அசட்டையா/


அனுபல்லவி
நீகு/-ஆ/ கு3ணமு/ காராது3/-அவனீ/
உனக்கு/ அந்த/ குணம்/ கூடாதய்யா/ புவிமகள்/

காந்த/ கருணா/ ஸ்வாந்த/ (ரா)
மணாளா/ கருணை/ யுள்ளத்தோனே/


சரணம்
சரணம் 1
நம்மி/-உன்ன/ நிஜ/ தா3ஸுலகு/
நம்பி/ யுள்ள/ உண்மை/ தொண்டர்களுக்கு/

நம்மிகலனு/-ஒஸகி3/ மரதுரா/
நம்பிக்கை/ யூட்டி/ (பின்) மறப்பரோ/

தம்மி/ கனுலனு/-ஒக/ பாரி/ நனு/
கமல/ கண்களால்/ ஒரு/ முறை/ என்னை/

3ய ஜூட3 ராதா3/ மரியாதா3/ (ரா)
கருணிக்கலாகாதா/ மரியாதையோ/


சரணம் 2
பாரி/ பாரி/ நின்னு/-அனுதி3னமு/
திரும்ப/ திரும்ப/ உன்னை/ அன்றாடம்/

கோரி/ கோரின வாரினி/-ஈ/
விரும்பி/ வேண்டியவர்களை/ இந்த/

தா3ரி/ ப்3ரோசிதிவா/ மாயா/
விதமாக/ காத்தாயோ/ மாயையின்/

தா4ரி/ ராரா/-ஏலுகோரா/ (ரா)
ஆதாரமே/ வாருமைய்யா/ ஆளுமைய்யா/


சரணம் 3
நீவே/ தெலுஸுகொந்து3வு/-அனுசுனு/
நீயே/ தெரிந்துகொள்வாய்/ என்று/

பா4விஞ்சுசுனு/ நேனு/ நீ/ பத3/
கருதிக் கொண்டு/ நான்/ நினது/ திருவடி/

ஸேவ/ ஜேஸிதி/ மாஹானுபா4வ/
சேவை/ செய்தேன்/ பெருந்தகையே/

த்யாக3ராஜுனிபை/ (ரா)
தியாகராசனின் மீது/ முழுமதி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மரதுரா - த3ய ஜூட3 ராதா3 - மரியாதா3 - மாயா - ராரா - ஏலுகோரா : மரதுர - த3ய ஜூட3 ராத3 - மரியாத3 - மாய - ரார - ஏலுகோர

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 13 Dec 2010

2 comments:

Govindaswamy said...

அன்புளள கோவிந்தன் அவர்களே
சரணம் ஒன்றில் கனுலனொக பாரி என்பதற்கு கண்களை ஒருமுறை என்றுதானே பொருள்.
கோவிந்தஸ்வாமி

V Govindan said...

திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால், அடுத்து வரும் 'தயஜூட ராதா' என்பதுடன் சேர்த்து நோக்குகையில், 'கண்களை' என்று பொருள் கொண்டால் பொருந்தாது. அதனால்தான் 'கண்களால்' என்று பொருள் கூறினேன்.

வணக்கம்,
கோவிந்தன்