Saturday, September 11, 2010

தியாகராஜ கிருதி - நீ த3ய ராவலெ - ராகம் தோடி - Ni Daya Ravale - Raga Todi

பல்லவி
நீ த3ய ராவலெ கா3க நேனெந்த வாட3னு ராம

அனுபல்லவி
வேத3 ஸா1ஸ்த்ர புராணமுலன்னி
நீவே க3தியனுசு மொர பெட்டு க3னுக (நீ)

சரணம்
சரணம் 1
1ஸார-ஸார காந்தார சர மத3
விதா3ர ஸுந்த3ராகார ஸுகு3
2ஸுகுமார மா ரமண நீரஜாப்த குல
பாராவார 3ஸுதா4 ரஸ பூர (நீ)


சரணம் 2
ஸ்ரீ ஹரே வர விதே3ஹஜாதி4ப வி-வாஹ
3ளித ரிபு தே34ஸே1ஷ ஸம
பா3
ஸஜ்ஜன ஸமூஹ வைரி மத3
தா3ஹ மௌனி ஹ்ரு2த்3-கே3ஹ நாது3பை (நீ)


சரணம் 3
ஆதி3 தே3வ தே3வாதி3 ம்ரு2க்3
ஸனகாதி3 வினுத காமாதி3 ஷட்3கு3
ஹராதி3 மத்45ரஹிதாதி3 த்யாக3-
ராஜாதி3
வந்தி36விவாதி3 மத3 ஹரண (நீ)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • சாரத்தின் சாரமே! அடவியில் சரிப்போர் செருக்கினை அழித்தோனே! அழகிய உருவத்தோனே! நற்குணத்தோனே! இளைஞனே! மா ரமணா! தாமரைக்கு இனியோன் குலக் கடலோனே! அமிழ்தச் சாறு நிறைந்தோனே!
  • அரியே! உயர் விதேகமன்னன் மகள் மணாளா! பறவை வாகனனே! பகைவரின் உடலைப் பிளந்தோனே! சேடன் நிகர் கைகளோனே! நன்மக்கள் சமூகத்தோனே! பகைவர் செருக்கினை அழித்தோனே! முனிவர் இதயத்துறைவோனே!
  • ஆதி தேவா! வானோர் ஆகியோரால் வேண்டப்படுவோனே! சனகாதியரால் போற்றப்பெற்றோனே! காமாதி ஆறு குணங்களை அழிப்போனே! முதல் நடு முடிவற்றோனே! ஆதி தியாகராசன் ஆகியோர் வந்திப்போனே! விவாதிகள் செருக்கை அழிப்போனே!

  • உனது தயை வரவேண்டுமேயன்றி, நானெம்மாத்திரம்!
    • வேத, சாத்திர, புராணங்கள் யாவும் நீயே கதியென முறையிடுமன்றோ!

  • என்மீதுனது தயை வரவேண்டுமேயன்றி, நானெம்மாத்திரம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3ய/ ராவலெ/ கா3க/ நேனு/-எந்த வாட3னு/ ராம/
உனது/ தயை/ வரவேண்டுமே/ யன்றி/ நான்/ எம்மாத்திரம்/ இராமா/


அனுபல்லவி
வேத3/ ஸா1ஸ்த்ர/ புராணமுலு/-அன்னி/
வேத/ சாத்திர/ புராணங்கள்/ யாவும்/

நீவே/ க3தி/-அனுசு/ மொர/ பெட்டு/ க3னுக/ (நீ)
நீயே/ கதி/ யென/ முறை/ இடும்/ அன்றோ/


சரணம்
சரணம் 1
ஸார/-ஸார/ காந்தார/ சர/ மத3/
சாரத்தின்/ சாரமே/ அடவியில்/ சரிப்போர்/ செருக்கினை/

விதா3ர/ ஸுந்த3ர/-ஆகார/ ஸுகு3ண/
அழித்தோனே/ அழகிய/ உருவத்தோனே/ நற்குணத்தோனே/

ஸுகுமார/ மா/ ரமண/ நீரஜ/-ஆப்த/ குல/
இளைஞனே/ மா/ ரமணா/ தாமரைக்கு/ இனியோன்/ குல/

பாராவார/ ஸுதா4/ ரஸ/ பூர/ (நீ)
கடலோனே/ அமிழ்த/ சாறு/ நிறைந்தோனே/


சரணம் 2
ஸ்ரீ ஹரே/ வர/ விதே3ஹஜா/-அதி4ப/ வி/-வாஹ/
ஸ்ரீ ஹரி/ உயர்/ விதேகமன்னன் மகள்/ மணாளா/ பறவை/ வாகனனே/

3ளித/ ரிபு/ தே3ஹ/ ஸே1ஷ/ ஸம/
பிளந்தோனே/ பகைவரின்/ உடலை/ சேடன்/ நிகர்/

பா3ஹ/ ஸஜ்ஜன/ ஸமூஹ/ வைரி/ மத3/
கைகளோனே/ நன்மக்கள்/ சமூகத்தோனே/ பகைவர்/ செருக்கினை/

தா3ஹ/ மௌனி/ ஹ்ரு2த்3/-கே3ஹ/ நாது3பை/ (நீ)
அழித்தோனே/ முனிவர்/ இதயத்துள்/ உறைவோனே/ என்மீது/ உனது...


சரணம் 3
ஆதி3/ தே3வ/ தே3வ/-ஆதி3/ ம்ரு2க்3ய/
ஆதி/ தேவா/ வானோர்/ ஆகியோரால்/ வேண்டப்படுவோனே/

ஸனக-ஆதி3/ வினுத/ காம-ஆதி3/ ஷட்3/-கு3ண/
சனகாதியரால்/ போற்றப்பெற்றோனே/ காமாதி/ ஆறு/ குணங்களை/

ஹர/-ஆதி3/ மத்4ய/ ரஹித/-ஆதி3/ த்யாக3ராஜ/-
அழிப்போனே/ முதல்/ நடு (முடிவு)/ அற்றோனே/ ஆதி/ தியாகராசன்/

ஆதி3/ வந்தி3த/ விவாதி3/ மத3/ ஹரண/ (நீ)
ஆகியோர்/ வந்திப்போனே/ விவாதிகள்/ செருக்கை/ அழிப்போனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸுதா4 ரஸ பூர - ஸுதா4 ரஸ பூரண.

4 - ஸே1ஷ ஸம பா3 - ஸே1ஷ ஸம வாஹ : பிற்கூறியதற்கு ஏதும் சரியான பொருள் இருப்பதாகத்தெரியவில்லை.

Top

மேற்கோள்கள்
1 - ஸார-ஸார - சாரத்தின் சாரம் - பரம்பொருளின் இலக்கணம். - இது குறித்து, ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதத்தின் கீழ்க்கண்ட செய்யுட்கள் நோக்கவும் -

"உபநிடதம் கூறுவதாவது - சத்தியத்தின் சத்தியமென.
அது மூச்சுக்காற்றின் மூச்சுக்காற்றாகும் - இதுவே மெய்ப்பொருளாம். "(II.i.20)

"மூச்சுக்காற்றின் மூச்சுக்காற்றென, பார்வையின் பார்வையென, செவிகளின் செவியென, உள்ளத்தின் உள்ளமென அறிந்தோர், 'பிரமம்' எனப்படும் பழம்பொருளினை உணர்ந்தோராம்." (IV.iv.18)

Top

2 - ஸுகுமார - இளைஞன் - விசுவாமித்திர முனிவரின் வேள்வி காப்பதற்கு, அவர் பின்தொடர்ந்த இளைஞனின் உருவம் என.

5 - ஆதி3 த்யாக3ராஜ - சில புத்தகங்களில், இச்சொல், சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூரில், இறைவனுக்கு 'தியாகராஜர்' என்றோர் பெயர். 'திருக்காரவாசல்' எனப்படும் திருக்காராயிலில், சிவன் ‘ஆதி தியாகராஜர்' - 'ஆதி விடங்கர்’ என அறிப்படுவார்.

6 - விவாதி3 மத3 ஹரண - விவாதிகள் செருக்கினை அழித்தவன் - வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 109-வது அத்தியாயம்), ராமனைக் காட்டிலிருந்து திரும்பச் செய்வதற்கு, 'நாஸ்திக வாதம்' எனும் குதர்க்கம் செய்த, 'ஜாபாலி' என்ற முனிவரை, இராமன் வெகுவாகக் கண்டித்துப் பேசியதைக் காணலாம்.

Top

விளக்கம்
4 - ஸே1ஷ ஸம பா3 - சேடன் நிகர் கைகளோன் - நீண்ட கைகளோன் என.

அடவியில் சரிப்போர் - அரக்கர்
மா ரமணன் - இலக்குமி மணாளன் - அரி
தாமரைக்கு இனியோன் - பரிதி
விதேகமன்னன் - சனகன்
விதேகமன்னன் மகள் - வைதேகி - சீதை
சனகாதி - சனகர் முதலாக பிரமனின் நான்கு மைந்தர்கள்.
காமாதி ஆறு குணங்கள் - காமம் முதலாக உட்பகைவர் அறுவர்.
ஆதி தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.
விவாதி - குதர்க்கம் செய்வோர்.

Top


Updated on 12 Sep 2010

No comments: