Saturday, September 4, 2010

தியாகராஜ கிருதி - க3தி நீவனி - ராகம் தோடி - Gati Nivani - Raga Todi

பல்லவி
3தி நீவனி நே கோரி வச்சிதி தல்லி பராகா

அனுபல்லவி
மதினியெந்தோ வெதகி
ஸம்மதினி ஸ்ரீ ப்ரவ்ரு2த்34
ஸ்ரீ-மதி நீ பத3 யுக3முல நே நெர
நம்மிதினி ப்3ரோவுமிக நிஜ தா3ஸுலகு (க3)

சரணம்
சரணம் 1
பரமௌ ஸ்ரீ 1தபஸ்தீர்த2 நக3மந்து3
நெலகொன்ன பரமானந்தீ3 பொக33
தரமா ப்3ரஹ்மகைனனு த4ரலோ நீ
ஸரி கான தல்லி நீவாட3னு கானா
பரிதாபமுலெல்ல தொலக3யா 2ரக
புர நாது2
ஜத கூடி3யபீ4ஷ்ட
வரமுலிச்சு தை3வமு 3நீவனி மனு
ஸ்தி2ர மதுலை
காசினாரு க3னுக (க3)


சரணம் 2
ஈ புரமுன பா3கு3 காபுரமு ஸேயுவாரே
புண்யமு ஜேஸிரோ 4ஸ்ரீ-புர நிலயே
ப்ராபு கோரியுன்னானு
அம்ப3 பருல நேனு வேட33 லேனு
5ஜூபு ஜூபு ஸேயக நீவே த3ரி
தா3பு கானி அன்யுலெவரு நாயெட3
ரேபு மாபனக நீ மஹிமலு ப3லு
கோ3புரம்பு3 கானி ஸுஜனி (க3)


சரணம் 3
ராகா ஸ1ஸி1 வத3னே 6ஸர்வ லோக
நாயகி
வினுமாயனே வேல்புலகாதி3யௌ
நீ கடாக்ஷமு சேதயேக
சித்தமைனந்து3கு அம்ப3 இங்க நிர்த3ய-
யெந்து3கு 7நீகனி த4ன தா4ன்யமுல கொரகுயீ
லோகுல நே மாடி மாடிகடு3கு3
சௌக கானி நீ கீர்திகி-
நெந்தா38வின்னவிந்து த்யாக3ராஜுனி (க3)


பொருள் - சுருக்கம்
  • தாயே!
  • சீர் செழிப்புடைத் திருமதியே!
  • உயர்ந்த திருத்தவத்துறை நகரத்தினில் நிலைபெற்ற பேரானந்தியே!
  • திருபுரத்திலுறையே! அம்பையே! கனிவுடையவளே!
  • முழு மதி வதனத்தினளே! அனைத்துலகிற்கும் நாயகியே!

  • உண்மையான தொண்டர்களுக்கு கதி நீயென நான் கோரி வந்தேன்;
  • அசட்டையோ?

    • உள்ளத்தினில் மிக்குத் தேடி, முழு மனதுடன், உனது திருவடி இணையினை நான் மிக்கு நம்பினேன்;
    • இனிக் காப்பாய்.

    • (உன்னைப்) புகழத் தரமோ, பிரமனுக்காகிலும்?
    • புவியினில் உனக்கு நிகர் காணேன்;
    • நான் உன்னவனன்றோ?
    • பரிதாபங்கள் யாவும் தொலைய, இவ்வழகிய நகரத்தின் நாயகர்கள் ஒன்றுகூடி, விரும்பிய வரங்களருளும் தெய்வம் நீயென, மனதினில் உறுதி பூண்டு காத்துள்ளனர்.

    • இந்நகரத்தினில் சிறந்த குடித்தனம் செய்வோர் என்ன புண்ணியம் செய்தனரோ!
    • ஆதரவு கோரியுள்ளேன்;
    • மற்றவரை நான் வேண்டேன்;
    • மேலாக நோக்காதே;
    • நீயே புகலும் அடைக்கலமும்; அன்றி, மற்றவர் எவருளர் எனக்கு?
    • நாளை, மறுநாளெனாதே;
    • உனது மகிமைகள் உயர் கோபுரத்தளவன்றோ?

    • 'கேளாய்' எனும் கடவுளருக்கும் ஆதியாகிய உனது கடைக்கண் பார்வையினால், ஒருமித்த மனத்தினனானதற்கு, இன்னும் தயையின்மை ஏனோ?
    • உனக்கென, பணம், உணவுப் பண்டங்களுக்காக, இந்த மனிதர்களை நான், திரும்பத் திரும்ப வேண்டுதல், உனது புகழுக்கு இழுக்கானாலும், எதுவரை (உன்னிடம்) விண்ணப்பம் செய்வேன்?


  • தியாகராசனின் கதி நீயென நான் கோரி வந்தேன்;
  • அசட்டையோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3தி/ நீவு/-அனி/ நே/ கோரி/ வச்சிதி/ தல்லி/ பராகா/
கதி/ நீ/ யென/ நான்/ கோரி/ வந்தேன்/ தாயே/ அசட்டையோ/


அனுபல்லவி
மதினி/-எந்தோ/ வெதகி/
உள்ளத்தினில்/ மிக்கு/ தேடி/

ஸம்மதினி/ ஸ்ரீ/ ப்ரவ்ரு2த்34/
முழு மனதுடன்/ சீர்/ செழிப்புடை/

ஸ்ரீ-மதி/ நீ/ பத3/ யுக3முல/ நே/ நெர/
திருமதியே/ உனது/ திருவடி/ இணையினை/ நான்/ மிக்கு/

நம்மிதினி/ ப்3ரோவுமு/-இக/ நிஜ/ தா3ஸுலகு/ (க3)
நம்பினேன்/ காப்பாய்/ இனி/ உண்மையான/ தொண்டர்களுக்கு/ கதி...


சரணம்
சரணம் 1
பரமௌ/ ஸ்ரீ தபஸ்தீர்த2/ நக3ரமு-அந்து3/
உயர்ந்த/ திருத்தவத்துறை/ நகரத்தினில்/

நெலகொன்ன/ பரம-ஆனந்தீ3/ பொக33/
நிலைபெற்ற/ பேரானந்தியே/ (உன்னைப்) புகழ/

தரமா/ ப்3ரஹ்மகு/-ஐனனு/ த4ரலோ/ நீ/
தரமோ/ பிரமனுக்கு/ ஆகிலும்/ புவியினில்/ உனக்கு/

ஸரி/ கான/ தல்லி/ நீவாட3னு/ கானா/
நிகர்/ காணேன்/ தாயே/ (நான்) உன்னவன்/ அன்றோ/

பரிதாபமுலு/-எல்ல/ தொலக3/-ஆ/ ரக/
பரிதாபங்கள்/ யாவும்/ தொலைய/ அந்த/ அழகிய/

புர/ நாது2ல/ ஜத/ கூடி3/-அபீ4ஷ்ட/
நகரத்தின்/ நாயகர்கள்/ ஒன்று/ கூடி/ விரும்பிய/

வரமுலு/-இச்சு/ தை3வமு/ நீவு/-அனி/ மனு/
வரங்கள்/ அருளும்/ தெய்வம்/ நீ/ யென/ மனதினில்/

ஸ்தி2ர மதுலை/ காசினாரு/ க3னுக/ (க3)
உறுதி பூண்டு/ காத்துள்ளனர்/ எனவே/ கதி...


சரணம் 2
ஈ/ புரமுன/ பா3கு3/ காபுரமு/ ஸேயுவாரு/-ஏ/
இந்த/ நகரத்தினில்/ சிறந்த/ குடித்தனம்/ செய்வோர்/ என்ன/

புண்யமு/ ஜேஸிரோ/ ஸ்ரீ-புர/ நிலயே/
புண்ணியம்/ செய்தனரோ/ திருபுரத்தில்/ உறையே/

ப்ராபு/ கோரி/-உன்னானு/
ஆதரவு/ கோரி/ யுள்ளேன்/

அம்ப3/ பருல/ நேனு/ வேட33 லேனு/
அம்பையே!/ மற்றவரை/ நான்/ வேண்டேன்/

ஜூபு ஜூபு ஸேயக/ நீவே/ த3ரி/
மேலாக நோக்காதே/ நீயே/ புகலும்/

தா3பு/ கானி/ அன்யுலு/-எவரு/ நாயெட3/
அடைக்கலமும்/ அன்றி/ மற்றவர்/ எவர்/ (உளர்) எனக்கு/

ரேபு/ மாபு/-அனக/ நீ/ மஹிமலு/ ப3லு/
நாளை/ மறுநாள்/ எனாதே/ உனது/ மகிமைகள்/ உயர்/

கோ3புரம்பு3/ கானி/ ஸுஜனி/ (க3)
கோபுரத்தளவு/ அன்றோ/ கனிவுடையவளே/


சரணம் 3
ராகா ஸ1ஸி1/ வத3னே/ ஸர்வ/ லோக/
முழு மதி/ வதனத்தினளே/ அனைத்து/ உலகிற்கும்/

நாயகி/ வினுமா/-அனே/ வேல்புலகு/-ஆதி3யௌ/
நாயகியே/ 'கேளாய்/ எனும்/ கடவுளருக்கும்/ ஆதியாகிய/

நீ/ கடாக்ஷமு சேத/-ஏக/
உனது/ கடைக்கண் பார்வையினால்/ ஒருமித்த/

சித்தமு/-ஐனந்து3கு/ அம்ப3/ இங்க/ நிர்த3ய/-
மனத்தினன்/ ஆனதற்கு/ அம்பையே/ இன்னும்/ தயையின்மை/

எந்து3கு/ நீகு/-அனி/ த4ன/ தா4ன்யமுல கொரகு/-ஈ/
ஏனோ/ உனக்கு/ என/ பணம்/ உணவுப் பண்டங்களுக்காக/ இந்த/

லோகுல/ நே/ மாடி/ மாடிகி/-அடு3கு3ட/
மனிதர்களை/ நான்/ திரும்ப/ திரும்ப/ வேண்டுதல்/

சௌக/ கானி/ நீ/ கீர்திகி/-
இழுக்கு/ ஆனாலும்/ உனது/ புகழுக்கு/

எந்தா3க/ வின்னவிந்து/ த்யாக3ராஜுனி/ (க3)
எதுவரை/ (உன்னிடம்) விண்ணப்பம் செய்வேன்/ தியாகராசனின்/ கதி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நீவனி மனு ஸ்தி2ர மதுலை - நீவனுமனு ஸ்தி2ர மதுலை : பின் கொடுக்கப்பட்டுள்ளதனை, 'நீவு அனுமு அனு ஸ்தி2ர மதுலை' என்று பிரிக்கலாம். ஆனால், அதற்கு, இந்த இடத்தில், பொருத்தமான பொருள் ஏதுமில்லை. ஆனால், முதலில் கொடுக்கப்பட்டதில் 'மனு' என்ற சொல் சரியாகப் பொருந்தவில்லை. இது 'மனத்தினில்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

5 - ஜூபு ஜூபு - ஜூபு ஜாகு3.
6 - ஸர்வ லோக நாயகி - ஸர்வ லோக நாயிகே.
8 - வின்னவிந்து - வின்னபிந்து

Top

மேற்கோள்கள்
1 - தபஸ்தீர்த2 நக3ரமு - திருத்தவத்துறை - இன்றைய லால்குடி - தல வரலாறு

கோவிலைப் பற்றிய விவரங்கள்

Top

விளக்கம்
2 - ரக புர நாது2 - (அழகிய நகரத்தின் நாயகர்களின்) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில் 'நாது2ல' என்பதற்கு பதிலாக, 'நாது2லு' என்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். 'நாது2ல' என்பது சரியானால், தியாகராஜர், தம்மையும் அந்நகர நாயகர்களுடன் சேர்த்துக்கொள்வதாகக் கொள்ளலாம். ஆனால், அங்ஙனம் பொருள் கொண்டால், 'காசினாமு' (காத்திருக்கின்றோம்) என்றிருக்க வேண்டும். ஆனால், கொடுக்கப்பட்டுள்ளதோ 'காசினாரு' (காத்துள்ளனர்) என்று. எனவே, இவ்விரண்டு சொற்களின் அமைப்பும், ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளதாகக் கருதுகின்றேன்.

'ரக புர நாது2ல' என்பதற்கு, சில புத்தகங்களில், 'புவியரசர்கள்' என்றும், மற்ற புத்தகங்களில், 'எண் திசைப் பாலர்கள்' எண்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, 'அழகிய நகரத்தின் நாயகர்கள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

4 - ஸ்ரீ-புர - திருத்தவத்துறைக்கு, 'ஸ்ரீபுரம்' என்றொரு பெயர் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அல்லது, இதற்கு 'ஸ்ரீ சக்ரம்' என்ற பொருளும் கொள்ளலாம்.

Top

7 - நீகனி த4ன தா4ன்யமுல - உனக்கென பணம் உணவுப்பண்டங்கள் - உனது வழிபாட்டுக்கென என்று பொருள்படும்.

திருமதி - திருத்தவத்துறை நாயகியின் பெயர்
நாளை, மறுநாளெனாதே - தட்டிக்கழிக்காதே என
'கேளாய்' - கடவுளரும் தாயிடம் வேண்டுவதாக

Top


Updated on 04 Sep 2010

No comments: