Tuesday, October 19, 2010

தியாகராஜ கிருதி - ஸ்1யாம ஸுந்த3ராங்க3 - ராகம் த4ன்யாஸி - Syama Sundaranga - Dhanyasi Raga

பல்லவி
ஸ்1யாம ஸுந்த3ராங்க3 ஸகல 11க்தியு நீவேரா

அனுபல்லவி
2தாமஸ ரஹித கு3ண ஸாந்த்3
4ரனு வெலயு ராமசந்த்3ர (ஸ்1யாம)

சரணம்
து3ஷ்ட த3னுஜ மத3 விதா3ர ஸி1ஷ்ட ஜன ஹ்ரு23ய விஹார
3இஷ்ட தை3வமு நீவேரா இலனு த்யாக3ராஜு வேரா (ஸ்1யாம)


பொருள் - சுருக்கம்
  • கார்வண்ண அழகிய வடிவோனே!
  • தாமத குணமற்ற, நற்பண்புகள் நிறைந்தோனே! புவியில் ஒளிரும் இராமசந்திரா!
  • தீய அவுணர் செருக்கினை அழித்தோனே! அறிஞர் (நல்லொழுக்கத்தோர்) உள்ளத்துறைவோனே!

    • அனைத்து சக்திகளும் நீயே, ஐயா!
    • எனக்குகந்த தெய்வம் நீயே, ஐயா!
    • இங்கு தியாகராசன் (உன்னின்று) வேறா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்1யாம/ ஸுந்த3ர/-அங்க3/ ஸகல/ ஸ1க்தியு/ நீவேரா/
கார்வண்ண/ அழகிய/ வடிவோனே/ அனைத்து/ சக்திகளும்/ நீயே, ஐயா/


அனுபல்லவி
தாமஸ/ ரஹித/ கு3ண/ ஸாந்த்3ர/
தாமத குணம்/ அற்ற/ நற்பண்புகள்/ நிறைந்தோனே/

4ரனு/ வெலயு/ ராமசந்த்3ர/ (ஸ்1யாம)
புவியில்/ ஒளிரும்/ இராமசந்திரா/


சரணம்
து3ஷ்ட/ த3னுஜ/ மத3/ விதா3ர/ ஸி1ஷ்ட ஜன/ ஹ்ரு23ய/ விஹார/
தீய/ அவுணர்/ செருக்கினை/ அழித்தோனே/ அறிஞர் (நல்லொழுக்கத்தோர்)/ உள்ளத்து/ உறைவோனே/

இஷ்ட/ தை3வமு/ நீவேரா/ இலனு/ த்யாக3ராஜு/ வேரா/ (ஸ்1யாம)
(எனக்கு) உகந்த/ தெய்வம்/ நீயே, ஐயா/ இங்கு/ தியாகராசன்/ (உன்னின்று) வேறா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - தாமஸ ரஹித - தாமத குணம் - முக்குணங்களிலொன்று - இருள்வழி - கடவுள் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். ஆயினும், இவ்விடத்தில், இச்சொல், விசுவாமித்திரர், இராமனுக்கும், இலக்குவனுக்கும் உபதேசித்த, தூக்கம், பசி, தாகம் ஆகிய தாமத குணங்களை வெல்லும் வல்லமை படைத்த, 'ப3லை', 'அதிப3லை' என்ற மந்திரங்களைக் குறிப்பிடலாம். வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 22 நோக்கவும்.

Top

விளக்கம்
1 - 1க்தியு - சக்திகள் - தெய்வங்களைக் குறிக்கும். தியாகராஜர், இராமனைத் தன் மனதுக்குகந்த தெய்வமாக வழிபட்டாலும், தெய்வங்கள் யாவும், உருவற்ற, பரம்பொருளின் வடிவே என்று அவர் உறுதியாக நம்பியது, அவருடைய பல கீர்த்தனைகளினின்றும் தெரியவருகின்றது.

3 - இஷ்ட தை3வமு - மனதுக்குகந்த தெய்வம். ஒவ்வொருவரும், அவரவர் மனப்பாங்கிற்பேற்ப, குடும்ப வழிமுறைக் கேற்ப, தமது மனதுக்குகந்த தெய்வ வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்கின்றனர். அங்ஙனம், தியாகராஜரின் மனதுக்குகந்த தெய்வம் இராமன்.

Top


Updated on 20 Oct 2010

No comments: