Wednesday, September 8, 2010

தியாகராஜ கிருதி - தொ3ரகுனாயனி - ராகம் தோடி - Dorakunayani - Raga Todi

பல்லவி
தொ3ரகுனாயனி ஸுருல தொ3ர வெட3லெனு கனரே

அனுபல்லவி
கரகு33ங்க3ரு வல்வ கட்டி ஸொம்முலு பெட்டி
ஹரி ஸேவ 1கனுலாரனந்தரங்க3முனனு கன (தொ3)

சரணம்
சரணம் 1
4னமைன ஹரி நாம கா3னமொனரிஞ்சி
சனுவுனனு ஹரி ஸேவ ஸல்பனெவ்வரிகைன (தொ3)


சரணம் 2
நேடு3 தன நோமு ப2லமீடே3ரெனனி ஹரினி
பாடு3சுனு மனஸார வேடு3சுனு ஸேவிம்ப (தொ3)


சரணம் 3
ராஜ முகு23வனிஜா ரமணிதோ செலக33
பூஜிஞ்சு ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி கன (தொ3)


பொருள் - சுருக்கம்
காணீரே!

  • கிடைக்குமாயென, தேவர் தலைவன் புறப்பட்டனன்!
    • உருக்கிய பொன்னாடை யுடுத்து, நகைகள் அணிந்து, அரி சேவையினை, கண்ணார, உள்ளத்தினில் காணக்

  • கிடைக்குமாயென, தேவர் தலைவன் புறப்பட்டனன்!

    • சிறந்த, அரி நாமங்களை இசைத்துக்கொண்டு, காதலுடன், அரி சேவை செய்ய,
    • 'இன்று, தனது நோன்பின் பயன் ஈடேறியது' என, அரியைப் பாடிக் கொண்டு, மனதார வேண்டிக் கொண்டு, சேவிக்க,
    • மதி முகத்தோன், அழகிய புவி மகளுடன் விளங்க, வழிபடும், தியாகராசனால் போற்றப் பெற்றோனைக் காண,

  • எவருக்காகிலும், கிடைக்குமாயென, தேவர் தலைவன் புறப்பட்டனன்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொ3ரகுனா/-அனி/ ஸுருல/ தொ3ர/ வெட3லெனு/ கனரே/
கிடைக்குமா/ யென/ தேவர்/ தலைவன்/ புறப்பட்டனன்/ காணீரே/


அனுபல்லவி
கரகு3/ ப3ங்க3ரு/ வல்வ/ கட்டி/ ஸொம்முலு/ பெட்டி/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யுடுத்து/ நகைகள்/ அணிந்து/

ஹரி/ ஸேவ/ கனுலார/-அந்தரங்க3முனனு/ கன/ (தொ3)
அரி/ சேவையினை/ கண்ணார/ உள்ளத்தினில்/ காண/ கிடைக்குமாயென...


சரணம்
சரணம் 1
4னமைன/ ஹரி/ நாம/ கா3னமு-ஒனரிஞ்சி/
சிறந்த/ அரி/ நாமங்களை/ இசைத்துக்கொண்டு/

சனுவுனனு/ ஹரி/ ஸேவ/ ஸல்பனு/-எவ்வரிகைன/ (தொ3)
காதலுடன்/ அரி/ சேவை/ செய்ய/ எவருக்காகிலும்/ கிடைக்குமாயென...


சரணம் 2
நேடு3/ தன/ நோமு/ ப2லமு/-ஈடே3ரெனு/-அனி/ ஹரினி/
'இன்று/ தனது/ நோன்பின்/ பயன்/ ஈடேறியது/' என/ அரியை/

பாடு3சுனு/ மனஸார/ வேடு3சுனு/ ஸேவிம்ப/ (தொ3)
பாடிக் கொண்டு/ மனதார/ வேண்டிக் கொண்டு/ சேவிக்க/ கிடைக்குமாயென...


சரணம் 3
ராஜ/ முகு2டு3/-அவனிஜா/ ரமணிதோ/ செலக33/
மதி/ முகத்தோன்/ புவி மகளுடன்/ அழகிய/ விளங்க/

பூஜிஞ்சு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ கன/ (தொ3)
வழிபடும்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ காண/ கிடைக்குமாயென...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அந்தரங்க3முனனு - அந்தரங்க3முன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கனுலார அந்தரங்க3முனனு - கண்ணார, உள்ளத்தினில். இவ்விரண்டு சொற்களும், ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாகத் தோன்றுகின்றது. எனவே, 'கண்ணார' என்பதனை 'மனதார' என்று கொள்ளலாம்.

இப்பாடலின் அனுபல்லவி, இந்திரன், பிரகலாதனின் சேவையினைக் காண்பது பற்றியும், மூன்று சரணங்களும் பிரகலாதன் இறைவனுக்குச் செய்யும் சேவையினை விவரிப்பதாகவும் உள்ளன.

இப்பாடல், தியாகராஜரின், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், பிரகலாதன் அரிக்குச் செய்யும் சேவையினையும், அச்சேவையினைக் காண, இந்திரன் புறப்பட்டு வந்ததையும் தியாகராஜர் விவரிக்கின்றார்.

மதி முகத்தோன் - இராமன்
புவி மகள் - சீதை
வழிபடும் - பிரகலாதனைக் குறிக்கும்.
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - இராமன்

Top


Updated on 09 Sep 2010

No comments: