Thursday, September 23, 2010

தியாகராஜ கிருதி - ஏ பனிகோ - ராகம் அஸாவேரி - E Paniko - Raga Asaveri

பல்லவி
ஏ பனிகோ ஜன்மிஞ்சிதினனி
1நீவெஞ்ச வலது3 ஸ்ரீ ராம நே(னே பனி)

அனுபல்லவி
ஸ்ரீ பதி ஸ்ரீ ராமசந்த்3ர நீ
2சித்தமுனகு தெலயதா3 நே(னே பனி)

சரணம்
3வால்மீகாதி3 முனுலு நருலு நின்னு
வர்ணிஞ்சிரி நாயாஸ தீருனா
4மேல்மியையுண்டு3 5ஸத்3-ப4க்துலு
மெச்சுது3ரே
த்யாக3ராஜ நுத நே(னே பனி)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • மா மணாளா! இராமசந்திரா!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • நான் எந்தப் பணிக்கோ பிறந்தேனென நீ எண்ணலாகாது;
  • உனது உள்ளத்திற்குத் தெரியாதா?

    • வால்மீகி முதலான முனிவர்களும் மனிதர்களும் உன்னை வருணித்தனர்;
    • எனது ஆசை தீருமா?

    • மேன்மையானதாக இருக்குமே!
    • நற்றொண்டர்கள் மெச்சுவரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ பனிகோ/ ஜன்மிஞ்சிதினி/-அனி/
எந்த/ பணிக்கோ/ பிறந்தேன்/ என/

நீவு/-எஞ்ச வலது3/ ஸ்ரீ ராம/ நேனு/-(ஏ பனி)
நீ/ எண்ணலாகாது/ ஸ்ரீ ராமா/ நான்/


அனுபல்லவி
ஸ்ரீ/ பதி/ ஸ்ரீ ராமசந்த்3ர/ நீ/
மா/ மணாளா/ ஸ்ரீ ராமசந்திரா/ உனது/

சித்தமுனகு/ தெலயதா3/ நேனு/-(ஏ பனி)
உள்ளத்திற்கு/ தெரியாதா/ நான்/ எந்த...


சரணம்
வால்மீகி/-ஆதி3/ முனுலு/ நருலு/ நின்னு/
வால்மீகி/ முதலான/ முனிவர்களும்/ மனிதர்களும்/ உன்னை/

வர்ணிஞ்சிரி/ நா/-ஆஸ/ தீருனா/
வருணித்தனர்/ எனது/ ஆசை/ தீருமா/

மேல்மியை/-உண்டு3/ ஸத்3-ப4க்துலு/
மேன்மையானதாக/ இருக்குமே/ நற்றொண்டர்கள்/

மெச்சுது3ரே/ த்யாக3ராஜ/ நுத/ நேனு/-(ஏ பனி)
மெச்சுவரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நான்/ எந்த...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீவெஞ்ச வலது3 - நன்னெஞ்ச வலது3 : 'எஞ்ச வலது3' என்பதற்கு 'எண்ணலாகாது' என்று பொருளாகும். இத்துடன், முன்னிலையே மிக்குப் பொருந்தும். மேலும், பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணத்தின் கடைசியில் வரும், 'நன்னு' என்ற சொல்லினால், இவ்விடத்திலும் 'நன்னு' (நன்னெஞ்ச வலது3) என்பது மிகையாகின்றது. எனவே, 'நீவெஞ்ச வலது3' ஏற்கப்பட்டது.

2 - சித்தமுனகு - சித்தானிகி.

4 - மேல்மியையுண்டு3 - மேல்மியையுண்டு3னு.

Top

மேற்கோள்கள்
3 - வால்மீகாதி3 முனுலு நருலு - வால்மீகி முதலான முனிவர்களும், மனிதர்களும் வருணித்தனர். ராமாயணம் - பல மொழிகளில், பல நாடுகளில் நோக்கவும்.

இந்தியாவில், தமிழில் 'கம்பராமாயணம்', அவதியில் (ஹிந்தி) துளசிதாசரின் 'ராம் சரித்ர மானஸ்', குஜராத்தி, வங்காளம், ஒரியா, மராத்தி, தெலுங்கு, கன்னட, மலையாளம் மொழிகளிலும் ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் 'மாப்பிள்ள ராமாயணம்' என்பது முஸ்லீம்களிடையில் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பெனக் கூறப்படுகின்றது. தமிழில், கம்பராமாயணத்திற்கு முந்தையதோர் ராமாயணம் இருந்ததாகவும், தற்சமயம் அது மறைந்து விட்டதாகவும் கருதப்படும்.

தென்கிழக்கு ஆசியாவில், ஜாவா, மலேசியா, தாய்லாந்து, பாலி (இந்தோனேஷியா), பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மையன்மார் (முந்தைய பர்மா) ஆகிய நாடுகளிலும் ராமாயணம் வழங்குகின்றது.

தற்காலத்தில், கன்னடத்தில், 'புட்டப்பா'வும், தெலுங்கில், 'விஸ்வநாத சர்மா'வும் ராமாயணத்தினை மொழிபெயர்த்துள்ளனர்.

Top

விளக்கம்
5 - ஸத்3-ப4க்துலு மெச்சுது3ரே - நற்றொண்டர்கள் மெச்சுவரே - இது குறித்து பாகவத புராணத்தில் (முதல் புத்தகம், 5-வது அத்தியாயம், 11-வது செய்யுள்) நாரதர் கூறியது -

"செய்யுளுக்கு செய்யுள், இலக்கண மற்றும் பொருள் குற்றங்களிருந்தாலும்,
பரம்பொருளின் பெயர்கள், எந்த செய்யுட்களில் புகழப்பட்டிருக்குமோ,
அந்த செய்யுட்களை, நன்மக்கள் கேட்பர், பாடுவர், போற்றுவர்."

தியாகராஜர், தமது 'ராக3 ரத்ன' என்ற 'ரீதிகௌள' ராக கீர்த்தனையிலும், 'ஏலாவதார' என்ற 'முகாரி' ராக கீர்த்தனையிலும், தான் நுற்றுக்கணக்கில், இறைவனுக்கு அணிவிக்க, 'ராக ரத்தின மாலை' புனைந்ததாகக் கூறியுள்ளார். இதனை, பொதுவாக, 'தியாகராஜ ராமாயணம்' என்று கூறுவர். இப்பாடலில், அவர், அந்த 'ராக ரத்தின மாலை' இயற்றுதற்கு, இறைவனிடம் உத்திரவு கேட்பதாக உள்ளது. எனவே, 'தியாகராஜ ராமாயண'த்திற்கு, இந்த கீர்த்தனை முன்னோடியாக இருக்கலாம்.

எந்த பணிக்கோ - ஒரு குறிக்கோளின்றி என
எனது ஆசை - அங்ஙனமே இறைவனை வருணிக்க

Top


Updated on 24 Sep 2010

No comments: