Sunday, October 17, 2010

தியாகராஜ கிருதி - ஜானகீ நாயக - ராகம் த4ன்யாஸி - Janaki Nayaka - Dhanyasi Raga

பல்லவி
ஜானகீ நாயக நீகு ஜய மங்க3ளம் ந்ரு2
1ஸூனு ஸுந்த3ரமுனகு ஸு14 மங்க3ளம் 2ஹரே (ஜா)

சரணம்
சரணம் 1
பா2லமுனகு நீது3 கபோலமுனகு மங்க3ளம்
நீல வர்ண நீ பலு வஜ்ராலமுனகு மங்க3ளம் (ஜா)


சரணம் 2
யௌவனமுனகு சிரு நவ்வுனகு மங்க3ளம்
து3வ்வினயலகல மீதி3 புவ்வுலகு மங்க3ளம் (ஜா)


சரணம் 3
மாடலகு ரத்னால கிரீடமுனகு மங்க3ளம்
நாடக ஸூத்ர தா4ர நீ தேட கண்ட்3லகு மங்க3ளம் (ஜா)


சரணம் 4
பா3ணமுனகு குஸும பா3ண ஜனக மங்க3ளம்
ஜாண தனமுனகு லோக த்ராணமுனகு மங்க3ளம் (ஜா)


சரணம் 5
உங்க3ரமுனகு நீ த்3ரு2ஷ்டாங்க3முனகு மங்க3ளம்
பொங்கு3சு பத3முலனுண்டு33ங்க3குனு மங்க3ளம் (ஜா)


சரணம் 6
நீ கு3ண ஜாலமுனகு நித்ய ஸு14 மங்க3ளம்
நாக31யன பாலித த்யாக3ராஜ மங்க3ளம் (ஜா)


பொருள் - சுருக்கம்
  • நீல வண்ணா!
  • (உலக) நாடக சூத்திரதாரி!
  • மலர் வில்லோனை ஈன்றோனே!
  • அரவணையோனே! தியாகராசனைப் பேணுவோனே!

  • ஓ ஜானகி மணாளா! உனக்கு ஜய மங்களம்!
  • (தசரத) மன்னன் மகனின் எழிலுக்கு சுப மங்களம்!

    • நெற்றிக்கு, உனது கன்னங்களுக்கு மங்களம்!
    • உனது பற்கள் வைரங்களுக்கு மங்களம்!

    • இளமைக்கு, புன்னகைக்கு மங்களம்!
    • வாரிய சுருளல்கள் மீதான மலர்களுக்கு மங்களம்!

    • சொற்களுக்கு, இரத்தின மகுடத்திற்கு மங்களம்!
    • உனது தெளிந்த கண்களுக்கு மங்களம்!

    • அம்புகளுக்கு மங்களம்!
    • அறிவுக் கூர்மைக்கு, உலகைக் காக்கும் திறனுக்கு மங்களம்!

    • கணையாழிக்கு, உனது புலப்படும் உறுப்புகளுக்கு மங்களம்!
    • களித்து, உனது திருவடியிலுள்ள கங்கைக்கும் மங்களம்!


  • உனது பண்புக் குவியலுக்கு என்றென்றும் நன்மங்களம்!

  • ஓ ஜானகி மணாளா! உனக்கு ஜய மங்களம்!
  • (தசரத) மன்னன் மகனின் எழிலுக்கு சுப மங்களம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜானகீ/ நாயக/ நீகு/ ஜய/ மங்க3ளம்/ ந்ரு2ப/
ஜானகி/ மணாளா/ உனக்கு/ ஜய/ மங்களம்/ (தசரத) மன்னன்/

ஸூனு/ ஸுந்த3ரமுனகு/ ஸு14/ மங்க3ளம்/ ஹரே/ (ஜா)
மகனின்/ எழிலுக்கு/ சுப/ மங்களம்/ ஓ/ ஜானகி...


சரணம்
சரணம் 1
பா2லமுனகு/ நீது3/ கபோலமுனகு/ மங்க3ளம்/
நெற்றிக்கு/ உனது/ கன்னங்களுக்கு/ மங்களம்/

நீல/ வர்ண/ நீ/ பலு/ வஜ்ராலமுனகு/ மங்க3ளம்/ (ஜா)
நீல/ வண்ணா/ உனது/ பற்கள்/ வைரங்களுக்கு/ மங்களம்/


சரணம் 2
யௌவனமுனகு/ சிரு நவ்வுனகு/ மங்க3ளம்/
இளமைக்கு/ புன்னகைக்கு/ மங்களம்/

து3வ்வின/-அலகல/ மீதி3/ புவ்வுலகு/ மங்க3ளம்/ (ஜா)
வாரிய/ சுருளல்கள்/ மீதான/ மலர்களுக்கு/ மங்களம்/


சரணம் 3
மாடலகு/ ரத்னால/ கிரீடமுனகு/ மங்க3ளம்/
சொற்களுக்கு/ இரத்தின/ மகுடத்திற்கு/ மங்களம்/

நாடக/ ஸூத்ர/ தா4ர/ நீ/ தேட/ கண்ட்3லகு/ மங்க3ளம்/ (ஜா)
(உலக) நாடக/ சூத்திர/ தாரி/ உனது/ தெளிந்த/ கண்களுக்கு/ மங்களம்!


சரணம் 4
பா3ணமுனகு/ குஸும/ பா3ண/ ஜனக/ மங்க3ளம்/
அம்புகளுக்கு/ மலர்/ வில்லோனை/ ஈன்றோனே/ மங்களம்/

ஜாண தனமுனகு/ லோக/ த்ராணமுனகு/ மங்க3ளம்/ (ஜா)
அறிவுக் கூர்மைக்கு/ உலகை/ காக்கும் திறனுக்கு/ மங்களம்/


சரணம் 5
உங்க3ரமுனகு/ நீ/ த்3ரு2ஷ்ட/-அங்க3முனகு/ மங்க3ளம்/
கணையாழிக்கு/ உனது/ புலப்படும்/ உறுப்புகளுக்கு/ மங்களம்/

பொங்கு3சு/ பத3முலனு/-உண்டு3/ க3ங்க3குனு/ மங்க3ளம்/ (ஜா)
களித்து/ உனது/ திருவடியில்/ உள்ள/ கங்கைக்கும்/ மங்களம்/


சரணம் 6
நீ/ கு3ண/ ஜாலமுனகு/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
உனது/ பண்பு/ குவியலுக்கு/ என்றென்றும்/ நன்/ மங்களம்/

நாக3/ ஸ1யன/ பாலித/ த்யாக3ராஜ/ மங்க3ளம்/ (ஜா)
அரவு/ அணையோனே/ பேணுவோனே/ தியாகராசனை/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸூனு - ஸூன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஹரே - இச்சொல், 'ஓ' என்று விளிப்பதாகும். ஆனால், இச்சொல்லுக்கு 'அரியே' என்றும் பொருள் கொள்ளலாம்.

நாடக சூத்திரதாரி - உலகமெனும் நாடகத்தினை இயக்குவோன்

Top


Updated on 17 Oct 2010

No comments: