இன்னாள்ள வலெ விந்த ஸேயகே
நீவாட3னிபுடை3தி த4ர்மாம்பி3கே
அனுபல்லவி
அன்யுல நெர நம்முடவல்ல ப2லமு
லேத3ம்ம ஓ த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம்
சரணம் 1
என்ன ரானி ஜனனமுலெத்த நா தரமா
வத்3த3ன ராதா3 த4ர்மாம்பி3கே
மனஸுன விஷயாது3லண்டனீக நன்னு
மன்னிஞ்சு த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 2
காமாதி3 கு3ணமுல சேத கா3ஸி லேக
கருணிஞ்சு த4ர்மாம்பி3கே
நீ மாயல சேத தகி3லிம்பகே ஓ
நிருபம த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 3
1அலருசு வச்சு அர்ப4குனி தல்லி ரீதி-
யாது3கோ த4ர்மாம்பி3கே
2மலயஜ க3ந்தி4 ஸந்த3டி3யனி
மனஸுன மரவகே த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 4
3கலுவரிஞ்சின நனு ஜூசி நீ மனஸேல
கருக3தே3 த4ர்மாம்பி3கே
கி3லுகு ஸொம்முலதோனு 4ஸி1ஸு1வுகு
பாலு தாகி3ஞ்சின த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 5
கலகலமனி பால வெலஸி நீ முக2முனு
கனிபிம்பு த4ர்மாம்பி3கே
லலித கு3ணமு கல்கு3 5லலித வித்3யா
விலாஸினி த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 6
ஆடலகை பலிகினாட3னி
எஞ்சக அம்பி3கே த4ர்மாம்பி3கே
நாடி மொத3லுகொனி நம்மின வாட3னு
நளினாக்ஷி த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 7
பாத3முலகு நேனு பலுமாரு ம்ரொக்கிதி
பாவனி த4ர்மாம்பி3கே
பேத3 ஸாது4ல பா4க்3யமு நீவனுசு-
நெஞ்சிதி த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம் 8
ராஜீவ ப4வுனகு பொக3ட3 தரமா
நிரஞ்ஜனி த4ர்மாம்பி3கே
ராஜ ஸே1க2ரி த்யாக3ராஜுனி ஸததமு
ரக்ஷிஞ்சு த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
பொருள் - சுருக்கம்
- ஓ அறம் வளர்த்த நாயகியே!
- ஓ ஈன்றவளே!
- ஓ நிகரற்றவளே!
- மலைய மாருதத்தின் நறுமணத்தினளே!
- குலுங்கும் நகைகளுடன் குழவியினுக்குப் பாலூட்டியவளே!
- இனிய குணங்களுடைய, அருங்கலைகளில் விளங்குபவளே!
- தாயே, கமலக் கண்ணீ!
- புனிதப்படுத்துபவளே!
- மாசற்றவளே! பிறையணிபவளே!
- இத்தனை நாள் போன்று வேற்றானாக்காதே; உன்னவனாக இப்போழ்தாகினேன்.
- பிறரை மிக்கு நம்புவதனால் பயன் இல்லையம்மா.
- எண்ணற்ற பிறவிகளெடுக்க என்னால் இயலுமா? வேண்டாமெனலாகாதா?
- மனத்தினை விடயங்கள் முதலானவை தீண்டாதிருக்க என்னை மன்னிப்பாய்.
- இச்சை முதலான குணங்களினால் துயருறாது கருணை புரிவாய்.
- உனது மாயையினில் சிக்கவைக்காதே.
- அலறிக் கொண்டு வரும் குழவியின் தாய் போன்று ஆதரிப்பாய்.
- கூச்சலென மனத்தில் மறவாதே.
- பிதற்றும் என்னைக் கண்டு உனது மனமேன் உருகாதோ?
- கலகலவென அருகில் ஒளிர்ந்து உனது முகத்தினைக் காண்பிப்பாய்.
- விளையாட்டாகப் பகன்றானென எண்ணாதே.
- அன்று முதலாக உன்னை நம்பினவனாவேன்.
- உனது திருவடிகளை நான் பன்முறைத் தொழுதேன்.
- ஏழை சாதுக்களின் பேறு நீயென எண்ணினேன்.
- மலரோனுக்கும் உன்னைப் போற்றத் தரமா?
- தியாகராசனை எவ்வமயமும் காப்பாய்.
- பிறரை மிக்கு நம்புவதனால் பயன் இல்லையம்மா.
- இத்தனை நாள் போன்று வேற்றானாக்காதே; உன்னவனாக இப்போழ்தாகினேன்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ள/ வலெ/ விந்த/ ஸேயகே/
இத்தனை நாள்/ போன்று/ வேற்றான்/ ஆக்காதே/
நீவாட3னு/-இபுடு3/-ஐதி/ த4ர்மாம்பி3கே/
உன்னவனாக/ இப்போழ்து/ ஆகினேன்/ அறம் வளர்த்த நாயகியே/
அனுபல்லவி
அன்யுல/ நெர/ நம்முடவல்ல/ ப2லமு/
பிறரை/ மிக்கு/ நம்புவதனால்/ பயன்/
லேது3/-அம்ம/ ஓ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
இல்லை/ அம்மா/ ஓ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம்
சரணம் 1
என்ன ரானி/ ஜனனமுலு/-எத்த/ நா/ தரமா/
எண்ணற்ற/ பிறவிகள்/ எடுக்க/ என்னால்/ இயலுமா/
வத்3து3/-அன/ ராதா3/ த4ர்மாம்பி3கே/
வேண்டாம்/ எனல்/ ஆகாதா/ அறம் வளர்த்த நாயகியே/
மனஸுன/ விஷய/-ஆது3லு/-அண்டனு/-ஈக/ நன்னு/
மனத்தினை/ விடயங்கள்/ முதலானவை/ தீண்டாது/ இருக்க/ என்னை/
மன்னிஞ்சு/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
மன்னிப்பாய்/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 2
காம/-ஆதி3/ கு3ணமுல சேத/ கா3ஸி/ லேக/
இச்சை/ முதலான/ குணங்களினால்/ துயர்/ உறாது/
கருணிஞ்சு/ த4ர்மாம்பி3கே/
கருணை புரிவாய்/ அறம் வளர்த்த நாயகியே/
நீ/ மாயல சேத/ தகி3லிம்பகே/ ஓ/
உனது/ மாயையினில்/ சிக்கவைக்காதே/ ஓ/
நிருபம/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
நிகரற்ற/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 3
அலருசு/ வச்சு/ அர்ப4குனி/ தல்லி/ ரீதி/-
அலறிக் கொண்டு/ வரும்/ குழவியின்/ தாய்/ போன்று/
ஆது3கோ/ த4ர்மாம்பி3கே/
ஆதரிப்பாய்/ அறம் வளர்த்த நாயகியே/
மலயஜ/ க3ந்தி4/ ஸந்த3டி3/-அனி/
மலைய மாருதத்தின்/ நறுமணத்தினளே/ கூச்சல்/ என/
மனஸுன/ மரவகே/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
மனத்தில்/ மறவாதே/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 4
கலுவரிஞ்சின/ நனு/ ஜூசி/ நீ/ மனஸு/-ஏல/
பிதற்றும்/ என்னை/ கண்டு/ உனது/ மனம்/ ஏன்/
கருக3தே3/ த4ர்மாம்பி3கே/
உருகாதோ/ அறம் வளர்த்த நாயகியே/
கி3லுகு/ ஸொம்முலதோனு/ ஸி1ஸு1வுகு/
குலுங்கும்/ நகைகளுடன்/ குழவியினுக்கு/
பாலு/ தாகி3ஞ்சின/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
பால்/ ஊட்டிய/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 5
கலகலமனி/ பால/ வெலஸி/ நீ/ முக2முனு/
கலகலவென/ அருகில்/ ஒளிர்ந்து/ உனது/ முகத்தினை/
கனிபிம்பு/ த4ர்மாம்பி3கே/
காண்பிப்பாய்/ அறம் வளர்த்த நாயகியே/
லலித/ கு3ணமு/ கல்கு3/ லலித/ வித்3யா/
இனிய/ குணங்கள்/ உடைய/ அரும்/ கலைகளில்/
விலாஸினி/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
விளங்குபவளே/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 6
ஆடலகை/ பலிகினாடு3/-அனி/
விளையாட்டாக/ பகன்றான்/ என/
எஞ்சக/ அம்பி3கே/ த4ர்மாம்பி3கே/
எண்ணாதே/ தாயே/ அறம் வளர்த்த நாயகியே/
நாடி/ மொத3லுகொனி/ நம்மின/ வாட3னு/
அன்று/ முதலாக/ உன்னை/ நம்பினவனாவேன்/
நளின/-அக்ஷி/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
கமல/ கண்ணீ/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 7
பாத3முலகு/ நேனு/ பலுமாரு/ ம்ரொக்கிதி/
(உனது) திருவடிகளை/ நான்/ பன்முறை/ தொழுதேன்/
பாவனி/ த4ர்மாம்பி3கே/
புனிதப்படுத்துபவளே/ அறம் வளர்த்த நாயகியே/
பேத3/ ஸாது4ல/ பா4க்3யமு/ நீவு/-அனுசுனு/-
ஏழை/ சாதுக்களின்/ பேறு/ நீ/ என/
எஞ்சிதி/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
எண்ணினேன்/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம் 8
ராஜீவ/ ப4வுனகு/ பொக3ட3/ தரமா/
மலரோனுக்கும்/ உன்னை/ போற்ற/ தரமா/
நிரஞ்ஜனி/ த4ர்மாம்பி3கே/
மாசற்றவளே/ அறம் வளர்த்த நாயகியே/
ராஜ/ ஸே1க2ரி/ த்யாக3ராஜுனி/ ஸததமு/
பிறை/ அணிபவளே/ தியாகராசனை/ எவ்வமயமும்/
ரக்ஷிஞ்சு/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
காப்பாய்/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அலருசு - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'அலறிக்கொண்டு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்குச் சொல் 'அலரு' என்பதற்கு, அத்தகைய பொருள் இல்லை. 'அருசு' அல்லது 'அத3ரு' என்ற தெலுங்கு சொற்களுக்கே அத்தகைய பொருள் உண்டு. எனவே, தியாகாராஜர் 'அலறு' என்ற தமிழ்ச் சொல்லினைப் பயன்படுத்தியுள்ளாரா என்ற ஐயம் எழுகின்றது. இதே சொல்லினை, 'பா3கா3யனய்யா' என்ற கீர்த்தனையிலும், அதே பொருளில் அவர் பயன்படுத்தியுள்ளதாகக் கருத இடமுள்ளது. எனவே, 'அலறு' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது. அத்தகைய பொருள் இவ்விடம் பொருந்தும்.
3 - கலுவரிஞ்சின - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சரியான தெலுங்கு வடிவம், 'கலவரிஞ்சின' என்று கருதப்படுகின்றது.
Top
மேற்கோள்கள்
2 - மலயஜ - மலைய மாருதம் - மேற்குத் தொடர்ச்சி மலையினைக் குறிக்கும்.
4 - ஸி1ஸு1வுகு பாலு தாகி3ஞ்சின - குழவியினுக்குப் பாலூட்டிய - திருஞான சம்பந்தரைக் குறிக்கும். இந்நிகழ்ச்சி சீர்காழியில் நடைபெற்றதாகக் கூறப்படும். திருஞான சம்பந்தர்-1 and திருஞான சம்பந்தர்-2 நோக்கவும்.
Top
விளக்கம்
5 - லலித வித்3யா - அருங்கலைகள் - இசை, நாட்டியம் முதலானவற்றைக் குறிக்கும்.
விடயங்கள் - புலன்களினால் நுகரப்படும் பொருட்கள்
இச்சை முதலான குணங்கள் - காமம் முதலான உட்பகைவர் அறுவர்.
கூச்சலென - கும்பலென என்றும் கொள்ளலாம்
Top
Updated on 17 Aug 2010
No comments:
Post a Comment