இதி3 நீகு மேர 1காது3ரா ஸ்ரீ ராம நா
மதி3 2தல்லடி3ல்லெனுரா
அனுபல்லவி
3பதி3லமுகா3 கொலிசிதே
பா4வமு வேரையுன்னதி3 (இ)
சரணம்
சரணம் 1
க3தி லேனி வாரினி கட3 தேர்சு தை3வமனி
பதித பாவன நம்மிதி ஸ்ரீ ராம
நின்னதி வேக3முன வேடி3தி ஸந்ததமு
ஸம்மதினி நின்னே 4கோரிதி ஸீதா ராம (இ)
சரணம் 2
பரம த3யாளுவனி பாலன ஸேதுவனி
ஸரகு3ன தே3வ ராய கொலிசின நாபை
கருண லேத3னி கன்னீராயெ ஜூசி நீ மனஸு
கரக3தெ3ந்து3குரா ஓ ஸீதா ராம (இ)
சரணம் 3
அன்னிட நிண்டி3ன அத்3பு4தானந்த3 க4ன
மன்னன ஸேய ராதா3 ஸ்ரீ ராம
நீகென்ன ரானி 5புண்யமு ராதா3 ஸ்ரீ த்யாக3ராஜ
ஸன்னுத நீவாட3னு காதா3 6ஸீதா ராம (இ)
பொருள் - சுருக்கம்
- இராமா!
- வீழ்ந்தோரை மீட்போனே! சீதாராமா!
- வானோர் தலைவா!
- அனைத்திலும் நிறை, வியத்தகு ஆனந்த வடிவே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- இது உனக்குத் தகாதய்யா.
- எனது உள்ளம் தத்தளிக்கின்றதய்யா.
- தவறாது, (உன்னை) சேவித்தால், (உனது) நோக்கம் வேறாயுள்ளது.
- போக்கற்றோரைக் கடைத்தேற்றும் தெய்வமென நம்பினேன்.
- உன்னை வெகு ஊக்கத்துடன் வேண்டினேன்.
- எப்போதும் முழு மனதுடன் உன்னையே கோரினேன்.
- பரம தயாளனென, (என்னைப்) பேணுவாயென, தீவிரமாகச் சேவித்த என் மீது கருணையில்லையென, கண்ணீருகுத்தேன்.
- கண்டும் உனதுள்ளம் உருகாததேனய்யா?
- (என்னிடம்) ஈரங் கொள்ளலாகாதா?
- உனக்கு எண்ணற்ற புண்ணியம் சேராதா?
- உன்னவனன்றோ?
- தவறாது, (உன்னை) சேவித்தால், (உனது) நோக்கம் வேறாயுள்ளது.
- இது உனக்குத் தகாதய்யா.
- எனது உள்ளம் தத்தளிக்கின்றதய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதி3/ நீகு/ மேர காது3ரா/ ஸ்ரீ ராம/ நா/
இது/ உனக்கு/ தகாதய்யா/ ஸ்ரீ ராமா/ எனது/
மதி3/ தல்லடி3ல்லெனுரா/
உள்ளம்/ தத்தளிக்கின்றதய்யா/
அனுபல்லவி
பதி3லமுகா3/ கொலிசிதே/
தவறாது/ (உன்னை) சேவித்தால்/
பா4வமு/ வேரை/-உன்னதி3/ (இ)/
(உனது) நோக்கம்/ வேறாக/ உள்ளது/
சரணம்
சரணம் 1
க3தி/ லேனி வாரினி/ கட3/ தேர்சு/ தை3வமு/-அனி/
போக்கு/ அற்றோரை/ கடை/ தேற்றும்/ தெய்வம்/ என/
பதித/ பாவன/ நம்மிதி/ ஸ்ரீ ராம/
வீழ்ந்தோரை/ மீட்போனே/ நம்பினேன்/ ஸ்ரீ ராமா/
நின்னு/-அதி/ வேக3முன/ வேடி3தி/ ஸந்ததமு/
உன்னை/ வெகு/ ஊக்கத்துடன்/ வேண்டினேன்/ எப்போதும்/
ஸம்மதினி/ நின்னே/ கோரிதி/ ஸீதா ராம/ (இ)
முழு மனதுடன்/ உன்னையே/ கோரினேன்/ சீதாராமா/
சரணம் 2
பரம/ த3யாளுவு/-அனி/ பாலன ஸேதுவு/-அனி/
பரம/ தயாளன்/ என/ (என்னைப்) பேணுவாய்/ என/
ஸரகு3ன/ தே3வ/ ராய/ கொலிசின/ நாபை/
தீவிரமாக/ வானோர்/ தலைவா/ சேவித்த/ என் மீது/
கருண/ லேது3/-அனி/ கன்னீரு/-ஆயெ/ ஜூசி/ நீ/ மனஸு/
கருணை/ இல்லை/ என/ கண்ணீர்/ உகுத்தேன்/ கண்டும்/ உனது/ உள்ளம்/
கரக3து3/-எந்து3குரா/ ஓ ஸீதா ராம/ (இ)
உருகாதது/ ஏனய்யா/ ஒ சீதாராமா/
சரணம் 3
அன்னிட/ நிண்டி3ன/ அத்3பு4த/-ஆனந்த3/ க4ன/
அனைத்திலும்/ நிறை/ வியத்தகு/ ஆனந்த/ வடிவே/
மன்னன ஸேய ராதா3/ ஸ்ரீ ராம/
(என்னிடம்) ஈரங் கொள்ளலாகாதா/ ஸ்ரீ ராமா/
நீகு/-என்ன ரானி/ புண்யமு/ ராதா3/ ஸ்ரீ த்யாக3ராஜ/
உனக்கு/ எண்ணற்ற/ புண்ணியம்/ சேராதா/ ஸ்ரீ தியாகராசனால்/
ஸன்னுத/ நீவாட3னு/ காதா3/ ஸீதா ராம/ (இ)
போற்றப் பெற்றோனே/ உன்னவன்/ அன்றோ/ சீதாராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காது3ரா - காது3ர.
2 - தல்லடி3ல்லெனுரா - தல்லடி3ல்லெனுர.
3 - பதி3லமுகா3 - பதி3லமுக3.
4 - கோரிதி ஸீதா ராம - கோரிதி ஸ்ரீ ராம.
6 - ஸீதா ராம - ஸ்ரீ ராம ஸீதா ராம.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
5 - புண்யமு ராதா3 - புண்ணியம் சேராதா - இறைவன் புண்ணிய, பாவங்களுக்கு அப்பாற்பட்டவனானாலும், ஈகையினால், கொடுப்பவனுக்குப் புண்ணியம் சேரும் என, வேண்டி இரத்தல் வழக்கம்.
ஈரங் கொள்ளலாகாதா - மன்னிக்கலாகாதா என்றும் கொள்ளலாம்.
Top
Updated on 25 Oct 2010
No comments:
Post a Comment