ராரா மாயிண்டிதா3க ரகு4-
வீர ஸுகுமார ம்ரொக்கெத3ரா
அனுபல்லவி
ராரா த3ஸ1ரத2 குமார நன்னேலு-
கோரா 1தாள லேரா (ரா)
சரணம்
சரணம் 1
2கோரின கோர்கெ கொன-ஸாக3கனே
நீரஜ நயன நீ தா3ரினி கனி
வேஸாரிதி கானி ஸாது4 ஜனாவன
ஸாரி வெட3லி ஸாமி நேடை3ன (ரா)
சரணம் 2
3ப்ரொத்3து3ன லேசி புண்யமு 4தோடி
பு3த்3து4லு ஜெப்பி ப்3ரோதுவு கானி
முத்3து3 காரு நீ மோமுனு ஜூசுசு
வத்3த3 நிலிசி வாரமு பூஜிஞ்செத3 (ரா)
சரணம் 3
தி3க்கு நீவனுசு 5தெலிஸி நன்னு ப்3ரோவ
க்3ரக்குன ராவு கருணனு நீசே
ஜிக்கியுன்னதெ3ல்ல மரதுராயிக
ஸ்ரீ த்யாக3ராஜுனி பா4க்3யமா (ரா)
பொருள் - சுருக்கம்
- இரகுவீரா! சுகுமாரா!
- தசரதன் மைந்தா!
- கமலக்கண்ணா! நல்லோரைப் பேணுவோனே! இறைவா!
- தியாகராசனின் பேறே!
- வணங்கினேனய்யா.
- வாருமய்யா, எமதில்லம் வரைக்கும்.
- வாருமய்யா, என்னை ஆள்வாயய்யா; பொறுக்க இயலேனய்யா.
- (முன்னம்) கோரிய கோரிக்கை நிறைவேறாது, உனது வரவை எதிர்நோக்கித் தளர்ந்தேன்;
- எனவே, இவ்வொருமுறை புறப்பட்டு, இன்றாகிலும் வாருமய்யா.
- காலை முதல், நல்வினை ஈட்டும் நல்லறிவு புகட்டிக் காப்பாய்; மேலும்,
- எழில் வடியும் உனது முகத்தினை நோக்கிய வண்ணம், அண்மையில் நின்று, தினமும் தொழுவேன்;
- புகல் நீயென்றறிந்து என்னைக் காக்க விரைவினில், கருணையுடன் வாராயோ?
- உன்னிடம் (நான்) சிக்கியுள்ளதெல்லாம் மறப்பரோ இனியும்?
- வாருமய்யா, என்னை ஆள்வாயய்யா; பொறுக்க இயலேனய்யா.
- வாருமய்யா, எமதில்லம் வரைக்கும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ மா/-இண்டி/ தா3க/ ரகு4வீர/
வாருமய்யா/ எமது/ இல்லம்/ வரைக்கும்/ இரகுவீரா/
ஸுகுமார/ ம்ரொக்கெத3ரா/
சுகுமாரா/ வணங்கினேனய்யா/
அனுபல்லவி
ராரா/ த3ஸ1ரத2/ குமார/ நன்னு/-
வாருமய்யா/ தசரதன்/ மைந்தா/ என்னை/
ஏலுகோரா/ தாள/ லேரா/ (ரா)
ஆள்வாயய்யா/ பொறுக்க/ இயலேனய்யா/
சரணம்
சரணம் 1
கோரின/ கோர்கெ/ கொன-ஸாக3கனே/
(முன்னம்) கோரிய/ கோரிக்கை/ நிறைவேறாது/
நீரஜ/ நயன/ நீ/ தா3ரினி/ கனி/
கமல/ கண்ணா/ உனது/ வரவை/ எதிர்நோக்கி/
வேஸாரிதி/ கானி/ ஸாது4 ஜன/-அவன/
தளர்ந்தேன்/ எனவே/ நல்லோரை/ பேணுவோனே/
ஸாரி/ வெட3லி/ ஸாமி/ நேடை3ன/ (ரா)
இவ்வொருமுறை/ புறப்பட்டு/ இறைவா/ இன்றாகிலும்/
சரணம் 2
ப்ரொத்3து3ன/ லேசி/ புண்யமு/ தோடி/
காலை/ முதல்/ நல்வினை/ ஈட்டும்/
பு3த்3து4லு/ ஜெப்பி/ ப்3ரோதுவு/ கானி/
நல்லறிவு/ புகட்டி/ காப்பாய்/ மேலும்/
முத்3து3/ காரு/ நீ/ மோமுனு/ ஜூசுசு/
எழில்/ வடியும்/ உனது/ முகத்தினை/ நோக்கிய வண்ணம்/
வத்3த3/ நிலிசி/ வாரமு/ பூஜிஞ்செத3/ (ரா)
அண்மையில்/ நின்று/ தினமும்/ தொழுவேன்/
சரணம் 3
தி3க்கு/ நீவு/-அனுசு/ தெலிஸி/ நன்னு/ ப்3ரோவ/
புகல்/ நீ/ என்று/ அறிந்து/ என்னை/ காக்க/
க்3ரக்குன/ ராவு/ கருணனு/ நீசே/
விரைவினில்/ வாராயோ/ கருணையுடன்/ உன்னிடம்/
ஜிக்கி/-உன்னதி3/-எல்ல/ மரதுரா/-இக/
(நான்) சிக்கி/ உள்ளது/ எல்லாம்/ மறப்பரோ/ இனியும்/
ஸ்ரீ த்யாக3ராஜுனி/ பா4க்3யமா/ (ரா)
ஸ்ரீ தியாகராசனின்/ பேறே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாள லேரா - தாள லேரா ராம.
2 - கோரின கோர்கெ - கோரின கோர்குலு.
5 - தெலிஸி - தெலியு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - ப்ரொத்3து3ன லேசி - காலை முதல். 'லேசி' என்ற தெலுங்கு சொல்லக்கு, 'எழுந்து' என்றும் 'முதல்' என்றும் பொருள் உண்டு. சில புத்தகங்களில் (காலையில்) 'எழுந்து' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தில், (காலை) 'முதல்' என்ற பொருள் அதிகம் பொருந்தும்.
4 - தோடி - இந்த தெலுங்கு சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை. இது 'தோட3', 'தோடி3', 'தோடு3' என்ற சொற்களின் திரிபாக இருக்கலாம். இச்சொற்களுக்கு, 'உடன்', 'கூட' என்று பொருள்கள் உண்டு. இவ்விடத்தில் 'ஈட்டும்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இறைவன், வைகுண்டத்திலிருந்து வந்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்தபின்னர், பிரகலாதன், இறைவனைத் தன்னுடைய வீட்டுக்கு வந்து, தன்னுடனே இருக்கமாறு வேண்டுவதை, தியாகராஜர், இப்பாடலில் சித்தரிக்கின்றார். இப்பாடல், இந்த நாட்டிய நாடகத்தின் இறுதி அங்கமாகும்.
Top
Updated on 29 Sep 2010
No comments:
Post a Comment