Thursday, September 9, 2010

தியாகராஜ கிருதி - நமோ நமோ ராக4வாய - ராகம் தேசிய தோடி - Namo Namo Raghavaya - Desiya Todi

பல்லவி
நமோ நமோ ராக4வாய அனிஸ1ம்
நமோ நமோ ராக4வாய 1அனிஸ1ம்

சரணம்
சரணம் 1
ஸு1க நுதாய தீ3ன ப3ந்த4வே
ஸகல லோக த3யா ஸிந்த4வே (ந)


சரணம் 2
ஸ்1ரித து3ரித தமோ ப3ஹு ரவயே
ஸதத 2பாலிதாத்3பு4த கவயே (ந)


சரணம் 3
நிஜ ஸேவக கல்பக தரவே
அஜ ருத்3ராத்3யமர ஸு-கு3ரவே (ந)


சரணம் 4
தீ3ன மானவ க3ண பதயே
3தா3னவாந்தகாய ஸு-மதயே (ந)


சரணம் 5
ஆயுராரோக்3ய தா3யினே
வாயு போ4ஜி போ4கி3 ஸா1யினே (ந)


சரணம் 6
4நூதன நவனீத4க்ஷிணே
பூ4-தலாதி3 ஸர்வ ஸாக்ஷிணே (ந)


சரணம் 7
5வர க3ஜ கர துலித பா3ஹவே
1ர ஜித தா3னவ ஸுபா3ஹவே (ந)


சரணம் 8
நாக3 ராஜ பாலனாய
த்யாக3ராஜ ஸேவிதாய (ந)


பொருள் - சுருக்கம்
  • இராகவனுக்கு இடையறா வணக்கம்.

    • சுக முனிவர் போற்றும், எளியோரின் சுற்றத்திற்கு,
    • அனைத்துலகக் கருணைக் கடலினுக்கு,

    • சார்ந்தோர் பாவ இருட்டினைப் போக்கும் வெகு பரிதிக்கு,
    • எவ்வமயமும், அற்புதக் கவிகளைப் பேணுவோனுக்கு,

    • உண்மைத் தொண்டர்களின் கற்பதருவினுக்கு,
    • பிரமன், ருத்திரன் முதலாக அமரர் நற்றலைவனுக்கு,

    • எளிய மானவர்களின் தலைவனுக்கு,
    • தானவர்களை அழித்த, நல்லுள்ளத்தோனுக்கு,

    • ஆயுளும், உடல் நலமும் அருள்வோனுக்கு,
    • காற்றுண்ணும் அரவணையோனுக்கு,

    • புதுமையான வெண்ணையுண்போனுக்கு,
    • புவி, கீழுலகம் ஆகிய யாவற்றின் சாட்சிக்கு,

    • உயர் கரி துதிக்கை நிகர் கரங்களோனுக்கு,
    • அம்புகளினால் அரக்கன் சுபாகுவினை வென்றோனுக்கு,

    • கரியரசனைக் காத்தோனுக்கு,
    • தியாகராசன் வழிபடுவோனுக்கு,

  • இராகவனுக்கு இடையறா வணக்கம்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நமோ/ நமோ/ ராக4வாய/ அனிஸ1ம்/
வணக்கம்/ வணக்கம்/ இராகவனுக்கு/ இடையறா/

நமோ/ நமோ/ ராக4வாய/ அனிஸ1ம்/
வணக்கம்/ வணக்கம்/ இராகவனுக்கு/ இடையறா/


சரணம்
சரணம் 1
ஸு1க/ நுதாய/ தீ3ன/ ப3ந்த4வே/
சுக முனிவர்/ போற்றும்/ எளியோரின்/ சுற்றத்திற்கு/

ஸகல/ லோக/ த3யா/ ஸிந்த4வே/ (ந)
அனைத்து/ உலக/ கருணை/ கடலினுக்கு/ வணக்கம்...


சரணம் 2
ஸ்1ரித/ து3ரித/ தமோ/ ப3ஹு/ ரவயே/
சார்ந்தோர்/ பாவ/ இருட்டினை (போக்கும்)/ வெகு/ பரிதிக்கு/

ஸதத/ பாலித/-அத்3பு4த/ கவயே/ (ந)
எவ்வமயமும்/ பேணுவோனுக்கு/ அற்புத/ கவிகளை/ வணக்கம்...


சரணம் 3
நிஜ/ ஸேவக/ கல்பக/ தரவே/
உண்மை/ தொண்டர்களின்/ கற்ப/ தருவினுக்கு/

அஜ/ ருத்3ர/-ஆதி3/-அமர/ ஸு-கு3ரவே/ (ந)
பிரமன்/ ருத்திரன்/ முதலாக/ அமரர்/ நற்றலைவனுக்கு/ வணக்கம்...


சரணம் 4
தீ3ன/ மானவ க3ண/ பதயே/
எளிய/ மானவர்களின்/ தலைவனுக்கு/

தா3னவ/-அந்தகாய/ ஸு-மதயே/ (ந)
தானவர்களை/ அழித்த/ நல்லுள்ளத்தோனுக்கு/ வணக்கம்...


சரணம் 5
ஆயு:/ ஆரோக்3ய/ தா3யினே/
ஆயுளும்/ உடல் நலமும்/ அருள்வோனுக்கு/

வாயு/ போ4ஜி/ போ4கி3/ ஸா1யினே/ (ந)
காற்று/ உண்ணும்/ அரவு/ அணையோனுக்கு/ வணக்கம்...


சரணம் 6
நூதன/ நவனீத/ ப4க்ஷிணே/
புதுமையான/ வெண்ணை/ உண்போனுக்கு/

பூ4/-தல/-ஆதி3/ ஸர்வ/ ஸாக்ஷிணே/ (ந)
புவி/ கீழுலகம்/ ஆகிய/ யாவற்றின்/ சாட்சிக்கு/ வணக்கம்...


சரணம் 7
வர/ க3ஜ/ கர/ துலித/ பா3ஹவே/
உயர்/ கரி/ துதிக்கை/ நிகர்/ கரங்களோனுக்கு/

1ர/ ஜித/ தா3னவ/ ஸுபா3ஹவே/ (ந)
அம்புகளினால்/ வென்றோனுக்கு/ அரக்கன்/ சுபாகுவினை/ வணக்கம்...


சரணம் 8
நாக3/ ராஜ/ பாலனாய/
கரி/ யரசனை/ காத்தோனுக்கு/

த்யாக3ராஜ/ ஸேவிதாய/ (ந)
தியாகராசன்/ வழிபடுவோனுக்கு/ வணக்கம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அனிஸ1ம் - பல்லவியின் இக்கடைசிச் சொல், சில புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.

Top

மேற்கோள்கள்
2 - அத்3பு4த கவயே - அற்புதக் கவிகள் - வால்மீகி போன்றோரைக் குறிக்கும்.

3 - தா3னவாந்தகாய - அரக்கரை அழித்தோன் - முக்கியமாக இராவணனைக் குறிக்கும்.

Top

விளக்கம்
4 - நூதன நவனீத - 'நவனீத' என்ற சொல்லில் உள்ள 'நவ' என்பது 'புதிய' என்று பொருள்படும் (புதிய வெண்ணை). எனவே 'நூதன' என்ற சொல்லினை 'புதுமையான' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

5 - வர க3ஜ கர துலித பா3ஹவே - உயர் கரி துதிக்கை நிகர் கரங்களோன் - நீளத்திலும் (முழந்தாள் நீளக் கைகள்), வலிமையிலும்.

கற்பதரு - விரும்பியதையளிக்கும் வானோர் தரு
தானவர்கள் - அரக்கர்கள்

Top


Updated on 10 Sep 2010

3 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு

சரணம் 2 ல் “ப3ஹு ரவயே ” என்பதற்குத் தமிழில் ‘வெகு பரிதிக்கு’ என்றும் ஆங்கிலத்தில் ’ Multitude of Suns ’ என்றும்
பொருள் கொடுத்துள்ளீர். ரவயே என்பது பன்மையானால் வெகு பரிதி என்பது எளிதாக விளங்கவில்லை. சரியென்றும் எனக்குத் தோன்றவில்லை. பல பரிதிகளுக்கு என்பது சரியாக இருக்குமா?

வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'வெகு' மற்றும் 'பல' இவ்விரண்டு சொற்களும் பன்மையைக் குறிக்கும்.

இவ்விடத்தில், 'ப3ஹு ரவயே' என்பது பல சூரியர்கள் ஒரே நேரத்தில் எழுந்தால் எப்படியிருக்குமோ அப்படி, என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். அதற்கு சமஸ்கிருதத்தில் 'ஸங்காஸ1' என்று கூறுவர். ஒவ்வோர் மொழிக்கும் சில தனிச் சிறப்புக்கள் உண்டு. எனவே மொழிபெயர்க்கையில் இம்மாதிரி பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. 'பரிதிகள்' என்று நான் எழுதலாம். ஆனால் அதில் அந்த 'ரவயே' என்ற சொல்லின் சுவை முழுதாக வெளிப்படவில்லை.

வணக்கம்
கோவிந்தன்

Anonymous said...

அடியேன் தாசன்