நீவண்டி தை3வமு ஷடா3னன
நேனெந்து3 கானரா
அனுபல்லவி
பா4விஞ்சி சூட3 தரமு கானி
1ப்3ரஹ்ம புரி நிலய கி3ரிஜா தனய (நீ)
சரணம்
சரணம் 1
ஸரி பா3லுரதோ கைலாஸ கி3ரினி
ஸு1பா4க்ரு2திதோனாட3க3னு
2வெரபு லேக 3ப்ரணவார்த2மு தானனு
விதி4னி கோபகி3ஞ்சி
ஸரகு3ன 4நவ வீருலந்தொ3க
கிங்கருனி கனி 5மும்மாரு ஸெலவிச்சி
ஸுருலு 6முர புராருலு வினி மெச்சக3
வருஸகா3னு ஸ்ரு2ஷ்டி ஸ1க்தினொஸகி3ன (நீ)
சரணம் 2
7ஹரி ஹருலகு தி3க்பாலுல
கல ஸ1ஸி1 ஸூர்யலகு
மரி 8வித்3யாத4ருலகு 9ப்3ரஹ்மாண்ட3முன
10வெலயு 11வீராது3லகு
தரமு கா3க நின்னு 12ஜத கூடி3
ஸ1ரணனகா3 வினி ஸைரிஞ்சக
13பரம த்3ரோஹியைன ஸூ1ர
பத்3மாஸுருனி கீர்திகா3னு க3ர்வமணசின (நீ)
சரணம் 3
மார கோடுலந்து3 கல்கி3ன
ஸ்1ரு2ங்கா3ரமெல்ல இந்து3 முக2 நீ கொன
கோ3ருனு போலுனே அடுவண்டி
ஸு1பா4காரமு ஸந்ததமு
ஸாரெகு நா மதி3னி நிலிபின
14குமார த3யா-பர நீரஜ லோசன
தாரகாதி4ப கலா த4ருட3கு3
ஸ்ரீ 15த்யாக3ராஜ ஸன்னுதாஸ்1ரித ஹித (நீ)
பொருள் - சுருக்கம்
- ஆறுமுகத்தோனே!
- பிரமபுரி உறைவோனே! மலைமகள் மைந்தா!
- மதி முகத்தோனே! குமரா! தயாபரனே! கமலக்கண்ணா! தாராபதியின் பிறையணிவோனாகிய தியாகராசன் சிறக்கப் போற்றும், சார்ந்தோருக்கினியோனே!
- உன்னைப் போன்ற கடவுளை நானெங்கும் காணேனய்யா.
- உன்னை (உள்ளத்தினில்) உணர்ந்து பார்க்க முடியாது.
- மதனர் கோடிகளிடம் உள்ள சிங்காரம் எல்லாம், உனது நக நுனியினைப் போலாகுமே!
- அப்படிப்பட்ட மங்கள உருவத்தினை எவ்வமயமும் நிலையாக எனதுள்ளத்தினில் ஊன்றினாய்.
- ஈடான சிறாருடன், கயிலாய மலையினில், மங்களமான உருவத்தோடு விளையாடுகையில்,
- அச்சமின்றி, பிரணவத்தின் பொருள் தானேயெனும் பிரமனைக் கோபித்து,
- உடனே, ஒன்பது வீரர்களிலொரு சேவகனைக் கண்டு, மும்முறை உத்தரவிட்டு,
- வானோர், முர, புராரிகளும் கேட்டு மெச்ச,
- வரிசையாக படைப்புத் திறமைகளை வழங்கிய
- ஈடான சிறாருடன், கயிலாய மலையினில், மங்களமான உருவத்தோடு விளையாடுகையில்,
- உன்னைப் போன்ற கடவுளை நானெங்கும் காணேனய்யா.
- அரி, அரர்களுக்கும், திசைப்பாலர், பிறைமதி, பரிதிக்கும், மேலும், வித்தியாதரர்களுக்கும், பேரண்டத்தினில் திகழும் வீரர்கள் ஆகியோருக்கும் தரமின்றி,
- உன்னை, ஒன்று கூடி, சரணென,
- கேட்டு, சகியாது,
- பரம துரோகியான சூர பதுமாசுரனை, புகழோடு, செருக்கடக்கிய
- அரி, அரர்களுக்கும், திசைப்பாலர், பிறைமதி, பரிதிக்கும், மேலும், வித்தியாதரர்களுக்கும், பேரண்டத்தினில் திகழும் வீரர்கள் ஆகியோருக்கும் தரமின்றி,
- உன்னைப் போன்ற கடவுளை, நானெங்கும் காணேனய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவண்டி/ தை3வமு/ ஷட்3/-ஆனன/
உன்னைப் போன்ற/ கடவுளை/ ஆறு/ முகத்தோனே/
நேனு/-எந்து3/ கானரா/
நான்/ எங்கும்/ காணேனய்யா/
அனுபல்லவி
பா4விஞ்சி/ சூட3/ தரமு கானி/
(உள்ளத்தினில்) உணர்ந்து/ பார்க்க/ முடியாத/
ப்3ரஹ்ம/ புரி/ நிலய/ கி3ரிஜா/ தனய/ (நீ)
பிரம/ புரி/ உறைவோனே/ மலைமகள்/ மைந்தா/
சரணம்
சரணம் 1
ஸரி/ பா3லுரதோ/ கைலாஸ/ கி3ரினி/
ஈடான/ சிறாருடன்/ கயிலாய/ மலையினில்/
ஸு1ப4/-ஆக்ரு2திதோனு/-ஆட3க3னு/
மங்களமான/ உருவத்தோடு/ விளையாடுகையில்/
வெரபு/ லேக/ ப்ரணவ/-அர்த2மு/ தானு/-அனு/
அச்சம்/ இன்றி/ பிரணவத்தின்/ பொருள்/ தானே/ யெனும்/
விதி4னி/ கோபகி3ஞ்சி/
பிரமனை/ கோபித்து/
ஸரகு3ன/ நவ/ வீருலு-அந்து3/-ஒக/
உடனே/ ஒன்பது/ வீரர்களில்/ ஒரு/
கிங்கருனி/ கனி/ மும்மாரு/ ஸெலவு/-இச்சி/
சேவகனை/ கண்டு/ மும்முறை/ உத்தரவு/ இட்டு/
ஸுருலு/ முர/ புர/-அருலு/ வினி/ மெச்சக3/
வானோர்/ முர/ புர/ அரிகளும்/ கேட்டு/ மெச்ச/,
வருஸகா3னு/ ஸ்ரு2ஷ்டி/ ஸ1க்தினி/-ஒஸகி3ன/ (நீ)
வரிசையாக/ படைப்பு/ திறமைகளை/ வழங்கிய/ உன்னைப் போன்ற...
சரணம் 2
ஹரி/ ஹருலகு/ தி3க்/-பாலுல/
அரி/, அரர்களுக்கும்/, திசை/ பாலர்/,
கல/ ஸ1ஸி1/ ஸூர்யலகு/
பிறை/ மதி/, பரிதிக்கும்/,
மரி/ வித்3யாத4ருலகு/ ப்3ரஹ்மாண்ட3முன/
மேலும்/ வித்தியாதரர்களுக்கும்/, பேரண்டத்தினில்/
வெலயு/ வீர/-ஆது3லகு/
திகழும்/ வீரர்கள்/ ஆகியோருக்கும்/
தரமு/ கா3க/ நின்னு/ ஜத/ கூடி3/
தரம்/ இன்றி/ உன்னை/ ஒன்று/ கூடி/
ஸ1ரணு/-அனகா3/ வினி/ ஸைரிஞ்சக/
சரண்/ என/ கேட்டு/ சகியாது/
பரம/ த்3ரோஹியைன/ ஸூ1ர/
பரம/ துரோகியான/ சூர/
பத்3மாஸுருனி/ கீர்திகா3னு/ க3ர்வமு/-அணசின/ (நீ)
பதுமாசுரனை/ புகழோடு/, செருக்கு/ அடக்கிய/ உன்னைப் போன்ற...
சரணம் 3
மார/ கோடுலு-அந்து3/ கல்கி3ன/
மதனர்/ கோடிகளிடம்/ உள்ள/
ஸ்1ரு2ங்கா3ரமு/-எல்ல/ இந்து3/ முக2/ நீ/ கொன/
சிங்காரம்/ எல்லாம்/ மதி/ முகத்தோனே/ உனது நுனி/
கோ3ருனு/ போலுனே/ அடுவண்டி/
நகத்தினை/ போலாகுமே/ அப்படிப்பட்ட/
ஸு1ப4/-ஆகாரமு/ ஸந்ததமு/
மங்கள/ உருவத்தினை/ எவ்வமயமும்/
ஸாரெகு/ நா/ மதி3னி/ நிலிபின/
நிலையாக/ எனது/ உள்ளத்தினில்/ ஊன்றிய/
குமார/ த3யா/-பர/ நீரஜ/ லோசன/
குமரா/ தயா/ பரனே/ கமல/ கண்ணா/
தாரக/-அதி4ப/ கலா/ த4ருட3கு3/
தாரா/ பதியின்/ பிறை/ அணிவோனாகிய/
ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுத/-ஆஸ்1ரித/ ஹித/ (நீ)
ஸ்ரீ தியாகராசன்/ சிறக்கப் போற்றும்/ சார்ந்தோருக்கு/ இனியோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - ஹரி ஹருலகு - ஹரி ஹராது3லகு.
9 - ப்3ரஹ்மாண்ட3முன - ப்3ரஹ்மாண்ட3முலனு.
10 - வெலயு - வெலஸே.
11 - வீராது3லகு - வர வீராது3ல.
12 - ஜத கூடி3 - ஜத கூ3ட3க : 'ஜத கூ3ட3க' என்பது நேர்மாறான பொருள் தருதலால், தவறாகும்.
Top
மேற்கோள்கள்
1 - ப்3ரஹ்ம புரி - பிரமபுரி - இது 'சீர்காழி'யென ஒரு புத்தகத்தினில் கூறப்பட்டுள்ளது. அந்த தலத்தினில் சிவனின் பெயர் 'பிரமபுரீஸ்வரர்' ஆகும் (சீர்காழி கோவில்)
இன்னொரு புத்தகத்தில் இது 'தர்மபுரி' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் ஏதும் தரப்படவில்லை. இது எந்த 'தர்மபுரி' என்று விளங்கவில்லை.
3 - ப்ரணவார்த2மு தானனு விதி4னி கோபகி3ஞ்சி - பிரணவத்தின் பொருள் தானேயெனும் பிரமனைக் கோபித்து - முழு கதையினையும், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய (ராமசாமி புலவரின் உரை) 'கந்தபுராண'த்தில் காணலாம்.
மேலும், ‘Lord Shanmukha and His Worship’ என்ற e-book (download) நோக்கவும்.
4 - நவ வீருலு - ஒன்பது வீரர்கள் - வீரபாகு முதலிய ஒன்பது வீரர்கள் - வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரன், வீரபுரந்தரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன் மற்றும் வீரதீரன். இவர்கள் யாவரும் முருகனுடன் பிறந்தவர்கள் என மேற்கூறிய கந்தபுராணம் கூறும்.
Top
விளக்கம்
2 - வெரபு லேக - அச்சமின்றி - இதனை பிரமனைக் குறிப்பதாகவோ அல்லது முருகனைக் குறிப்பதாகவோ கொள்ளலாம். பிரமன், 'தானே பிரணவத்தின் பொருள்' என்றோர் உண்மைக்குப் புறம்பான சொல் பகன்றான். அதன் விளைவுகளை அவன் உணராது கூறியதனால், 'அச்சமின்றி' என்பது பிரமனுக்குப் பொருந்தும்.
மாறாக, சிறுவன் என்று யாவரும் கருதிய முருகன், பிரமனைச் சிறைவைத்ததுடன், பிரமனின் படைப்புத் தொழிலினையும் தானே ஏற்றுக்கொண்டான். மேலும், 'பிரணவத்தின் பொருளினை நீ அறிவாயா' என்று கேட்ட, தனது தந்தையாகிய, சிவனை 'நீ சீடனாக வந்து உபதேசம் பெற்றுக்கொள்' என்று கூறி, 'தகப்பன்சாமி' என்ற பெயர் பெற்ற முருகனுக்கு, 'அச்சமின்றி' என்பது மிக்கு பொருந்தும்.
Top
5 - மும்மாரு - மும்முறை உத்தரவிட்டு - அறுதியிட்டு என.
6 - முர புராருலு - முர, புராரிகள் - முராரி - அரி; புராரி - அரன்
8 - வித்3யாத4ர - வித்தியாதரர் - கந்தருவர்
11 - வீராது3லகு - வீரர்களுக்கு - இவ்விடத்தில் இச்சொல் மேற்கூறிய ஒன்பது வீரர்களைக் குறிக்காது.
13 - பரம த்3ரோஹியைன ஸூ1ர பத்3ம - பரம துரோகியான சூரபதுமன் - அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார், 'மாயை' என்பவளை ஏவி, 'தேவர்களின் குருவான, கசியப முனிவரிடம் சென்று, (தேவர்களை அழிப்பதற்கென்றே) மக்களைப் பெறுவாய்' என்று கூற, அங்ஙனமே, கசியப முனிவரை அண்டிய மாயையினுக்கு, மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் சூரபதுமனும் ஒருவனாவான். எனவே, அவர்கள் தேவர்களின் பரம துரோகிகள் எனப்படுவர்.
Top
14 - குமார - குமாரன் - காஞ்சி பரமாச்சாரியார், இச்சொல்லுக்கு, அழகானதோர் விளக்கம் கூறியுள்ளார். 'மாரன்' என்று மன்மதனுக்குப் பெயராகும். அழகில், மாரனையும் பழிப்பவன், 'குத்ஸித மார' என்பதனால் 'கு+மார' என்று வழங்கும் என்கின்றார்.
முருகனைக் குறித்து, காஞ்சி பரமாச்சாரியார், அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் கூறிய முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய, 'ஸ்ரீ ஸுப்3ரஹ்மண்யாய நமஸ்தே' என்ற கீர்த்தனையின் முழு விளக்கத்தினை காணவும்.
15 - த்யாக3ராஜ - தியாகராசன் - இங்கு (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்
உணர்ந்து பார்க்க முடியாத - உள்ளத்திற்கெட்டாத என
தாராபதி - மதி
Top
Updated on 14 Sep 2010
No comments:
Post a Comment