Tuesday, October 26, 2010

தியாகராஜ கிருதி - இந்து3காயீ தனுவுனு - ராகம் புன்னாகவராளி - Indukaayi Tanuvunu - Raga Punnagavarali

பல்லவி
1இந்து3காயீ தனுவுனு ஸாகின(தி3ந்து3)

அனுபல்லவி
இந்து3 முகு2டு3 ராக ஹ்ரு23யமு பகு3லக3-
நந்த3ரிலோ ஜாலி ஜெந்த3னியனி 2அந்த3(ரிந்து3)

சரணம்
சரணம் 1
பாமுலகே மேனு ப3லு க3ட்டிகா3னுண்டெ3-
நேமோ காரணமனி எஞ்சுசுண்டி நே(னிந்து3)


சரணம் 2
மனகேல நெபமனி மன்னிஞ்சிரோ லேக
3தனுவு பெ3ல்லமு காது3 தாளது3 தை3வ(மிந்து3)


சரணம் 3
4நா ஜயமுனு ஜூசி 5நம்மரே தே3வுனி
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ வரது3டு3 தா(னிந்து3)


பொருள் - சுருக்கம்
  • இதற்கா இவ்வுடலை வளர்த்தது?

    • மதி முகத்தோன் வாராது, இதயம் உடைய, அனைவரிடையே துயரடையட்டுமென,

  • எல்லோரும் இதற்கா இவ்வுடலை வளர்த்தது?

    • அரவுகளுக்கே உடல் மிக்கு கெட்டியாக இருந்ததோ?
    • என்னவோ காரணமென எண்ணியிருந்தேன்;

  • நான் இதற்கா இவ்வுடலை வளர்த்தது?

    • நமக்கேன் பழியென மன்னித்தனவோ; அல்லாது
    • உடம்பு வெல்லமல்ல, தாங்காது;

  • கடவுள் இதற்கா இவ்வுடலை வளர்த்தது?

    • எனது வெற்றியினைக் கண்டும், நம்பமாட்டார், கடவுளை;

  • ஒளிரும், தியாகராசனுக்கருள்வோன், தான் இதற்கா இவ்வுடலை வளர்த்தது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கா/-ஈ/ தனுவுனு/ ஸாகினதி3/-(இந்து3)
இதற்கா/ இந்த/ உடலை/ வளர்த்தது/


அனுபல்லவி
இந்து3/ முகு2டு3/ ராக/ ஹ்ரு23யமு/ பகு3லக3னு/-
மதி/ முகத்தோன்/ வாராது/ இதயம்/ உடைய/

அந்த3ரிலோ/ ஜாலி/ ஜெந்த3னி/-அனி/ அந்த3ரு/-(இந்து3)
அனைவரிடையே/ துயர்/ அடையட்டும்/ என/ எல்லோரும்/ இதற்கா...


சரணம்
சரணம் 1
பாமுலகே/ மேனு/ ப3லு/ க3ட்டிகா3னு/-உண்டெ3னோ/-
அரவுகளுக்கே/ உடல்/ மிக்கு/ கெட்டியாக/ இருந்ததோ/

ஏமோ/ காரணமு/-அனி/ எஞ்சுசு/-உண்டி/ நேனு/-(இந்து3)
என்னவோ/ காரணம்/ என/ எண்ணி/ யிருந்தேன்/ நான்/ இதற்கா...


சரணம் 2
மனகு/-ஏல/ நெபமு/-அனி/ மன்னிஞ்சிரோ/ லேக/
நமக்கு/ ஏன்/ பழி/ என/ மன்னித்தனவோ/ அல்லாது/

தனுவு/ பெ3ல்லமு/ காது3/ தாளது3/ தை3வமு/-(இந்து3)
உடம்பு/ வெல்லம்/ அல்ல/ தாங்காது/ கடவுள்/ இதற்கா...


சரணம் 3
நா/ ஜயமுனு/ ஜூசி/ நம்மரே/ தே3வுனி/
எனது/ வெற்றியினை/ கண்டும்/ நம்பமாட்டார்/ கடவுளை/

ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வரது3டு3/ தானு/-(இந்து3)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ தான்/ இதற்கா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - இந்து3கா - இதற்கா? - அரியினைக் காணாது துயரடைவதற்கா?

2 - அந்த3ரிந்து3கா - எல்லோரும் - வருணன் (கடலிலிருந்து காப்பாற்றியது) மற்றும் கருடன் (நாக பாசத்திலிருந்து காப்பாற்றியது).

3 - தனுவு பெ3ல்லமு காது3 - உடல் வெல்லமல்ல - இதன் பொருள் விளங்கவில்லை.

4 - நா ஜயமுனு ஜூசி - அனேகமாக இது பிரகலாதன் கடலிலிருந்து மீட்கப்பட்டதனையும், நாகபாசத்தினின்று விடுபட்டதனையும் குறிக்கலாம்.

5 - நம்மரே தே3வுனி - நம்பமாட்டார் கடவுளை - இரணியகசிபுவைக் குறிக்கும்.

Top

இப்பாடல், பிரகலாதன், அரவுகளிடமிருந்து விடுபட்ட பின்னர், அரியின் தரிசனம் காணக்கிடைக்காது, தன்னையே நொந்து பாடுவதாக.
மதி முகத்தோன் - அரியினைக் குறிக்கும்.
ஒளிரும் - இறைவனைக் குறிக்கும்,
தான் (கடைசி சரணம்) - இறைவனைக்குறிக்கும்.

Top


Updated on 27 Oct 2010

No comments: