Saturday, September 25, 2010

தியாகராஜ கிருதி - த31ரத2 நந்த3ன - ராகம் அஸாவேரி - Dasaratha Nandana - Raga Asaveri

பல்லவி
31ரத2 நந்த3ன தா3னவ மர்த3
3யயா மாம் பாஹி

சரணம்
சரணம் 1
1சாலுனு மாயா ஜாலமு ஸேய
ஜாலனு
தோயஜாலய ராய (த3)


சரணம் 2
மனஸுன நாரீ-மணுலனு கோரி
2ஜனுலதோ ஜேரி ஜெப்ப நீ தா3ரி (த3)


சரணம் 3
4னிகுனினெஞ்சி தனுவுனு பெஞ்சி
வனிதல காஞ்சி வத3ருது3 3பொஞ்சி (த3)


சரணம் 4
நே பர-தே3ஸி1 நேர்புன கா3ஸி
பா3பவே டா3ஸி பாவனு ஜேஸி (த3)


சரணம் 5
ஸர்வமு நீவு ஸாரெகு ராவு
43ர்வமு லேவு க்3ரக்குன ப்3ரோவு (த3)


சரணம் 6
வலசிதி நீல வர்ண ஸு-ஸீ1
சலமிகனேல ஸ்வாமி நே தாள (த3)


சரணம் 7
ஸாக3ர ஸ1யன ஸாரஸ நயன
த்யாக3ராஜாவன தாரக ஸு-கு3ண (த3)


பொருள் - சுருக்கம்
  • தசரதன் மைந்தா! அரக்கரை யழித்தோனே!
  • மலரோன் மன்னா!
  • நீல வண்ண நற்சீலனே!
  • பாற்கடற்றுயில்வோனே! கமலக்கண்ணா! தியாகராசனைக் காப்போனே! கரையேற்றும் நற்குணத்தோனே!

  • தயவு செய்து என்னைக் காப்பாய்

    • போதுமுனது மாயை;
    • தாமதம் செய்தால் பொறுக்கமாட்டேன்.

    • உள்ளத்தினில் பெண்மணிகளை விழைந்து, (பொது)மக்களுடன் கூடி, உனது நெறி சென்றேனில்லை;
    • செல்வந்தரை அண்டி, உடலை வளர்த்து, வனிதையரை நோக்கி, வீண் வம்பாடினேன்.

    • நான் திறமையற்றவன்;
    • துயரினைத் தீர்ப்பாய், அருகில் வந்து, புனிதனாக்கி.

    • யாவும் நீயே; எவ்வமயமும் வாராய்;
    • செருக்கில்லை (எனக்கு); விரைவில் காப்பாய்;

    • (உன்னை) விரும்பினேன், பிடிவாதமினியும் ஏனோ?
    • நான் பொறுக்கமாட்டேன்;

  • தயவு செய்து என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
31ரத2/ நந்த3ன/ தா3னவ/ மர்த3ன/
தசரதன்/ மைந்தா/ அரக்கரை/ யழித்தோனே/

3யயா/ மாம்/ பாஹி/
தயவு செய்து/ என்னை/ காப்பாய்/


சரணம்
சரணம் 1
சாலுனு/ மாயா/ ஜாலமு/ ஸேய/
போதும்/ (உனது) மாயை/ தாமதம்/ செய்தால்/

ஜாலனு/ தோயஜ-ஆலய/ ராய/ (த3)
பொறுக்கமாட்டேன்/ மலரோன்/ மன்னா/


சரணம் 2
மனஸுன/ நாரீ-மணுலனு/ கோரி/
உள்ளத்தினில்/ பெண்மணிகளை/ விழைந்து/

ஜனுலதோ/ ஜேரி/ ஜெப்ப/ நீ/ தா3ரி/ (த3)
(பொது)மக்களுடன்/ கூடி/ (சொல்லவில்லை) சென்றேனில்லை/ உனது/ நெறி/


சரணம் 3
4னிகுனி/-எஞ்சி/ தனுவுனு/ பெஞ்சி/
செல்வந்தரை/ அண்டி/ உடலை/ வளர்த்து/

வனிதல/ காஞ்சி/ வத3ருது3 பொஞ்சி/ (த3)
வனிதையரை/ நோக்கி/ வீண் வம்பாடினேன்/


சரணம் 4
நே/ பர-தே3ஸி1/ நேர்புன/ கா3ஸி/
நான்/ (அன்னியன்) அற்றவன்/ திறமை/ துயரினை/

பா3பவே/ டா3ஸி/ பாவனு/ ஜேஸி/ (த3)
தீர்ப்பாய்/ அருகில் வந்து/ புனிதன்/ ஆக்கி/


சரணம் 5
ஸர்வமு/ நீவு/ ஸாரெகு/ ராவு/
யாவும்/ நீயே/ எவ்வமயமும்/ வாராய்/

3ர்வமு/ லேவு/ க்3ரக்குன/ ப்3ரோவு/ (த3)
செருக்கு/ இல்லை (எனக்கு)/ விரைவில்/ காப்பாய்/


சரணம் 6
வலசிதி/ நீல/ வர்ண/ ஸு-ஸீ1ல/
(உன்னை) விரும்பினேன்/ நீல/ வண்ண/ நற்சீலனே/

சலமு/-இகனு/-ஏல/ ஸ்வாமி/ நே/ தாள/ (த3)
பிடிவாதம்/ இனியும்/ ஏனோ/ ஐயா/ நான்/ பொறுக்கமாட்டேன்/


சரணம் 7
ஸாக3ர/ ஸ1யன/ ஸாரஸ/ நயன/
(பாற்)கடல்/ துயில்வோனே/ கமல/ கண்ணா/

த்யாக3ராஜ/-அவன/ தாரக/ ஸு-கு3ண/ (த3)
தியாகராசனை/ காப்போனே/ கரையேற்றும்/ நற்குணத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - பொஞ்சி - பொங்கி. இந்த சரணத்தின் எதுகை மோனைகளை நோக்குகையில், 'பொஞ்சி' என்பதே சரியாகப்படுகின்றது. இச்சொல்லுக்கு 'கோள் கேட்டல்' என்று பொருள். அச்சொல், இதற்குமுன் வரும் 'வத3ருது3' (உளறினேன்) என்பதுடன் சேரவில்லை. எனவே, 'வத3ருது3 பொஞ்சி' என்பதற்கு, 'வீண் வம்பாடினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

4 - 3ர்வமு - க3ர்வமுலு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - சாலுனு மாயா ஜாலமு ஸேய ஜாலனு - இதனை 'சாலுனு+மாயா ஜாலமு ஸேய ஜாலனு' என்றோ 'சாலுனு மாயா+ஜாலமு ஸேய ஜாலனு' என்றோ 'சாலுனு மாயா ஜாலமு+ஸேய ஜாலனு' என்றோ பிரிக்கலாம். மூன்றாவதாகக் கூறப்பட்டது சரியில்லை. ஏனென்றால், 'ஸேய ஜாலனு' என்ற சொற்களின் பொருள் நிறைவுறவில்லை. புத்தகங்களில் 'மாயா ஜாலம்' என்பது இறைவனைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே முதலாவதாகக் கூறப்பட்டதுவும் பொருந்தாது. எனவே, இரண்டாவதாகக் கொடுக்கப்பட்ட 'சாலுனு மாயா+ஜாலமு ஸேய ஜாலனு' என்று பிரித்து பொருள் கொள்ளப்பட்டது.

Top
2 - ஜனுலதோ ஜேரி ஜெப்ப நீ தா3ரி - 'ஜெப்ப' (கூறவில்லை) என்ற சொல் எதிரிடையில் உள்ளது. அதன்படி, 'ஜனுலதோ' என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. 'ஜனுலு' என்பது 'பொதுமக்களை'க் குறிக்கும். 'நீ தா3ரி' என்பது 'பக்தி நெறி'யினைக் குறிக்கும். எனவே, முதலடியில் வரும் சொற்களுடன் சேர்த்து, 'பொதுமக்களுடன் சேர்ந்து உனது நெறி கூறவில்லை' என்று பொருள் கொள்ளலாம். அல்லது 'ஜனுலு' என்பதற்கு 'நன்மக்கள்' என்று பொருள் கொண்டு, 'நன்மக்களுடன் கூடி, உனது நெறி கூறவில்லை' என்று பொருள் கொள்ளலாம். மேலும், 'ஜெப்ப' என்ற சொல்லுக்கு, 'கூறவில்லை' என்ற பொருளும் சரியாகப் பொருந்தவில்லை. இவற்றினைக் கருத்தில் கொண்டு, முதலில் கூறியபடி, 'பொதுமக்களுடன் சேர்ந்து, உனது நெறி சென்றேனில்லை' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

மலரோன் - பிரமன்
உனது நெறி - பக்தி நெறி
கரையேற்றும் - பிறவிக் கடலிலிருந்து

Top


Updated on 25 Sep 2010

No comments: