ராமாபி4ராம மனஸு ரஞ்ஜில்ல பல்க ராதா3
அனுபல்லவி
1ஈ மஹினி வெலஸினதே3மி ஸதா3 நாதோ (ரா)
சரணம்
ப3ங்கா3ரு மேடி பான்புபை பா4மா மணி 2ஜானகி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி 3செலுவொந்த3 நின்னு கனி
பொங்கு3சு மல்லெ விருல பூஜிஞ்சு வேள ஸ்ரீ ஹரி
ஸங்கீ3தமு 4பாடு3மனி ஸ்வாமி த்யாக3ராஜுனிதோ (ரா)
பொருள் - சுருக்கம்
இராமா! களிப்பூட்டுவோனே! அரியே! இறைவா!
- மனது மகிழப் பேசலாகாதா?
- இப்புவியில் (நான்) புகழ்பெற்றென்ன? (அல்லது) இப்புவியில் தாங்கள் திகழ்ந்தென்ன?
- உயர் பொன் மஞ்சத்தின்மீது, (உனது) சிறந்த இல்லாள், சானகி,
- அலங்கரித்துக்கொண்டு, காதலுடன், உன்னை நோக்கி,
- பெருமிதத்துடன், மல்லிகைப் பூக்களால் தொழும் வேளை,
- உயர் பொன் மஞ்சத்தின்மீது, (உனது) சிறந்த இல்லாள், சானகி,
- 'சங்கீதம் பாடு' எனத் தியாகராசனிடம் மனது மகிழக் கூறலாகாதா?
- எப்பொழுதும், என்னுடன், மனது மகிழப் பேசலாகாதா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ மனஸு/ ரஞ்ஜில்ல/ பல்க ராதா3/
இராமா/ களிப்பூட்டுவோனே/ மனது/ மகிழ/ பேசலாகாதா/
அனுபல்லவி
ஈ/ மஹினி/ வெலஸினதி3/-ஏமி/ ஸதா3/ நாதோ/ (ரா)
இந்த/ புவியில்/ (நான்) புகழ்பெற்று (தாங்கள்) (திகழ்ந்து)/ என்ன/ எப்பொழுதும்/ என்னுடன்/ இராமா...
சரணம்
ப3ங்கா3ரு/ மேடி/ பான்புபை/ பா4மா/ மணி/ ஜானகி/
பொன்/ உயர்/ மஞ்சத்தின்மீது/ (உனது) இல்லாள்/ சிறந்த/ சானகி/
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி/ செலுவொந்த3/ நின்னு/ கனி/
அலங்கரித்துக்கொண்டு/ காதலுடன்/ உன்னை/ நோக்கி/
பொங்கு3சு/ மல்லெ/ விருல/ பூஜிஞ்சு/ வேள/ ஸ்ரீ ஹரி/
பெருமிதத்துடன்/ மல்லிகை/ பூக்களால்/ தொழும்/ வேளை/ ஸ்ரீ ஹரி/
ஸங்கீ3தமு/ பாடு3மு/-அனி/ ஸ்வாமி/ த்யாக3ராஜுனிதோ/ (ரா)
'சங்கீதம்/ பாடு/' என/ இறைவா/ தியாகராசனிடம்/ இராமா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஜானகி - ஸ்ரீ ஜானகி.
3 - செலுவொந்த3 - செலுவொந்த3க3.
4 - பாடு3மனி ஸ்வாமி - பாடு3மனு ஸாமி : 'பாடு3மனி' என்ற சொல்லினால், சரணத்தினை பல்லவியுடன் இணைக்கலாம். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஈ மஹினி வெலஸினதே3மி - புத்தகங்களில், இதற்கு 'தாங்கள் புவியில் அவதரித்தென்ன?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தினில், தியாகராஜர், இறைவன் முன்னிலையில் தன்னைப் பாடும்படி உத்திரவிட, இறைவனை வேண்டுகின்றார். அதாவது, தியாகராஜர், மற்றவர்கள் தன் பாடலைக் கேட்டு தன்னை புகழ்வதைக் காட்டிலும், இறைவன் முன்னிலையில், இறைவன் வேண்டுதலுக்கிணங்கி, பாடுவதையே பேறெனக் கருதுகின்றார். எனவே, இதற்கு, 'புவியில் நான் புகழ்பெற்றென்ன?' என்ற பொருள் அதிகம் பொருந்தும். இரண்டு பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
Top
Updated on 19 Oct 2010
No comments:
Post a Comment