Friday, September 17, 2010

தியாகராஜ கிருதி - முன்னு ராவண - ராகம் தோடி - Munnu Ravana - Raga Todi

பல்லவி
முன்னு ராவண பா34னோர்வக
விபீ4ஷணுடு3 மொர பெட்டக3 ராமசந்த்3

அனுபல்லவி
1மன்னிந்துனனுசு 2குல பி3ருது3லனு பொக3டி3
மாடல மரசிதிவோ ஸ்ரீ ராமசந்த்3ர (மு)

சரணம்
சரணம் 1
முனு 3வஜ்ர பா34லனோர்வ ஜாலகனு
இனஜுண்டு3 நினு ராமசந்த்3
கொனியாட3 பரிதாபமுனு ஜூசி
வானி மதி3 கொத3வ தீர்சின ராமசந்த்3ர (மு)


சரணம் 2
முனு ஹேம கஸி1பு பா34ல ஸஹிம்பக3 லேக
4முர ஹரியன ராமசந்த்3
சனுவுதோ ப்ரஹ்லாது3 ஸந்தாபமுனு
தீர்சி ஸௌக்2யமொஸகி3ன ராமசந்த்3ர (மு)


சரணம் 3
முன்னு நீ மஹிம நே வின்னதி3 கானி
ஸன்முனி வந்த்3ய ஸ்ரீ ராமசந்த்3
பன்னகா3தி4ப ஸ1யன பாலிஞ்சி நா வெதலு
பரிஹரிஞ்சவே ராமசந்த்3ர (மு)


சரணம் 4
ராஜ ராஜ 5வி-ராஜ வாஹ ரவி குல ஜலதி4
ராஜ ராக4வ ராமசந்த்3
ராஜீவ நேத்ர ப4வ ஸ்துத த்யாக3-
ராஜ 6வந்தி3த ராமசந்த்3 (மு)


பொருள் - சுருக்கம்
 • இராமசந்திரா!
 • நன்-முனிவர்கள் வந்திக்கும் இராமசந்திரா! அரவரசன் அணையோனே!
 • பேரரசே! கருட வாகனனே! பரிதி குலக் கடலின் மதியே, இராகவா! கமலக்கண்ணா! சிவனால் துதிக்கப் பெற்றோனே! தியாகராசன் வந்திக்கும் இராமசந்திரா!

  • முன்னம், இராவணின் தொல்லையைத் தாளாது, விபீடணன் முறையிட, (அவனை) மதிப்பேனென, (உனது) குல விருதுகளைப் புகழ்ந்த சொற்களை மறந்தனையோ?
  • முன்னம், வாலியின் தொல்லைகளைத் தாள இயலாது, பரிதி மைந்தன், உன்னைக் கொண்டாட, (அவனது) பரிதாபத்தினைக் கண்டு அவனது மனக் குறையினைத் தீர்த்தாய்.
  • முன்னம், இரணிய கசிபுவின் தொல்லைகளைப் பொறுக்காது, 'முரனை வதைத்தோனே' யென்று அழைக்க, கனிவுடன், பிரகலாதனின் துன்பத்தினைத் தீர்த்து, சௌக்கியமளித்தாய்.


 • முன்னம், உனது மகிமைகளினை நான் கேட்டது தான்;
 • (உனது) குல விருதுகளைப் புகழ்ந்த சொற்களை மறந்தனையோ?
 • (என்னைப்) பேணி, எனது வேதனைகளப் போக்குவாயய்யா.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முன்னு/ ராவண/ பா34னு/-ஓர்வக/
முன்னம்/ இராவணின்/ தொல்லையை/ தாளாது/

விபீ4ஷணுடு3/ மொர பெட்டக3/ ராமசந்த்3ர/
விபீடணன்/ முறையிட/ இராமசந்திரா/


அனுபல்லவி
மன்னிந்துனு/-அனுசு/ குல/ பி3ருது3லனு/ பொக3டி3ன/
(அவனை) மதிப்பேன்/ என/ (உனது) குல/ விருதுகளை/ புகழ்ந்த/

மாடல/ மரசிதிவோ/ ஸ்ரீ ராமசந்த்3ர/ (மு)
சொற்களை/ மறந்தனையோ/ ஸ்ரீ ராமசந்திரா/


சரணம்
சரணம் 1
முனு/ வஜ்ர/ பா34லனு/-ஓர்வ/ ஜாலகனு/
முன்னம்/ வாலியின்/ தொல்லைகளை/ தாள/ இயலாது/

இனஜுண்டு3/ நினு/ ராமசந்த்3ர/
பரிதி/ மைந்தன்/ உன்னை/ இராமசந்திரா/

கொனியாட3/ பரிதாபமுனு/ ஜூசி/
கொண்டாட/ (அவனது) பரிதாபத்தினை/ கண்டு/

வானி/ மதி3/ கொத3வ/ தீர்சின/ ராமசந்த்3ர/ (மு)
அவனது/ மன/ குறையினை/ தீர்த்த/ இராமசந்திரா/


சரணம் 2
முனு/ ஹேம/ கஸி1பு/ பா34ல/ ஸஹிம்பக3 லேக/
முன்னம்/ இரணிய/ கசிபுவின்/ தொல்லைகளை/ பொறுக்காது/

முர/ ஹரி/-அன/ ராமசந்த்3ர/
'முரனை/ வதைத்தோனே'/ யென்று அழைக்க/ இராமசந்திரா/

சனுவுதோ/ ப்ரஹ்லாது3/ ஸந்தாபமுனு/
கனிவுடன்/ பிரகலாதனின்/ துன்பத்தினை/

தீர்சி/ ஸௌக்2யமு/-ஒஸகி3ன/ ராமசந்த்3ர/ (மு)
தீர்த்து/ சௌக்கியம்/ அளித்த/ இராமசந்திரா/


சரணம் 3
முன்னு/ நீ/ மஹிம/ நே/ வின்னதி3/ கானி/
முன்னம்/ உனது/ மகிமைகளினை/ நான் கேட்டது/ தான்/

ஸன்முனி/ வந்த்3ய/ ஸ்ரீ ராமசந்த்3ர/
நன்-முனிவர்கள்/ வந்திக்கும்/ ஸ்ரீ ராமசந்திரா/

பன்னக3/-அதி4ப/ ஸ1யன/ பாலிஞ்சி/ நா/ வெதலு/
அரவு/ அரசன்/ அணையோனே/ (என்னைப்) பேணி/ எனது/ வேதனைகள/

பரிஹரிஞ்சவே/ ராமசந்த்3ர/ (மு)
போக்குவாயய்யா/ இராமசந்திரா/


சரணம் 4
ராஜ ராஜ/ வி/-ராஜ/ வாஹ/ ரவி/ குல/ ஜலதி4/
பேரரசே/ (கருட) பறவை/ அரசன்/ வாகனனே/ பரிதி/ குல/ கடலின்/

ராஜ/ ராக4வ/ ராமசந்த்3ர/
மதியே/ இராகவா/ இராமசந்திரா/

ராஜீவ/ நேத்ர/ ப4வ/ ஸ்துத/
கமல/ கண்ணா/ சிவனால்/ துதிக்க/ பெற்றோனே/

த்யாக3ராஜ/ வந்தி3த/ ராமசந்த்3ர/ (மு)
தியாகராசன்/ வந்திக்கும்/ இராமசந்திரா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - வந்தி3த ராமசந்த்3 - 6வந்தி3த ஸ்ரீ ராமசந்த்3ர.

Top

மேற்கோள்கள்
2 - குல பி3ருது3லனு பொக3டி3 - குல விருதுகளைப் புகழ்ந்த. விபீடணனுக்கு அடைக்கலம் அளிக்கையில், இராமன், 'கண்வ ரிஷி'யின் புதல்வரான 'கண்டு ரிஷி'யின், கீழ்க்கண்ட சொற்களை, மேற்கோள் காட்டி, அதுதான் தனது குலத்தின் கோட்பாடு என்று உரைத்தான். வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் (18-வது அத்தியாயம், செய்யுட்கள் 27-32) நோக்கவும்.
Top

 • "கைகூப்பிக்கொண்டு, தன் வாயிலடைந்து, அடைக்கலம் வேண்டும் தீனனை, அவன் பகைவனேயாகிலும், வதைக்கலாகாது.
 • துயரத்தினாலோ, செருக்கினாலோ, பிறரிடமிருந்து தன்னிடம் சரணடைந்தவனை, மனத்தினையடக்கியவர்கள், தனது உயிரைக் கொடுத்தாகிலும் காப்பர்.
 • அச்சத்தினாலோ அல்லது மோகத்தினாலோ அல்லது ஆசையினாலோ, சரணடைந்தவனை, தனது திறமையினால், காவாதவனின் பாவத்தினை, உலகம் தூற்றும்.
 • காப்பதற்குத் திறமையிருந்தும், சரணடைந்தவன் காக்கப்படாது, கண் முன் உயிர் துறந்தால், சரணம் கொடுக்காத அவனின் புண்ணியங்களையெல்லாம் அவன் கவர்ந்து செல்கின்றான்.
 • இவ்விதமாக, அடைக்கலம் வேண்டியவனைக் காவாத பெருங்குற்றத்தினால் சுவர்க்கத்தினை இழப்பதுடன், தனது வலிமையையும், வீரியத்தினையும் இழப்பான்.
 • 'கண்டு'வின் இந்த சிறந்த அறிவுரையினை நான் கடைப்பிடிப்பேன். அதுவே நன்னெறியாகும், புகழ் தரும், நல்வினையினால் சுவர்க்கத்தினையும் அளிக்கும்."


Top

5 - வி-ராஜ - பறவை அரசன். தமிழ் நாட்டில், கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திபுரத் தல புராணத்தின்படி, கருடன், 'விராஜ நதி'யினை, வைகுண்டத்திலிருந்தும், சேடன், பாதாள தீர்த்தத்தினையும் இந்த க்ஷேத்திரத்திற்குக் கொண்டுவந்தனர். தற்போது அந்த நதியின் பெயர் 'கடிலம்' எனப்படும் 'கருட நதி'யாகும்.

Top

விளக்கம்
பல்லவிக்கு, தனிப்பட, பொருள் கொள்ள இயலாது; அனுபல்லவியுடன் இணைத்தே பொருள் கொள்ள இயலும். எனவே, பல்லவி, அனுபல்லவி என தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருப்பது தவறென்று நான் கருதுகின்றேன்.

1 - மன்னிந்துனு - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'மன்னித்தல்', 'மதித்தல்' என்று பொருள்களுண்டு. பொதுவாக, இச்சொல் 'மன்னித்தல்' என்ற பொருளிலேயே வழங்கும். ஆனால், இவ்விடத்தில் அத்தகைய பொருள் பொருந்தாது. ஏனென்றால், விபீடணனை, இராமன் மன்னிக்குமளவுக்கு, அவன் தவறு ஏதும் இழைக்கவில்லை. எனவே, இச்சொல்லுக்கு 'மதிப்பேன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top

3 - வஜ்ர - இவ்விடத்தில், இச்சொல், 'வாலி'யைக் குறிக்கும். ஆனால், இச்சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இல்லை. இந்திரனின் ஆயுதமாகக் கருதப்படும் 'இடி', 'வஜ்ரம்' எனப்படும். இச்சொல்லுக்கு, 'பிளக்கமுடியாத அளவுக்குக் கடினமானது' என்றும் பொருளுண்டு. வாலியின் மார்பு, பிளக்கமுடியாதது எனப்படும். எனவே, அத்தகைய பொருளில், தியாகராஜர் இச்சொல்லினைப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது கீர்த்தனையில் தவறு ஏதும் இருக்கலாம்.

4 - முர ஹரி - 'ஹரி' என்ற சொல், அரியினைக் குறிக்கும். அரி (கண்ணன்), 'முரன்' என்னும் அரக்கனை வதைத்ததனால் 'முரஹர' என்றும், 'முராரி' என்றும் அழைக்கப்படுவான். ஆனால், 'முர ஹரி' என்று கொடுக்கப்பட்டிருப்பதனால், 'ஹரி' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில், (முரனை) 'வதைத்தவன்' என்று பொருளாகும்.

குல விருதுகள் - குலத்தின் கோட்பாடுகள்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
முரனை வதைத்தவன் - அரி

Top


Updated on 18 Sep 2010

No comments: