Thursday, September 16, 2010

தியாகராஜ கிருதி - ப்3ரு2ந்தா3வன லோல - ராகம் தோடி - Brndavana Lola - Raga Todi

பல்லவி
ப்3ரு2ந்தா3வன லோல கோ3விந்தா3ரவிந்த3 நயன

அனுபல்லவி
ஸுந்த3ராங்க3 1த்4ரு2த ரதா2ங்க3
ஸுஜனாரி திமிர பதங்க3 (ப்3ரு2)

சரணம்
மாமவ ஸ்ரீ ரமணீ மணி மத3னாஸ்1ரித மித்ர
2ராம தா3ஸ தா3 த்யாக3ராஜ நுத சரித்ர (ப்3ரு2)


பொருள் - சுருக்கம்
  • பிருந்தாவன லோலனே கோவிந்தா! கமலக் கண்ணா!
  • எழிலுருவத்தோனே! ஆழியேந்துவோனே! நன்மக்களின் பகைவரெனும் இருட்டினுக்குப் பகலவனே!
  • இலக்குமி மணாளா! சார்ந்தோர் நண்பா! இராமதாசர் தொண்டன் தியாகராசன் போற்றும் சரிதத்தோனே!

    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரு2ந்தா3வன/ லோல/ கோ3விந்த3/-அரவிந்த3/ நயன/
பிருந்தாவன/ லோலனே/ கோவிந்தா/ கமல/ கண்ணா/


அனுபல்லவி
ஸுந்த3ர/-அங்க3/ த்4ரு2த/ ரத2/-அங்க3/
எழில்/ உருவத்தோனே/ ஏந்துவோனே/ ஆழி (தேர்/ உருளை/)!

ஸுஜன/-அரி/ திமிர/ பதங்க3/ (ப்3ரு2)
நன்மக்களின்/ பகைவரெனும்/ இருட்டினுக்கு/ பகலவனே/


சரணம்
மாம்/-அவ/ ஸ்ரீ ரமணீ மணி/ மத3ன/-ஆஸ்1ரித/ மித்ர/
என்னை/ காப்பாய்/ இலக்குமி/ மணாளா/ சார்ந்தோர்/ நண்பா/

ராம தா3ஸ/ தா3ஸ/ த்யாக3ராஜ/ நுத/ சரித்ர/ (ப்3ரு2)
இராமதாசர்/ தொண்டன்/ தியாகராசன்/ போற்றும்/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - த்4ரு2த ரதா2ங்க3 - 'ரதா2ங்க3' - தேரின் பாகம் - இது, பொதுவாக, விஷ்ணுவின் 'ஆழி'யினை (சக்கரம்) குறிக்கும். ஆனால், கண்ணன், மகாபாரதப் போரில், பீஷ்மரைக் கொல்வதற்காக, தேரின் சக்கரத்தை கையிலெடுத்துக்கொண்டு புறப்பட்டான். எனவே, இதற்கு, அத்தகைய பொருளும் கொள்ளலாம். மகாபாரதம் (6-வது புத்தகம், பீஷ்ம பருவம்) நோக்கவும்.

Top

விளக்கம்
2 - ராம தா3ஸ தா3 - இராமதாசரின் தாசர் - இராம தாசர் - (ஆந்திரா மாநில) பத்திராசலத்தில் இராமனுக்குக் கோவில் கட்டி வழிபட்டவர். இதனை 'இராமனின் தொண்டர்களின் தொண்டனென'வும் கொள்ளலாம்.

Top


Updated on 17 Sep 2010

No comments: