Sunday, November 28, 2010

தியாகராஜ கிருதி - து3டு3கு க3ல - ராகம் கௌ3ள - Duduku Gala - Raga Gaula - Pancharatna Kriti

பல்லவி
து3டு3கு க31நன்னே தொ3
கொடு3கு
ப்3ரோசுரா எந்தோ (து3)

அனுபல்லவி
கடு3 து3ர்விஷயாக்ரு2ஷ்டுடை3
3டி3ய க3டி3யகு நிண்டா3ரு (து3)

சரணம்
ஸ்வர ஸாஹித்ய 1
ஸ்ரீ வனிதா ஹ்ரு2த்குமுதா3ப்3
அவாங்-மானஸ கோ3சர (து3)


ஸ்வர ஸாஹித்ய 2
ஸகல பூ4தமுலயந்து3 நீவை-
யுண்ட33 மதி லேக போயின (து3)


ஸ்வர ஸாஹித்ய 3
சிருத ப்ராயமு நாடே34ஜனாம்ரு2
ரஸ விஹீன கு-தர்குடை3ன (து3)


ஸ்வர ஸாஹித்ய 4
பர த4னமுல கொரகுனொருல 2மதி3
கரக3
பலிகி கடு3பு நிம்ப திரிகி3னட்டி (து3)


ஸ்வர ஸாஹித்ய 5
தன மதி3னி பு4வினி ஸௌக்2யபு ஜீவனமே-
யனுசு ஸதா3 தி3னமுலு க3டி3பே (து3)


ஸ்வர ஸாஹித்ய 6
தெலியனி நட-விட 3க்ஷுத்3ருலு வனிதலு
ஸ்வ-வஸ1மௌடகுபதே3ஸி1ஞ்சி
ஸந்தஸில்லி ஸ்வர லயம்பு3லெருங்க3கனு
4ஸி1லாத்முலை ஸு-ப4க்துலகு ஸமானமனு (து3)


ஸ்வர ஸாஹித்ய 7
த்3ரு2ஷ்டிகி ஸாரம்ப3கு3 லலனா
ஸத3னார்ப4க ஸேனாமித த4னாது3லனு
5தே3வ தே3 நெர நம்மிதினி கா3கனு
பதா3ப்3ஜ ப4ஜனம்பு3 மரசின (து3)


ஸ்வர ஸாஹித்ய 8
சக்கனி முக2 கமலம்பு3னு ஸதா3
நா மதி3லோ ஸ்மரண லேகனே
து3ர்மதா3ந்த4 ஜனுல கோரி பரிதாப-
முலசே தகி3லி நொகி3லி து3ர்விஷய
து3ராஸலனு ரோய லேக ஸதத-
மபராதி4னை சபல சித்துடை3ன (து3)


ஸ்வர ஸாஹித்ய 9
மானவ தனு து3ர்லப4மனுசுனெஞ்சி
பரமானந்த3மொந்த3 லேக
மத3 மத்ஸர காம லோப4 6மோஹுலகு
தா3ஸுடை3 மோஸ போதி கா3
மொத3டி குலஜுட3கு3சு பு4வினி
ஸூ1த்3ருல பனுலு ஸல்புசுனுயுண்டினி கா3
நராத4முலனு கோரி ஸார ஹீன
மதமுலனு ஸாதி4ம்ப தாருமாரு (து3)


ஸ்வர ஸாஹித்ய 10
ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை
ஸுதுலகை கொன்னாள்ளு த4
ததுலகை திரிகி3தினய்ய
த்யாக3ராஜாப்த இடுவண்டி (து3)


பொருள் - சுருக்கம்
 • இலக்குமியின் இதயக் குமுதத்தின் மதியே! சொல் மற்றும் மனத்திற்கும் புறம்பானவனே!
 • தேவதேவா!
 • தியாகராசனின் நற்றுணையே!

 • எவ்வளவோ துடுக்குத்தனமுள்ள என்னை (வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா?

  • மிக்குத் தீய விடயங்களால் ஈர்க்கப்பட்டவனாகி, நாழிக்கு நாழி நிரம்ப துடுக்குத்தனமுள்ள என்னை,

  • பூதங்கள் (சீவன்கள்) அனைத்திலும் நீயாக இருக்க, அறிவுகெட்டுப் போன என்னை,

  • சிறுவயது முதலே (உனது) பஜனை அமிழ்தச் சாற்றினைப்பருகாத, குதர்க்கியான என்னை,

  • பிறர் செல்வத்திற்காக, அவருள்ளம் நெகிழப் பேசி, வயிற்றை நிரப்பத் திரிந்த, அத்தகைய என்னை,

  • தனது மனத்தில், புவியினில் சுகமான வாழ்க்கையே (பெரிது) என்று, எவ்வமயமும் நாட்களைக் கழிக்கும் என்னை,

  • அறியாத அற்ப நடனமாதர், வனிதையர் தன்வயப்படுதற்கு உபதேசித்து, களிப்புற்று,
  • சுரம், லயங்களறியாது, கல்நெஞ்சனாகி, (தன்னை) நற்றொண்டருக்கு ஈடெனும் என்னை,

  • பார்வைக்கு இனிய மனைவி, இல்லம், மக்கட்படை, மிக்குச் செல்வம் ஆகியவற்றை, மிக்கு நம்பினேனேயன்றி,
  • (உனது) திருவடித் தாமரையின் பஜனையினை மறந்த என்னை,

  • (உனது) எழிலான முகத்தாமரையினை, எவ்வமயமும் எனது மனத்தில் நினைவு கூறாது,
  • தீய செருக்கெனும் குருட்டு மாந்தரைக் கோரி, பரிதாபங்களினில் சிக்கி, துயருற்று,
  • தீய விடயங்கள், மற்றும் தீய ஆசைகளை வெறுக்காது,
  • என்றென்றைக்கும் குற்றவாளியாகி, நிலையற்ற மனத்தினனாகிய என்னை,

  • மனிதவுடல் பெறற்கரிது என்றெண்ணி, (அதனைப் பயன்படுத்தி) பேரின்பம் அடையாது,
  • செருக்கு, காழ்ப்பு, ஆசைகள், கருமித்தனம், மோகங்களுக்கு அடிமையாகி, மோசம் போனேனேயன்றி,
  • முதற்குலத்தினனாகப் பிறந்தும், புவியினில் தாழ்ந்தோரின் பணிகள் செய்திருந்தேனேயன்றி,
  • மனிதரில் இழிந்தோரைக் கோரி, சாரமற்ற கோட்பாடுகளினைச் சாதிக்க தாறுமாறான என்னை,

 • (வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா?

  • இல்லாளுகென சில நாட்கள்,
  • சொத்துக்கென, மக்களுக்கென சில நாட்கள்,
  • செல்வம் மற்றும் சுற்றத்தினருக்கென (சில நாட்கள்) திரிந்தேனய்யா!

 • இப்படிப்பட்ட துடுக்குத்தனமுள்ள என்னை, (வேறு) எந்த துரையின் மகன் காப்பானய்யா?பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3டு3கு/ க3ல/ நன்னு/-ஏ/ தொ3ர/
துடுக்குத்தனம்/ உள்ள/ என்னை/ (வேறு) எந்த/ துரையின்/

கொடு3கு/ ப்3ரோசுரா/ எந்தோ/ (து3)
மகன்/ காப்பானய்யா/ எவ்வளவோ/ துடுக்குத்தனமுள்ள...


அனுபல்லவி
கடு3/ து3ர்/-விஷய/-ஆக்ரு2ஷ்டுடை3/
மிக்கு/ தீய/ விடயங்களால்/ ஈர்க்கப்பட்டவனாகி/

3டி3ய/ க3டி3யகு/ நிண்டா3ரு/ (து3)
நாழிக்கு/ நாழி/ நிரம்ப/ துடுக்குத்தனமுள்ள...


சரணம்
ஸ்வர ஸாஹித்ய 1
ஸ்ரீ/ வனிதா/ ஹ்ரு2த்/-குமுத3/-அப்3ஜ/
இலக்குமி/ (வனிதை) யின்/ இதய/ குமுதத்தின்/ மதியே/

(அ)வாங்/-மானஸ/ (அ)கோ3சர/ (து3)
சொல்/ மற்றும்/ மனத்திற்கும்/ புறம்பானவனே/


ஸ்வர ஸாஹித்ய 2
ஸகல/ பூ4தமுல/-அந்து3/ நீவை/-
அனைத்து/ பூதங்களில் (சீவன்களில்)/ நீயாக/

உண்ட33/ மதி/ லேக/ போயின/ (து3)
இருக்க/ அறிவு/ கெட்டு/ போன/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 3
சிருத/ ப்ராயமு/ நாடே3/ ப4ஜன/-அம்ரு2த/
சிறு/ வயது/ முதலே/ (உனது) பஜனை/ அமிழ்த/

ரஸ/ விஹீன/ கு-தர்குடு3-ஐன/ (து3)
சாற்றினை/ (அற்ற) பருகாத/ குதர்க்கியான/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 4
பர/ த4னமுல கொரகு/-ஒருல/ மதி3/
பிறர்/ செல்வத்திற்காக/ அவர் (மற்றவர்)/ உள்ளம்/

கரக3/ பலிகி/ கடு3பு/ நிம்ப/ திரிகி3ன/-அட்டி/ (து3)
நெகிழ/ பேசி/ வயிற்றை/ நிரப்ப/ திரிந்த/ அத்தகைய/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 5
தன/ மதி3னி/ பு4வினி/ ஸௌக்2யபு/ ஜீவனமே/-
தனது/ மனத்தில்/ புவியினில்/ சுகமான/ வாழ்க்கையே/

அனுசு/ ஸதா3/ தி3னமுலு/ க3டி3பே/ (து3)
(பெரிது) என்று/ எவ்வமயமும்/ நாட்களை/ கழிக்கும்/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 6
தெலியனி/ நட/-விட/ க்ஷுத்3ருலு/ வனிதலு/
அறியாத/ நடன/ மாதர்/ அற்ப/ வனிதையர்/

ஸ்வ/-வஸ1மு/-ஔடகு/-உபதே3ஸி1ஞ்சி/
தன்/ வயப்/ படுதற்கு/ உபதேசித்து/

ஸந்தஸில்லி/ ஸ்வர/ லயம்பு3லு/-எருங்க3கனு/
களிப்புற்று/ சுரம்/ லயங்கள்/ அறியாது/

ஸி1லா/-ஆத்முலை/ ஸு-ப4க்துலகு/ ஸமானமு/-அனு/ (து3)
கல்/ நெஞ்சனாகி/ (தன்னை) நற்றொண்டருக்கு/ ஈடு/ எனும்/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 7
த்3ரு2ஷ்டிகி/ ஸாரம்ப3கு3/ லலனா/
பார்வைக்கு/ இனிய/ மனைவி/

ஸத3ன/-அர்ப4க/ ஸேனா/-அமித/ த4ன/-ஆது3லனு/
இல்லம்/ மக்கட்/ படை/, மிக்கு/ செல்வம்/ ஆகியவற்றை/

தே3வ/ தே3வ/ நெர/ நம்மிதினி/ கா3கனு/
தேவ/ தேவா/ மிக்கு/ நம்பினேனே/ யன்றி/

பத3/-அப்3ஜ/ ப4ஜனம்பு3/ மரசின/ (து3)
(உனது) திருவடி/ தாமரையின்/ பஜனையினை/ மறந்த/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 8
சக்கனி/ முக2/ கமலம்பு3னு/ ஸதா3/
(உனது) எழிலான/ முக/ தாமரையினை/ எவ்வமயமும்/

நா/ மதி3லோ/ ஸ்மரண/ லேகனே/
எனது/ மனத்தில்/ நினைவு/ கூறாது/

து3ர்/-மத3/-அந்த4/ ஜனுல/ கோரி/
தீய/ செருக்கெனும்/ குருட்டு/ மாந்தரை/ கோரி/

பரிதாபமுலசே/ தகி3லி/ நொகி3லி/ து3ர்/-விஷய/
பரிதாபங்களினில்/ சிக்கி/ துயருற்று/ தீய/ விடயங்கள்/ (மற்றும்)

து3ராஸலனு/ ரோய லேக/ ஸததமு/
தீய ஆசைகளை/ வெறுக்காது/ என்றென்றைக்கும்/

அபராதி4னை/ சபல/ சித்துடு3/-ஐன/ (து3)
குற்றவாளியாகி/ நிலையற்ற/ மனத்தினன்/ ஆகிய/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 9
மானவ/ தனு/ து3ர்லப4மு/-அனுசுனு/-எஞ்சி/
மனித/ உடல்/ பெறற்கரிது/ என்று/ எண்ணி/

பரம-ஆனந்த3மு/-ஒந்த3 லேக/
(அதனைப் பயன்படுத்தி) பேரின்பம்/ அடையாது/

மத3/ மத்ஸர/ காம/ லோப4/ மோஹுலகு/
செருக்கு/ காழ்ப்பு/ ஆசைகள்/ கருமித்தனம்/ மோகங்களுக்கு/

தா3ஸுடை3/ மோஸ/ போதி/ கா3க/
அடிமையாகி/ மோசம்/ போனேனே/ யன்றி/

மொத3டி/ குலஜுடு3/-அகு3சு/ பு4வினி/
முதற்/ குலத்தினனாக/ இருந்தும் (பிறந்தும்)/, புவியினில்/

ஸூ1த்3ருல/ பனுலு/ ஸல்புசுனு/-உண்டினி/ கா3க/
தாழ்ந்தோரின்/ பணிகள்/ செய்து/ இருந்தேனே/ யன்றி/

நர/-அத4முலனு/ கோரி/ ஸார/ ஹீன/
மனிதரில்/ இழிந்தோரை/ கோரி/ சாரம்/ அற்ற/

மதமுலனு/ ஸாதி4ம்ப/ தாருமாரு/ (து3)
கோட்பாடுகளினை/ சாதிக்க/ தாறுமாறான/ துடுக்குத்தனமுள்ள...


ஸ்வர ஸாஹித்ய 10
ஸதுலகை/ கொன்னாள்ளு/-ஆஸ்திகை/
இல்லாளுகென/ சில நாட்கள்/ சொத்துக்கென/

ஸுதுலகை/ கொன்னாள்ளு/ த4ன/
மக்களுக்கென/ சில நாட்கள்/ செல்வம் (மற்றும்)/

ததுலகை/ திரிகி3தினி/-அய்ய/
சுற்றத்தினருக்கென (சில நாட்கள்)/ திரிந்தேன்/ அய்யா/

த்யாக3ராஜ/-ஆப்த/ இடுவண்டி/ (து3)
தியாகராசனின்/ நற்றுணையே/ இப்படிப்பட்ட/ துடுக்குத்தனமுள்ள...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மதி3 கரக3 - மதி3னி கரக3 : இவ்விடத்தில் 'மதி3 கரக3' என்பதே பொருந்தும்.

3 - க்ஷுத்3ருலு - ஸூ1த்3ருலு : இவ்விடத்தில் 'க்ஷுத்3ருலு' என்பதே பொருந்தும்.

4 - ஸி1லாத்முலை - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இது பன்மையிலுள்ளது. இவ்விடத்தில், ஒருமை - 'ஸி1லாத்முடை3' என்றிருக்கவேண்டும்.

5 - தே3வ தே3 - தே3வாதி3 தே3வ.

6 - மோஹுலகு - மோஹமுலகு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஏ தொ3ர கொடு3கு - எந்த துரையின் மகன். இது, மறைமுகமாக, ராமனை, 'தசரத மன்னன் மைந்தா!' என்று அழைப்பதாகும் என்று நான் கருதுகின்றேன்.

விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்
பூதங்கள் நீயாக - வெளித்தோற்றமாகவும், உள்ளியக்கமாகவும்
குதர்க்கி - விதண்டா வாதம் செய்பவன்
முதற்குலத்தினன் - அந்தணர்

Top


Updated on 29 Nov 2010

No comments: