லேகனா நின்னு ஜுட்டுகொன்னாரு
ஏக ஹ்ரு2த3யுலை நித்யானந்த3மு (லே)
அனுபல்லவி
ஸ்ரீ கர கருணா ஸாக3ர நிருபம
1சின்மயாஸ்1ரித சிந்தாமணி நீயெட3 (லே)
சரணம்
சரணம் 1
ஸௌந்த3ர்யமுலலோ ஸுக2மு ஸீதம்மகு
ஸௌமித்ரிகி கனுல ஜாட3ல ஸுக2மு (லே)
சரணம் 2
ஸுந்த3ர முக2முன ஸுக2மு ப4ரதுனிகி
ஸு-ஞான ரூபமுன ஸுக2மு ரிபுக்4னுனிகி (லே)
சரணம் 3
சரண யுக3முனந்து3 ஸுக2மாஞ்ஜனேயுனிகி
வர கு3ண த்யாக3ராஜ வரதா3னந்த3மு (லே)
பொருள் - சுருக்கம்
சீரருள்வோனே! கருணைக் கடலே! ஒப்பற்றவனே! சின்மயமானவனே! சிறந்த குணத்தோனே! தியாகராசனுக்கருள்வோனே!
- அழிவற்ற ஆனந்தம் இல்லாமலா, ஒருமித்த மனத்தினராகி, உன்னைச் சூழ்ந்துள்ளனர்?
- சார்ந்தோரின் சிந்தாமணி உன்னிடம் இல்லாமலா உன்னைச் சூழ்ந்துள்ளனர்?
- (உனது) எழிலினிலே சுகம் அன்னை சீதைக்கும்,
- சௌமித்திரிக்கு (உனது) கண் சைகையினில் சுகமும்,
- (உனது) அழகான முகத்தினில் சுகம் பரதனுக்கும்,
- (உனது) மெய்ஞ்ஞான உருவில் சுகம் சத்துருக்கினனுக்கும்,
- (உனது) திருவடி இணையினில் சுகம் அனுமனுக்கும்,
- (உனது) எழிலினிலே சுகம் அன்னை சீதைக்கும்,
- இல்லாமலா உன்னைச் சூழ்ந்துள்ளனர்?
- ஆனந்தம் இல்லாமலா உன்னைச் சூழ்ந்துள்ளனர்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லேகனா/ நின்னு/ ஜுட்டுகொன்னாரு/
இல்லாமலா/ உன்னை/ சூழ்ந்துள்ளனர்/
ஏக/ ஹ்ரு2த3யுலை/ நித்ய/-ஆனந்த3மு/ (லே)
ஒருமித்த/ மனத்தினராகி/ அழிவற்ற/ ஆனந்தம்/ இல்லாமலா...
அனுபல்லவி
ஸ்ரீ/ கர/ கருணா/ ஸாக3ர/ நிருபம/
சீர்/ அருள்வோனே/ கருணை/ கடலே/ ஒப்பற்றவனே/
சின்/-மய/-ஆஸ்1ரித/ சிந்தாமணி/ நீயெட3/ (லே)
சின்/-மயமானவனே/ சார்ந்தோரின்/ சிந்தாமணி/ உன்னிடம்/ இல்லாமலா...
சரணம்
சரணம் 1
ஸௌந்த3ர்யமுலலோ/ ஸுக2மு/ ஸீதம்மகு/
(உனது) எழிலினிலே/ சுகம்/ அன்னை சீதைக்கும்/
ஸௌமித்ரிகி/ கனுல/ ஜாட3ல/ ஸுக2மு/ (லே)
சௌமித்திரிக்கு/ (உனது) கண்/ சைகையினில்/ சுகமும்/ இல்லாமலா...
சரணம் 2
ஸுந்த3ர/ முக2முன/ ஸுக2மு/ ப4ரதுனிகி/
(உனது) அழகான/ முகத்தினில்/ சுகம்/ பரதனுக்கும்/
ஸு-ஞான/ ரூபமுன/ ஸுக2மு/ ரிபுக்4னுனிகி/ (லே)
(உனது) மெய்ஞ்ஞான/ உருவில்/ சுகம்/ சத்துருக்கினனுக்கும்/ இல்லாமலா...
சரணம் 3
சரண/ யுக3முன-அந்து3/ ஸுக2மு/-ஆஞ்ஜனேயுனிகி/
(உனது) திருவடி/ இணையினில்/ சுகம்/ அனுமனுக்கு/
வர/ கு3ண/ த்யாக3ராஜ/ வரத3/-ஆனந்த3மு/ (லே)
சிறந்த/ குணத்தோனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ ஆனந்தம்/ இல்லாமலா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - சிந்தாமணி - சிந்தாமணி - வேண்டியதருளும் மணி
Top
விளக்கம்
1 - ஆஸ்1ரித சிந்தாமணி - சார்ந்தோரின் சிந்தாமணி - இதனை, தனியாக, இறைவனின் அடைமொழியாகவும் கொள்ளலாம். ஆனால், சரணத்தின் கடைசியில் வரும், 'உன்னிடம்' என்பதுடன் இதனைச் சேர்த்து, பல்லவியுடன் இணைத்து ('சார்ந்தோரின் சிந்தாமணி உன்னிடம் இல்லாமலா' என்று) பொருள் கொண்டால் மிக்குப் பொருந்தும் என்று கருதுகின்றேன். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
சின்மயம் - மெய்யறிவு அல்லது 'பிரக்ஞை' எனப்படும் தன்னறிவு வடிவம்
சௌமித்திரி - இலக்குவன்
Top
Updated on 30 Sep 2010
1 comment:
This is a song reflecting Unity and also solidarity and togetherness hearty association ,*SIta Lakshmana Bharata Shatrugna Hanumant Sameda RAMACHANDRA Para Brahmane Namon Namaha*
Post a Comment