ஜனகஜா ஸமேத 1து3ர்ஜனாக3 புருஹூத
அனுபல்லவி
2ஸனகாதி3 ஸு-முனி கீ3த ஸஜ்ஜன க3ண 3பாரிஜாத (ஜ)
சரணம்
சரணம் 1
தே3வ தே3வ ஸகல ஜீவன பு4வனேஸ1
பா4வஜ ரிபு பா4வ ஸத3ன ப4வ்ய கு3ண மணி கோஸ1 (ஜ)
சரணம் 2
ஜலஜாப்த குலாம்போ4-நிதி4 ஜலஜ ஹர பரேஸ1
ஜலஜாருண சரணாஸுர ஜலதா3ஸு1க3 ஸ்ரீஸ1 (ஜ)
சரணம் 3
ஸ்1யாம ஸுந்த3ராங்க3 ரங்க3 ஸ1யன விக3த மாய
தாமஸ ஜன ஹ்ரு2த3ய தூ3ர த்யாக3ராஜ கே3ய (ஜ)
பொருள் - சுருக்கம்
- ஜனகன் மகளுடனுறையே! தீயோரெனும் மலைகளுக்கு இந்திரனே!
- சனகாதி நன் முனிவர்களால் பாடப் பெற்றோனே! நன்மக்களின் பாரிஜாதமே!
- தேவதேவா! அனைத்திற்கும் வாழ்வே! பல்லுலகிற்கும் ஈசனே! காமன் பகைவனின் இதயத்துறையே! மங்கள குணங்களின் மணிக் களஞ்சியமே!
- கமல நண்பன் (பரிதி) குலக்கடலின் மதியே! அரன் மற்றோருக்கும் இறைவனே! தாமரை நிகர் சிவந்த திருவடிகளோனே! அரக்கரெனும் முகிலினை விரட்டும் புயலே! இலக்குமி மணாளா!
- நீலவண்ண எழிலுருவத்தோனே! திருவரங்கத்தினில் துயில்வோனே! மாயையினுக்கு மேற்பட்டோனே! தாமத குணத்தோர் இதயங்களுக்கு தூரமானவனே! தியாகராஜனால் பாடப்பெற்றோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜனகஜா/ ஸமேத/ து3ர்ஜன/-அக3/ புருஹூத/
ஜனகன் மகள்/ உடனுறையே/ தீயோரெனும்/ மலைகளுக்கு/ இந்திரனே/
அனுபல்லவி
ஸனக-ஆதி3/ ஸு-முனி/ கீ3த/ ஸஜ்ஜன க3ண/ பாரிஜாத/ (ஜ)
சனகாதி/ நன் முனிவர்களால்/ பாடப் பெற்றோனே/ நன்மக்களின்/ பாரிஜாதமே/
சரணம்
சரணம் 1
தே3வ/ தே3வ/ ஸகல/ ஜீவன/ பு4வன/-ஈஸ1/
தேவ/ தேவா/ அனைத்திற்கும்/ வாழ்வே/ பல்லுலகிற்கும்/ ஈசனே/
பா4வஜ/ ரிபு/ பா4வ/ ஸத3ன/ ப4வ்ய/ கு3ண/ மணி/ கோஸ1/ (ஜ)
காமன்/ பகைவனின்/ இதயத்துள்/ உறையே/ மங்கள/ குணங்களின்/ மணி/ களஞ்சியமே/
சரணம் 2
ஜலஜ/-ஆப்த/ குல/-அம்போ4-நிதி4/ ஜலஜ/ ஹர/ பர/-ஈஸ1/
கமல/ நண்பன் (பரிதி)/ குல/ கடலின்/ மதியே/ அரன்/ மற்றோருக்கும்/ இறைவனே/
ஜலஜ/-அருண/ சரண/-அஸுர/ ஜலத3/-ஆஸு1க3/ ஸ்ரீ/-ஈஸ1/ (ஜ)
தாமரை (நிகர்)/ சிவந்த/ திருவடிகளோனே/ அரக்கரெனும்/ முகிலினை/ (விரட்டும்) புயலே/ இலக்குமி/ மணாளா/
சரணம் 3
ஸ்1யாம/ ஸுந்த3ர/-அங்க3/ ரங்க3/ ஸ1யன/ விக3த/ மாய/
நீலவண்ண/ எழில்/ உருவத்தோனே/ திருவரங்கத்தினில்/ துயில்வோனே/ மேற்பட்டோனே/ மாயையினுக்கு/
தாமஸ ஜன/ ஹ்ரு2த3ய/ தூ3ர/ த்யாக3ராஜ/ கே3ய/ (ஜ)
தாமத குணத்தோர்/ இதயங்களுக்கு/ தூரமானவனே/ தியாகராஜனால்/ பாடப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - து3ர்ஜனாக3 புருஹூத - தீயோரெனும் மலைகளுக்கு இந்திரன் - மலைகளுக்கு இந்திரன் பகைவன் எனப்படும். வால்மீகி ராமாயணத்தில் (சுந்தர காண்டம், முதல் அத்தியாயம்) மைனாக மலை, அனுமனுக்கு, இது குறித்துக் கூறுதனை நோக்கவும்.
2 - ஸனகாதி3 - சனகாதியர் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர் - என பிரமனின் நான்கு மைந்தர்கள். இவர்கள் சனத்குமாரர் தான் முருகன் எனப்படும்.
3 - பாரிஜாத - பாரிஜாதம் - விரும்பியதை வழங்கும் வானோர் தரு
Top
விளக்கம்
ஜனகன் மகள் - சீதை
அனைத்திற்கும் - அனைவருக்கும் என்றும் கொள்ளலாம்.
காமன் பகைவன் - சிவன்
மணி - இரத்தினங்கள்
தாமத குணம் - முக்குணங்களிலொன்று - சோம்பல் முதலியவை
Top
Updated on 24 Sep 2010
No comments:
Post a Comment