Monday, November 29, 2010

தியாகராஜ கிருதி - எந்த பாபினைதி - ராகம் கௌ3ளிபந்து - Enta Paapinaiti - Raga Gaulipantu - Prahlada Bhakti Vijayam

பல்லவி
எந்த பாபினைதினேமி ஸேயுது3 ஹா
ஏலாகு3 தாளுது3னே ஓ ராம

அனுபல்லவி
அந்த து3:க2முலனு தீர்சு ஹரினி ஜூசி
எந்த வாரைனனு பா3ய ஸஹிந்துரே (எ)

சரணம்
சரணம் 1
மச்சிகதோ தானு முச்சடாடி3 மோஸ
பு3ச்சியேச மதி3 வச்செனோ கடகடா (எ)


சரணம் 2
ஆஸ மிஞ்சி ஆயாஸ பட3னு விதி4
வ்ராஸுனா நா முத்3து3 வேஸுனி கானமே (எ)


சரணம் 3
ஸேவ ஜேயுடே ஜீவனமனியுண்டி
தை3வமா நா பாலி பா4க்3யமிட்லாயெனே (எ)


சரணம் 4
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜு தா பொங்கு3சு
பூஜிஞ்சு ஸ்ரீ ரகு4 ராஜிந்து3 லேனந்து3(கெந்த)


பொருள் - சுருக்கம்

  • எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?

    • அனைத்துத் துயரங்களையும் தீர்க்கும் அரியைக் கண்டு, எப்படிப்பட்டவரும் (அவனைப்) பிரிய சகிப்பரோ?
    • கனிவுடன், தான் உரையாடி, (பிறகு) மோசம் செய்து ஏய்க்க மனது வந்ததோ? ஐயையோ!
    • ஆசை மிகுந்து, அயர்ச்சி யடைய, பிரமன் (தலையில்) எழுதுவானா? எனதினிய வேடத்தோனைக் காணோமே!
    • சேவை செய்வதுவே பிழைப்பென இருந்தேன்; என்பங்கிற் பேறு இப்படியானதே!


  • திகழும் தியாகராஜன், தான் பேருவகையுடன் தொழும் ரகுராஜன் இங்கு இல்லாததற்கு, எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ பாபி/-ஐதினி/-ஏமி/ ஸேயுது3/ ஹா/
எத்தனை/ பாவி/ யானேன்/ என்/ செய்வேன்/ ஐயகோ/

ஏலாகு3/ தாளுது3னே/ ஓ ராம/
எவ்விதம்/ தாங்குவேன்/ ஓ இராமா/


அனுபல்லவி
அந்த/ து3:க2முலனு/ தீர்சு/ ஹரினி/ ஜூசி/
அனைத்து/ துயரங்களையும்/ தீர்க்கும்/ அரியை/ கண்டு/

எந்த வாரைனனு/ பா3ய/ ஸஹிந்துரே/ (எ)
எப்படிப்பட்டவரும்/ (அவனைப்) பிரிய/ சகிப்பரோ/


சரணம்
சரணம் 1
மச்சிகதோ/ தானு/ முச்சட-ஆடி3/ மோஸ/
கனிவுடன்/ தான்/ உரையாடி/ (பிறகு) மோசம்/

பு3ச்சி/-ஏச/ மதி3/ வச்செனோ/ கடகடா/ (எ)
செய்து/ ஏய்க்க/ மனது/ வந்ததோ/ ஐயையோ/


சரணம் 2
ஆஸ/ மிஞ்சி/ ஆயாஸ/ பட3னு/ விதி4/
ஆசை/ மிகுந்து/ அயர்ச்சி/ யடைய/ பிரமன்/ (தலையில்)

வ்ராஸுனா/ நா/ முத்3து3/ வேஸுனி/ கானமே/ (எ)
எழுதுவானா/ எனது/ இனிய/ வேடத்தோனை/ காணோமே/


சரணம் 3
ஸேவ/ ஜேயுடே/ ஜீவனமு/-அனி/-உண்டி/
சேவை/ செய்வதுவே/ பிழைப்பு/ என/ இருந்தேன்/

தை3வமா/ நா/ பாலி/ பா4க்3யமு/-இட்லு/-ஆயெனே/ (எ)
தெய்வமே/ என்/ பங்கிற்/ பேறு/ இப்படி/ யானதே/


சரணம் 4
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ தா/ பொங்கு3சு/
திகழும்/ ஸ்ரீ தியாகராஜன்/ தான்/ பேருவகையுடன்/

பூஜிஞ்சு/ ஸ்ரீ ரகு4 ராஜு/-இந்து3/ லேனி-அந்து3கு/-(எந்த)
தொழும்/ ஸ்ரீ ரகு ராஜன்/ இங்கு/ இல்லாததற்கு/ எத்தனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், பிரகலாதன் அரியை மறுபடியும் காண முறையிடுவதாக

Top


Updated on 30 Nov 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன்அவர்களே
சரணம் 3- சுருக்கவுரையிலும் பதவுரையிலும் ‘ஸேவ ஜேயுடே’ என்பதற்கு   ‘சேவை செய்துவே’ என்று பொருள் கொடுத்துள்ளீர். இது “சேவை செய்வதுவே” என்று இருக்கவேண்டும்.
 சரணம் 4- என்பங்கிற் பேறு இப்படியானதே! - என்னுடைய/என்னிடத்தைய என்பதுசரியாகுமா.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தவற்றினைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

எனக்குத் தெரிந்தவரையில் 'என்பங்கிற் பேறு' என்பதற்கும் 'என்னுடைய பங்கிற் பேறு' என்பதற்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

வணக்கம்,
வே கோவிந்தன்