ரே மானஸ சிந்தய ஸ்ரீ ராமம்
சரணம்
சரணம் 1
ஸாகேத நக3ர நாது2னி
ஸமான ரஹித மா வருனி (ரே)
சரணம் 2
க3த காம ஜன ஹ்ரு2த3யார்ணவ
1கலா த4ருனி 2இளாதி4புனி (ரே)
சரணம் 3
ப4க்தாக4 பயோ-த4ர
ப்ரப4ஞ்ஜனுனி நிரஞ்ஜனுனி (ரே)
சரணம் 4
3வினதா தனயார்தி தமோ-
விபா4-கருனி 4ஸு1பா4கருனி (ரே)
சரணம் 5
தே3வேஸ1 ஸமாராத்4யுனி
5தி3க3ம்ப3ருனி 6சித3ம்ப3ருனி (ரே)
சரணம் 6
வந்தா3ரு ப்3ரு2ந்தா3ரக
வராப4யது3னி ராக4வுனி (ரே)
சரணம் 7
வர த்யாக3ராஜார்சித
பதா3ம்பு3ஜுனி ஸதா3 ஹிதுனி (ரே)
பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
- சிந்திப்பாய், இராமனை.
- சாகேத நகர நாதனை,
- நிகரற்ற, மா மணாளனை,
- இச்சைகள் அகன்றோரின் இதயக் கடலின் மதியினை,
- புவி மணாளனை,
- தொண்டர்களின் பாவமெனும் நீர்முகிலைக் கலைக்கும் புயலினை,
- களங்கமற்றோனை,
- வினதை மைந்தனின் துயரிருட்டினைப் போக்கும் பகலவனை,
- மங்களத்தின் மூலத்தினை,
- வானோர் தலைவன் சிறக்கத் தொழுவோனை,
- திகம்பரனை,
- சிதம்பரனை,
- வந்திக்கும் வானோருக்கு அபயமருள் மேலோனை,
- இராகவனை,
- தியாகராசன் தொழும் புனிதத் திருவடிக் கமலத்தோனை,
- எவ்வமயமும் நன்மை செய்வோனை,
- சாகேத நகர நாதனை,
- சிந்திப்பாய், இராமனை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரே மானஸ/ சிந்தய/ ஸ்ரீ ராமம்/
ஏ மனமே/ சிந்திப்பாய்/ ஸ்ரீ ராமனை/
சரணம்
சரணம் 1
ஸாகேத/ நக3ர/ நாது2னி/
சாகேத/ நகர/ நாதனை/
ஸமான/ ரஹித/ மா/ வருனி/ (ரே)
நிகர்/ அற்ற/ மா/ மணாளனை/ ஏ மனமே...
சரணம் 2
க3த காம ஜன/ ஹ்ரு2த3ய/-அர்ணவ/
இச்சைகள் அகன்றோரின்/ இதய/ கடலின்/
கலா த4ருனி/ இளா/-அதி4புனி/ (ரே)
மதியினை/ புவி/ மணாளனை/ ஏ மனமே...
சரணம் 3
ப4க்த/-அக4/ பயோ-த4ர/
தொண்டர்களின்/ பாவமெனும்/ நீர்முகிலை/
ப்ரப4ஞ்ஜனுனி/ நிரஞ்ஜனுனி/ (ரே)
(கலைக்கும்) புயலினை/ களங்கமற்றோனை/ ஏ மனமே...
சரணம் 4
வினதா/ தனய/-ஆர்தி/ தமோ/-
வினதை/ மைந்தனின்/ துயர்/ இருட்டினை/
விபா4-கருனி/ ஸு1ப4/-ஆகருனி/ (ரே)
(போக்கும்) பகலவனை/ மங்களத்தின்/ மூலத்தினை/ ஏ மனமே...
சரணம் 5
தே3வ/-ஈஸ1/ ஸமாராத்4யுனி/
வானோர்/ தலைவன்/ சிறக்கத் தொழுவோனை/
தி3க3ம்ப3ருனி/ சித3ம்ப3ருனி/ (ரே)
திகம்பரனை/ சிதம்பரனை/ ஏ மனமே...
சரணம் 6
வந்தா3ரு/ ப்3ரு2ந்தா3ரக/
வந்திக்கும்/ வானோருக்கு/
வர/-அப4யது3னி/ ராக4வுனி/ (ரே)
மேலான/ அபயமருள்வோனை/ இராகவனை/ ஏ மனமே...
சரணம் 7
வர/ த்யாக3ராஜ/-அர்சித/
புனித/ தியாகராசன்/ தொழும்/
பத3/-அம்பு3ஜுனி/ ஸதா3/ ஹிதுனி/ (ரே)
திருவடி/ கமலத்தோனை/ எவ்வமயமும்/ நன்மை செய்வோனை/ ஏ மனமே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - இளா - ‘பூமி அல்லது பூதேவி’ நோக்கவும். மேற்கொண்டு விவரங்களுக்கு, பாகவத புராணம், 9-வது புத்தகம், முதல் அத்தியாயம் நோக்கவும்.
3 - வினதா தனயார்தி - கருடனின் துயர். கருடன், சுபர்ணன் மற்றும் அருணன் ஆகியோர் வினதையின் மைந்தர்கள். பாம்புகளிடம் அடிமையாகிய, தனது தாயார், வினதையினை விடுவிப்பதற்காக, கருடன், அமிழ்து திருடிக்கொண்டு போகையில், இந்திரன், அவன்மீது, தனது வஜ்ராயுதத்தினை ஏவினான். தியாகராஜர், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
Top
கருடனைப் பற்றிய விவரங்கள் (invoke ‘garuDa’).
மகாபாரதத்தில் ஆஸ்திக பருவம், ஆதி பருவத்தில் கருடனைப் பற்றிய அனைத்து விவரங்களும் காணலாம்.
6 - சித3ம்ப3ர - சித்தினை ஆடையாக உடையோன் - 'சிதம்பர நடராஜரைப் பற்றிய விவரங்கள்' நோக்கவும்.
Top
விளக்கம்
1 - கலா த4ர - இது, பிறையணியும் சிவனையும், பிறைகளை உடைய சந்திரனையும் குறிக்கும். இவ்விடத்தில் இது சந்திரனைக் குறிக்கும்.
4 - ஸு1பா4கருனி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லினை 'ஸு1ப4+ஆகருனி' என்று பிரித்து 'மங்களத்தின் மூலம்' என்று பொருள் கொள்ளலாம். சில புத்தகங்களில், இதற்கு, 'மங்கள உருவத்தோன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்ள, இது 'ஸு1ப4+ஆகாருனி' என்றிருக்கவேண்டும்.
5 - தி3க3ம்ப3ர - விண்ணாடையோன் - தியாகராஜர், தமது 'ஸீதா வர' என்ற தேவகாந்தாரி கீர்த்தனையில் இராமனை 'ஆகாஸ1 ஸ1ரீரமு ப்3ரஹ்மமு' அதாவது 'ஆகாயத்தினை உடலாக உடைய பிரமம்' என்று கூறுகின்றார். இது பரம்பொருளின் இலக்கணமாகும்.
Top
வினதை மைந்தன் - கருடன்
திகம்பரன் - விண்ணாடையோன்
சிதம்பரன் - சித்தினை ஆடையாகவுடையோன்
(இவை பரம்பொருளின் இலக்கணங்கள்)
Top
Updated on 19 Sep 2010
No comments:
Post a Comment