Monday, September 20, 2010

தியாகராஜ கிருதி - வாரிதி4 நீகு - ராகம் தோடி - Varidhi Niku - Raga Todi - Prahlada Bhakti Vijayam

பல்லவி
வாரிதி4 நீகு வந்த3னமொனரிஞ்செத3

அனுபல்லவி
ஸாரெகு நீ ஹ்ரு23யாரவிந்த3முனனு
மா ரமணுடு3 கூடு3 தா3ரி தெலுபுமு நாதோ (வா)

சரணம்
சரணம் 1
நாயெட33யயுஞ்சி ஸாகுமீயெட3-
பா3யகுண்டு3 தா3ரி தெலுபுமீ முனி
த்4யேயுனிதோ மாட பலுகுமீ ஏ
உபாயமைன ஜேஸி ப்ராணமு நிலுபுமீ (வா)


சரணம் 2
3னுஜ 1பா34லெல்ல தலசனு போ43
4ன ஸம்பத3லகு சேயி ஜாசனு நா
மனஸுன 2ஹரினி நே மானனு நா
கனுலார நாது2னி கன தெல்புமீ நாதோ (வா)


சரணம் 3
ஆஜன்மமஸுர பா34லாயெனு ஜல
ராஜ ப்ராயமுலைதா3ராயெனு த்யாக3-
ராஜ ஸகு2டு3 ராடா3யெனு 3வினு
ஆஜானு பா3ஹுடு3
அக3பட3 தெலுபுமீ (வா)


பொருள் - சுருக்கம்
கடலரசே! நீர்நிலைகள் அரசே!

  • உமக்கு வந்தனம் செலுத்துகின்றேன்.

  • கேள்மின்.
  • எவ்வமயமும், உமது இதயக் கமலத்தினில், மாரமணன் கூடியிருக்கும் நெறியினைத் தெரிவிப்பீர், என்னிடம்.

    • என்னிடம் தயை செய்து காப்பீராக;
    • முனிவர்கள் தியானிப்போனிடம் என்னைப் பற்றி சொல்வீராக;
    • ஏதாகிலும் வழிமுறை கையாண்டு (எனது) உயிரைக் காப்பீராக;

  • (அரி) இணை பிரியாதிருக்கும் வழியினைத் தெரிவிப்பீராக.

    • அரக்கர் தொல்லைகளையெல்லாம் கருதேன்;
    • உலக இன்பங்கள், செல்வம், சம்பத்துக்களுக்கு கையேந்தேன்;
    • எனது மனதினில் அரியினை நான் விடமாட்டேன்;

  • எனது கண்ணார, நாதனைக் காண (வழி) தெரிவிப்பீர் என்னிடம்.

    • வாழ்நாள் முழுதும் அரக்கர் தொல்லைகளாயின;
    • (எனது) வயது ஐந்தாறாகியது;
    • தியாகராசனின் நண்பன் வாரானாயினன்;

  • முழந்தாள் நீளக் கைகளோன் அகப்பட (வழி) தெரிவிப்பீராக.

  • உமக்கு வந்தனம் செலுத்துகின்றேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாரிதி4/ நீகு/ வந்த3னமு/-ஒனரிஞ்செத3/
கடலரசே/ உமக்கு/ வந்தனம்/ செலுத்துகின்றேன்/


அனுபல்லவி
ஸாரெகு/ நீ/ ஹ்ரு23ய/-அரவிந்த3முனனு/
எவ்வமயமும்/ உமது/ இதய/ கமலத்தினில்/

மா/ ரமணுடு3/ கூடு3/ தா3ரி/ தெலுபுமு/ நாதோ/ (வா)
மா/ ரமணன்/ கூடியிருக்கும்/ நெறியினை/ தெரிவிப்பீர்/ என்னிடம்/


சரணம்
சரணம் 1
நாயெட3/ த3ய/-உஞ்சி/ ஸாகுமீ/-எட3/-
என்னிடம்/ தயை/ செய்து/ காப்பீராக/ (அரி) இணை/

பா3யக/-உண்டு3/ தா3ரி/ தெலுபுமீ/ முனி/
பிரியாது/ இருக்கும்/ வழியினை/ தெரிவிப்பீராக/ முனிவர்கள்/

த்4யேயுனிதோ/ மாட பலுகுமீ/ ஏ/
தியானிப்போனிடம்/ (என்னைப் பற்றி) சொல்வீராக/ ஏதாகிலும்/

உபாயமைன/ ஜேஸி/ ப்ராணமு/ நிலுபுமீ/ (வா)
வழிமுறை/ கையாண்டு/ (எனது) உயிரை/ காப்பீராக/


சரணம் 2
3னுஜ/ பா34லு/-எல்ல/ தலசனு/ போ43/
அரக்கர்/ தொல்லைகளை/ யெல்லாம்/ கருதேன்/ உலக இன்பங்கள்/

4ன/ ஸம்பத3லகு/ சேயி/ ஜாசனு/ நா/
செல்வம்/ சம்பத்துக்களுக்கு/ கை/ யேந்தேன்/ எனது/

மனஸுன/ ஹரினி/ நே/ மானனு/ நா/
மனதினில்/ அரியினை/ நான்/ விடமாட்டேன்/ எனது/

கனுலார/ நாது2னி/ கன/ தெல்புமீ/ நாதோ/ (வா)
கண்ணார/ நாதனை/ காண/ (வழி) தெரிவிப்பீர்/ என்னிடம்/


சரணம் 3
ஆஜன்மமு/-அஸுர/ பா34லு-ஆயெனு/ ஜல/
வாழ்நாள் முழுதும்/ அரக்கர்/ தொல்லைகளாயின/ நீர்நிலைகள்/

ராஜ/ ப்ராயமுலு/-ஐது3/-ஆரு/-ஆயெனு/
அரசே/ (எனது) வயது/ ஐந்து/ ஆறு/ ஆகியது/

த்யாக3ராஜ/ ஸகு2டு3/ ராடு3-ஆயெனு/ வினு/
தியாகராசனின்/ நண்பன்/ வாரானாயினன்/ கேள்மின்/

ஆஜானு/ பா3ஹுடு3/ அக3பட3/ தெலுபுமீ/ (வா)
முழந்தாள் நீள/ கைகளோன்/ அகப்பட/ (வழி) தெரிவிப்பீராக/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பா34லெல்ல - பா34லனெல்ல.
2 - ஹரினி நே மானனு - ஹரினி நேமாரனு : பிற்கூறியதை 'ஹரினி+நே+ஏமாரனு' என்று பிரிக்கலாம். ஆனால், சரியான தெலுங்கு சொல், 'ஏமரனு' ஆகும்; 'ஏமாரனு' அல்ல. எனவே, முற்கூறியதே ஏற்கப்பட்டது.

3 - வினு ஆஜானு பா3ஹுடு3 - வினுமாஜானு பா3ஹுடு3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், கருடனால் நாக பாசத்தினின்றும் விடுவிக்கப்பட்ட பிரகலாதன், கடலரசனை, இறைவனைக் காணும் நெறிமுறையினைக் கூறும்படி கேட்பதை, தியாகராஜர் சித்தரிக்கின்றார்.

மாரமணன் - முனிவர்கள் தியானிப்போன் - முழந்தாள் நீளக் கைகளோன் - தியாகராசனின் நண்பன் - அரி

ஐந்தாறு - பதினொன்றெனவும் கொள்ளலாம்
நீர்நிலைகள் அரசன் - கடலரசன்

Top


Updated on 21 Sep 2010

No comments: