நே பொக3ட3குண்டே நீகேமி கொத3வோ
1நீ மனஸு தெலிஸெ கத3ரா ஓ ராம
அனுபல்லவி
ப்ராபு கல ஸு1க ஸனக ப்ரஹ்லாத3 நாரத3
2பரமேஸ1 3ருத்3ராதி3 ப4க்துலர்சிம்பக3 (நே)
சரணம்
பு4ஜியிம்ப 4பெட்ட ஸதி பு3து4லு ஸாமாஜிகுலு
ப4ஜியிம்ப ஸோத3ருலு பவன ஸூனுட3ஜ
பி3டௌ3ஜாதி3 ஸுருலாப்துலைனாரு
நீரஜ நயன ஸ்ரீ த்யாக3ராஜ நுத பா3லுட3கு3 (நே)
பொருள் - சுருக்கம்
ஓ இராமா! கமலக்கண்ணா! தியாகராசன் போற்றுவோனே!
- நான் போற்றாதிருந்தால் உனக்கென்ன குறையோ?
- உனதுள்ளம் தெரிந்ததல்லவோ!
- (உனது) ஆதரவுடைய சுகர், சனகர், பிரகலாதன், நாரதர், பரமேசன் ருத்திரன் ஆகிய தொண்டர்கள் (உன்னை) வழிபட,
- நான் போற்றாதிருந்தால் உனக்கென்ன குறையோ?
- உணவிட, கவனிக்க மனைவி;
- அறிஞர்கள், சமூகத்தினர் சேவித்திட;
- சோதரர்கள், வாயு மைந்தன், பிரமன், இந்திரன் முதலான வானோர் வேண்டியவராயினர்;
- உணவிட, கவனிக்க மனைவி;
- சிறுவனாகிய நான் போற்றாதிருந்தால் உனக்கென்ன குறையோ?
- உனதுள்ளம் தெரிந்ததல்லவோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நே/ பொக3ட3க/-உண்டே/ நீகு/-ஏமி/ கொத3வோ/
நான்/ போற்றாது/ இருந்தால்/ உனக்கு/ என்ன/ குறையோ/
நீ/ மனஸு/ தெலிஸெ/ கத3ரா/ ஓ ராம/
உனது/ உள்ளம்/ தெரிந்தது/ அல்லவோ/ ஓ இராமா/
அனுபல்லவி
ப்ராபு/ கல/ ஸு1க/ ஸனக/ ப்ரஹ்லாத3/ நாரத3/
(உனது) ஆதரவு/ உடைய/ சுகர்/ சனகர்/ பிரகலாதன்/ நாரதர்/
பரமேஸ1/ ருத்3ர/-ஆதி3/ ப4க்துலு/-அர்சிம்பக3/ (நே)
பரமேசன்/ ருத்திரன்/ ஆகிய/ தொண்டர்கள்/ (உன்னை) வழிபட/ நான் போற்றாதிருந்தால்...
சரணம்
பு4ஜியிம்ப/ பெட்ட/ ஸதி/ பு3து4லு/ ஸாமாஜிகுலு/
உணவிட/ கவனிக்க/ மனைவி/ அறிஞர்கள்/ சமூகத்தினர்/
ப4ஜியிம்ப/ ஸோத3ருலு/ பவன/ ஸூனுடு3/-அஜ/
சேவித்திட/ சோதரர்கள்/ வாயு/ மைந்தன்/ பிரமன்/
பி3டௌ3ஜ/-ஆதி3/ ஸுருலு/-ஆப்துலு/-ஐனாரு/
இந்திரன்/ முதலான/ வானோர்/ வேண்டியவர்/ ஆயினர்/
நீரஜ/ நயன/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ பா3லுட3கு3/ (நே)
கமல/ கண்ணா/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றுவோனே/ சிறுவனாகிய/ நான் போற்றாதிருந்தால்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலிஸெ - தெலிஸி : அடுத்து வரும் 'கத3ரா' (அல்லவா) என்ற சொல்லினால், 'தெலிஸி' என்பது தவறாகும்.
Top
மேற்கோள்கள்
3 - ருத்3ர - 'ருத்திர' என்ற சொல்லின் விளக்கம் நோக்கவும்.
Top
விளக்கம்
1 - நீ மனஸு தெலிஸெ கத3ரா - உனதுள்ளம் தெரிந்ததல்லவோ! - 'நான் உன்னைப் புகழவில்லையென உனக்குக் குறை என எனக்குத் தெரியும்' என்று பொருள்படும். இந்தப் பாடல், இறைவனைத் தலைவனாகவும், தொண்டன் தன்னைத் தலைவியாகவும் உணர்ந்து, உறவாடும் 'நாயகி பா4வ'த்தில் உள்ளது. இஃது ஊடலாகும்.
2 - பரமேஸ1 ருத்3ர - பரமேசன், ருத்திரன் ஆகிய இரண்டுமே சிவனைக் குறிப்பதனால், 'பரமேசன்', ருத்திரனுக்கு அடைமொழியாகக் கொள்ளப்பட்டது.
4 - பெட்ட - இச்சொல்லுக்கு, 'இடுதல்' என்று பொருள் உண்டு. எனவே, இதற்குமுன் வரும் 'பு4ஜியிம்ப' என்ற சொல்லுடன் இணைத்து 'உணவிட' என்ற பொருள் கொள்ளலாம். ஆனால், பொதுவாக, இச்சொல், 'தேவைகளைக் கவனிக்க' என்ற பொருளில் பயன்படுத்தப்படும். எனவே, அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது. ஏனென்றால், 'பு4ஜியிம்ப' என்ற சொல்லே 'உணவிட' என்று பொருள்படும்.
Top
Updated on 15 Sep 2010
No comments:
Post a Comment