ராஜு வெட3லெ ஜூதாமு 1ராரே 2கஸ்தூரி ரங்க3 (ரா)
அனுபல்லவி
3தேஜினெக்கி ஸமஸ்த ராஜுலூடி3க3மு ஸேய
தேஜரில்லு 4நவ ரத்னபு தி3வ்ய பூ4ஷணமுலிடி3 ரங்க3 (ரா)
சரணம்
காவேரீ தீரமுனனு பாவனமகு3 5ரங்க3 புரினி
ஸ்ரீ வெலயு 6சித்ர வீதி4லோ வேட்3கக3 ராக
ஸேவனு கனி ஸுருலு விருலசே ப்ரேமனு பூஜிஞ்சக3
7பா4விஞ்சி த்யாக3ராஜு பாட3க3 வைபோ4க3 ரங்க3 (ரா)
பொருள் - சுருக்கம்
- காண்போம், வாருங்களடி!
- கஸ்தூரிரங்க மன்னன் எழுந்தருளினன்.
- குதிரை மீதேறி,
- அனைத்து அரசர்களும் ஊழியம் செய்ய,
- ஒளிரும் நவரத்தின, தெய்வீக அணிகலன்கள் அணிந்து
- குதிரை மீதேறி,
- அரங்க மன்னன் எழுந்தருளினன்.
- காவேரிக் கரையினில், புனிதமான அரங்க மாநகரினில், திரு விளங்கும் சித்திரை வீதிகளில், வேடிக்கையாக வந்தருள,
- சேவையினைக் கண்டு, வானோர், மலர்களால், காதலுடன் தொழ,
- உள்ளுணர்ந்து தியாகராசன் பாட,
- காவேரிக் கரையினில், புனிதமான அரங்க மாநகரினில், திரு விளங்கும் சித்திரை வீதிகளில், வேடிக்கையாக வந்தருள,
- வைபோக அரங்க மன்னன் எழுந்தருளினன்.
- காண்போம், வாருங்களடி!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராஜு/ வெட3லெ/ ஜூதாமு/ ராரே/ கஸ்தூரி/ ரங்க3/ (ரா)
மன்னன்/ எழுந்தருளினன்/ காண்போம்/ வாருங்களடி/ கஸ்தூரி/ ரங்க/ மன்னன்...
அனுபல்லவி
தேஜினி/-எக்கி/ ஸமஸ்த/ ராஜுலு/-ஊடி3க3மு/ ஸேய/
குதிரை/ மீதேறி/ அனைத்து/ அரசர்களும்/ ஊழியம்/ செய்ய/
தேஜரில்லு/ நவ/ ரத்னபு/ தி3வ்ய/ பூ4ஷணமுலு/-இடி3/ ரங்க3/ (ரா)
ஒளிரும்/ நவ/ ரத்தின/ தெய்வீக/ அணிகலன்கள்/ அணிந்து/ அரங்க/ மன்னன்...
சரணம்
காவேரீ/ தீரமுனனு/ பாவனமகு3/ ரங்க3/ புரினி/
காவேரி/ கரையினில்/ புனிதமான/ அரங்க/ மாநகரினில்/
ஸ்ரீ/ வெலயு/ சித்ர/ வீதி4லோ/ வேட்3கக3/ ராக/
திரு/ விளங்கும்/ சித்திரை/ வீதிகளில்/ வேடிக்கையாக/ வந்தருள/
ஸேவனு/ கனி/ ஸுருலு/ விருலசே/ ப்ரேமனு/ பூஜிஞ்சக3/
சேவையினை/ கண்டு/ வானோர்/ மலர்களால்/ காதலுடன்/ தொழ/
பா4விஞ்சி/ த்யாக3ராஜு/ பாட3க3/ வைபோ4க3/ ரங்க3/ (ரா)
உள்ளுணர்ந்து/ தியாகராசன்/ பாட/ வைபோக/ அரங்க/ மன்னன்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - பா4விஞ்சி - பா4விஞ்சு : இவ்விடத்தில், 'பா4விஞ்சு' என்பது பொருந்தாது என்று கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
2 - கஸ்தூரி ரங்க3 - கஸ்தூரி ரங்கன் - இறைவனுடைய திரு ஆடைகளில், கஸ்தூரி மணம் வீசுவதனால், அப்பெயர் வழங்குகின்றது எனக் கூறப்படும். முகம்மதியர் ஆட்சிக் காலத்தில், அரங்கனின் உற்சவ மூர்த்திகள், மண்ணில், 50 வருடங்களுக்குமேல் புதைந்து கிடந்ததாகவும், கஸ்தூரி மணத்தினால், அந்த மூர்த்திகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேற்படி வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
4 - நவ ரத்ன - நவ ரத்தினங்கள் - முத்து, மாணிக்கம், புஷ்பராகம், வைரம், மரகதம், பவழம், நீலம், கோமேதகம் மற்றும் வைடூரியம்.
Top
5 - ரங்க3 புரி - திருவரங்கத் தல புராணம் மற்றும் தியாகராஜர், அங்கு வந்து இறைவனை வழிபட்டது குறித்தும் காணவும்.
6 - சித்ர வீதி4 - சித்திரை வீதிகள் - கோவிலைச் சுற்றி, இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும், நான்கு பக்க வீதிகளும் 'சித்திரை வீதிகள்' எனப்படும். திருவரங்கத்தின் அமைப்பு (Find – ‘chittirai’)
Top
விளக்கம்
1 - ராரே - வாருங்களடி - இப்பாடலும் மற்ற அரங்கனைப்பற்றிய தியாகராஜரின் பாடல்களும், இறைவனை தலைவனாகவும், தொண்டன் தன்னை தலைவியாகவும் உணர்ந்து, பக்தி செய்யும் 'நாயகி பா4வத்தில்' உள்ளன.
2 - கஸ்தூரி - இது புனுகுவையும், மருந்துச் செடியினையும் குறிக்கும். ஆனால், இவ்விடத்தில் 'புனுகு' என்று பொருள்படும்.
3 - தேஜி - உயர் ரக குதிரை. இவ்விடத்தில் குதிரை வாகனத்தைக் குறிக்கும்.
வைபோகம் - பெரும் சிறப்பு, கொண்டாட்டம்
Top
Updated on 18 Sep 2010
No comments:
Post a Comment