Monday, July 19, 2010

தியாகராஜ கிருதி - ஆரகி3ம்பவே - ராகம் தோடி - Aragimpave - Raga Todi

பல்லவி
ஆரகி3ம்பவே பாலாரகி3ம்பவே

அனுபல்லவி
1(ரகு4)வீர ஜனகஜா கர பவித்ரிதமௌ வென்ன பா(லார)

சரணம்
ஸாரமைன தி3வ்யான்னமு 2ஷட்3ரஸ யுத ப4க்ஷணமுலு
தா3ர ஸோத3ராது3லதோ த்யாக3ராஜ வினுத பா(லார)


பொருள் - சுருக்கம்
இரகுவீரா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • ஏற்றருள்வாய்;
  • பாலேற்றருள்வாய்.
  • சனகன் மகள் கரங்களினால் புனிதமடைந்த வெண்ணையும் பாலும் ஏற்றருள்வாய்.
  • மனைவி, சோதரர்கள் ஆகியோருடன், இனிய, புனித அன்னம், அறுசுவை கூடிய உண்டிகள், பாலும் ஏற்றருள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஆரகி3ம்பவே/ பாலு/-ஆரகி3ம்பவே/
ஏற்றருள்வாய்/ பால்/ ஏற்றருள்வாய்/


அனுபல்லவி
(ரகு4)வீர/ ஜனகஜா/ கர/ பவித்ரிதமௌ/ வென்ன/ பாலு/-(ஆர)
இரகுவீரா/ சனகன் மகள்/ கரங்களினால்/ புனிதமடைந்த/ வெண்ணையும்/ பாலும்/ ஏற்றருள்வாய்


சரணம்
ஸாரமைன/ தி3வ்ய/-அன்னமு/ ஷட்3/-ரஸ/ யுத/ ப4க்ஷணமுலு/
இனிய/ புனித/ அன்னம்/ அறு/ சுவை/ கூடிய/ உண்டிகள்/

தா3ர/ ஸோத3ர/-ஆது3லதோ/ த்யாக3ராஜ/ வினுத/ பாலு/-(ஆர)
மனைவி/ சோதரர்கள்/ ஆகியோருடன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ பாலும்/ ஏற்றருள்வாய்....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஷட்3ரஸ - அறுசுவை - உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு (காரம்), துவர்ப்பு, தித்திப்பு, கைப்பு

விளக்கம்
1 - (ரகு4)வீர - எல்லா புத்தகங்களிலும் 'ரகு4' என்பது bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.

Top


Updated on 19 Jul 2010

No comments: