நினு வினா ஸுக2மு கான நீரஜ நயன
அனுபல்லவி
1மனஸுகெந்தோ ஆனந்த3மை மை புலகரிஞ்சக3 (நி)
சரணம்
சரணம் 1
ரூபமு ப்ரதாபமு ஸ1ர சாபமு ஸல்லாபமு க3ல (நி)
சரணம் 2
கருணா ரஸ பரிபூர்ண வரத3 ம்ரு2து3 வார்தலு க3ல (நி)
சரணம் 3
ராக3 ரஸிக ராக3 ரஹித த்யாக3ராஜ பா4க3தே4ய (நி)
பொருள் - சுருக்கம்
- கமலக்கண்ணா!
- கருணை உணர்வு நிறை, வரதா!
- இசை ரசிகனே! பற்றற்றோனே! தியாகராசனின் பேறே!
- உன்னையன்றி சுகம் காணேன்.
- மனதிற்கு எத்தனையோ ஆனந்தமாகி, மெய்ப் புல்லரிக்கவே, உன்னையன்றி சுகம் காணேன்.
- உருவம், பெருமை, அம்புகள், வில், சல்லாபம், மென் சொல்லுடைய உன்னையன்றி, சுகம் காணேன்!
- மனதிற்கு எத்தனையோ ஆனந்தமாகி, மெய்ப் புல்லரிக்கவே, உன்னையன்றி சுகம் காணேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நினு/ வினா/ ஸுக2மு/ கான/ நீரஜ/ நயன/
உன்னை/ யன்றி/ சுகம்/ காணேன்/ கமல/ கண்ணா/
அனுபல்லவி
மனஸுகு/-எந்தோ/ ஆனந்த3மை/ மை/ புலகரிஞ்சக3/ (நி)
மனதிற்கு/ எத்தனையோ/ ஆனந்தமாகி/ மெய்/ புல்லரிக்கவே/ உன்னையன்றி...
சரணம்
சரணம் 1
ரூபமு/ ப்ரதாபமு/ ஸ1ர/ சாபமு/ ஸல்லாபமு/ க3ல/ (நி)
உருவம்/ பெருமை/ அம்புகள்/ வில்/ சல்லாபம்/ உடைய/ உன்னையன்றி...
சரணம் 2
கருணா/ ரஸ/ பரிபூர்ண/ வரத3/ ம்ரு2து3/ வார்தலு/ க3ல/ (நி)
கருணை/ உணர்வு/ நிறை/ வரதா/ மென்/ சொல்/ உடைய/ உன்னையன்றி...
சரணம் 3
ராக3/ ரஸிக/ ராக3/ ரஹித/ த்யாக3ராஜ/ பா4க3தே4ய/ (நி)
இசை/ ரசிகனே/ பற்று/ அற்றோனே/ தியாகராசனின்/ பேறே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - மனஸுகெந்தோ ஆனந்த3மை - மனதிற்கு ஆனந்தமாகி - சரணங்களில் கூறியுள்ள இறைவனின் இயல்புகள்
சல்லாபம் - இனிமையாகப் பேசுதல்
Top
Updated on 11 Sep 2010
No comments:
Post a Comment