Wednesday, August 18, 2010

தியாகராஜ கிருதி - எந்து3கு த3ய - ராகம் தோடி - Enduku Daya - Raga Todi

பல்லவி
எந்து3கு த3ய ராது3ரா ஸ்ரீ ராமசந்த்3ர நீ(கெந்து3கு)

அனுபல்லவி
ஸந்த3டி3யனி மரசிதிவோ இந்து3 லேவோ நீ(கெந்து3கு)

சரணம்
சரணம் 1
ஸாரெகு 1து3ர்-விஷய ஸாரமனுப4விஞ்சு
வாரி செலிமி ஸேய நேரக3 மேனு
ஸ்ரீ ராம ஸக3மாயெ ஜூசி ஜூசி
நீரஜ த3ள நயன நிர்மலாபக4ன நீ(கெந்து3கு)


சரணம் 2
தீரனி ப4வ நீரதி4 ஆரடி3 ஸைரிம்ப
நேரக3 24யமொந்த33 3பங்கஜ பத்ர
நீரு வித4
மல்லாட33 இட்டி நனு ஜூசி
நீரதா341ரீர நிருபம ஸூ1ர நீ(கெந்து3கு)


சரணம் 3
ஜாகே3ல இதி3 ஸமயமே காது3 ஜேஸிதே
ஏ க3தி பலுகவய்ய 4ஸ்ரீ ராம
நீவே கானி த3ரி லேத3ய்ய தீ3ன ஸ1ரண்ய
த்யாக3ராஜ வினுத தாரக சரித நீ(கெந்து3கு)


பொருள் - சுருக்கம்
  • இராமசந்திரா!
  • இராமா! தாமரையிதழ்க் கண்ணா! மாசற்ற உடலோனே!
  • மழைமுகில் வண்ண உடலோனே! இணையற்ற சூரனே!
  • எளியோர் புகலே! தியாகராசன் போற்றும், (பிறவிக்கடல்) கடத்தும் சரிதத்தோனே!

  • ஏன் தயை வாராதய்யா, உனக்கு?
  • கும்பலென மறந்தனையோ, அன்றி இங்கு (நீ) இல்லையோ?

    • எவ்வமயமும், தீய விடய சாரத்தினைத் துய்ப்போரின் இணக்கம் கொள்ள நேர்ந்தமையால், (எனது) உடல் நலிவுற்றது;

  • கண்டு கண்டும், உனக்கு ஏன் தயை வாராதய்யா?

    • தீராத பிறவிக்கடலின் போர் பொறுக்க நேர்ந்தமையால், அச்சம் கொண்டு, தாமரை இலை (மேல்) நீர் போன்று தத்தளிக்க,

  • இத்தகைய என்னைக் கண்டும், உனக்கு ஏன் தயை வாராதய்யா?

  • தயக்கமேன்? இது சமயமே அன்று; தயங்கினால், (எனக்கு) என்ன கதி, சொல்லய்யா.
  • நீயே அன்றி புகல் இல்லையய்யா.

  • உனக்கு ஏன் தயை வாராதய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/ த3ய/ ராது3ரா/ ஸ்ரீ ராமசந்த்3ர/ நீகு/-(எந்து3கு)
ஏன்/ தயை/ வாராதய்யா/ ஸ்ரீ ராமசந்திரா/ உனக்கு/


அனுபல்லவி
ஸந்த3டி3/-அனி/ மரசிதிவோ/ இந்து3/ லேவோ/ நீகு/-(எந்து3கு)
கும்பல்/ என/ மறந்தனையோ/ (அன்றி) இங்கு/ (நீ) இல்லையோ/ உனக்கு/ ஏன்...


சரணம்
சரணம் 1
ஸாரெகு/ து3ர்-விஷய/ ஸாரமு/-அனுப4விஞ்சு வாரி/
எவ்வமயமும்/ தீய விடய/ சாரத்தினை/ துய்ப்போரின்/

செலிமி/ ஸேய/ நேரக3/ மேனு/
இணக்கம்/ கொள்ள/ நேர்ந்தமையால்/ (எனது) உடல்/

ஸ்ரீ ராம/ ஸக3மு-ஆயெ/ ஜூசி/ ஜூசி/
ஸ்ரீ ராமா/ நலிவுற்றது/ கண்டு/ கண்டும்/

நீரஜ/ த3ள/ நயன/ நிர்மல/-அபக4ன/ நீகு/-(எந்து3கு)
தாமரை/ இதழ்/ கண்ணா/ மாசற்ற/ உடலோனே/ உனக்கு/ ஏன்...


சரணம் 2
தீரனி/ ப4வ/ நீரதி4/ ஆரடி3/ ஸைரிம்ப/
தீராத/ பிறவி/ கடலின்/ போர்/ பொறுக்க/

நேரக3/ ப4யமு/-ஒந்த33/ பங்கஜ/ பத்ர/
நேர்ந்தமையால்/ அச்சம்/ கொண்டு/ தாமரை/ இலை/

நீரு/ வித4மு/-அல்லாட33/ இட்டி/ நனு/ ஜூசி/
(மேல்) நீர்/ போன்று/ தத்தளிக்க/ இத்தகைய/ என்னை/ கண்டும்/

நீரத3/-ஆப4/ ஸ1ரீர/ நிருபம/ ஸூ1ர/ நீகு/-(எந்து3கு)
மழைமுகில்/ வண்ண/ உடலோனே/ இணையற்ற/ சூரனே/ உனக்கு/ ஏன்...


சரணம் 3
ஜாகு3/-ஏல/ இதி3/ ஸமயமே/ காது3/ ஜேஸிதே/
தயக்கம்/ ஏன்/ இது/ சமயமே/ அன்று/ தயங்கினால் (செய்தால்)/,

ஏ/ க3தி/ பலுகு/-அய்ய/ ஸ்ரீ ராம/
(எனக்கு) என்ன/ கதி/ சொல்/ அய்யா/ ஸ்ரீ ராமா/

நீவே/ கானி/ த3ரி/ லேது3/-அய்ய/ தீ3ன/ ஸ1ரண்ய/
நீயே/ அன்றி/ புகல்/ இல்லை/ அய்யா/ எளியோர்/ புகலே/

த்யாக3ராஜ/ வினுத/ தாரக/ சரித/ நீகு/-(எந்து3கு)
தியாகராசன்/ போற்றும்/ (பிறவிக்கடல்) கடத்தும்/ சரிதத்தோனே/ உனக்கு/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலிரண்டு சரணங்களும் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

1 - து3ர்-விஷய ஸாரமு - து3ர்-விஷய ஸாக3ரமு.

2 - 4யமொந்த33 - ப4யமந்த33.

3 - பங்கஜ பத்ர நீரு வித4மு - பங்கஜ பத்ர நீர விதி4.

4 - ஸ்ரீ ராம - ஸ்ரீ ராமசந்த்3ர.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
விடயம் - புலன் நுகர்ச்சி
தயக்கம் - தாமதம் என்றும் கொள்ளலாம்

Top


Updated on 18 Aug 2010

No comments: