Saturday, August 21, 2010

தியாகராஜ கிருதி - எவரு தெலிய - ராகம் தோடி - Evaru Teliya - Raga Todi

பல்லவி
எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அனுபல்லவி
பு4விலோ 1வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1மைனனு 2நீலாயதாக்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

சரணம்
சரணம் 1
கருகு33ங்கா3ரு வல்வ கட்டி 3நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி
அதி3யு கா3
4ஹருனி அட்டிட்டாடி3ஞ்சினட்டி நீ லீலலனு (எவரு)


சரணம் 2
ஹரி ப்3ரஹ்மாது3லு நின்னு 5கொல்வனா வேள ஸுர
விரி போ3ணுலந்த3முதோ 6நில்வனமர வார
தருணுலு நாட்யமுசே கொல்வனன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வனட்டி நீ த3ய(னெவரு)


சரணம் 3
நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன 7நின்னு
வினா க3தி
யெவரு நீல வேணி 84க்துல பாலி
பா43தே4யமைன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி 9ப்ரியமைன நி(ன்னெவரு)


பொருள் - சுருக்கம்
  • கருங்குழலி!
  • தொண்டர் பங்கில் நற்பேறாகிய சர்வாணி!

  • எவர் அறிந்தனர் உனது மகிமைகளினை?

  • புவியில், புனித நாகபுரத்தினில் கண்டுகொண்டேன்.
  • எள்ளளவாகிலும், நீலாயதாட்சியின் திறமையினை எவர் அறிந்தனர்?

    • உருக்கிய பொன்னாடை யணிந்து,
    • வானோர் தரு மலர்களை கொண்டை நிறையச் சுற்றி,
    • சொகுசு மீர கரத்தினில் கிளியினையேந்தி, மேலும்
    • அரனை, அப்படியிப்படி ஆட்டிவைத்த அத்தகைய

  • உனது திருவிளையாடல்களை எவர் அறிந்தனர்?

    • அரி, பிரமாதியர்கள் உன்னைச் சேவிக்க,
    • அவ்வேளை வானோர் பூங்குழலியர் ஒயிலாக நிற்க,
    • வானோர் ஆடல் அணங்குகள் நாட்டியமாடி சேவிக்க,
    • யாவற்றினையும் கண்டு, கருணைரசத்தினைச் சிந்தி, அழைக்கும் அத்தகைய

  • உனது தயையினை எவர் அறிந்தனர்?

  • அரவணிவோனின் இராணியாகிய உன்னை அன்றி புகல் யாரே?
  • எவ்வமயமும், தியாகராசன் கூறிய சொற்களை விரும்பும் உன்னை எவர் அறிந்தனர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ தெலிய பொய்யேரு/ நீ/ மஹிமலு/
எவர்/ அறிந்தனர்/ உனது/ மகிமைகளினை/


அனுபல்லவி
பு4விலோ/ வரமௌ/ நாக3/ புரமுன/ கனுகொ3ண்டி/
புவியில்/ புனித/ நாக/ புரத்தினில்/ கண்டுகொண்டேன்/

லவ லேஸ1மு/-ஐனனு/ நீலாயதாக்ஷி/ ஸாமர்த்2யமு/-(எவரு)
எள்ளளவு/ ஆகிலும்/ நீலாயதாட்சியின்/ திறமையினை/ எவர்...


சரணம்
சரணம் 1
கருகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கட்டி/ நிர்ஜர/ தரு/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யணிந்து/ வானோர்/ தரு/

விருலனு/ கொப்பு/ நிண்ட3/ ஜுட்டி/ ஸொக3ஸு/ மீர/
மலர்களை/ கொண்டை/ நிறைய/ சுற்றி/ சொகுசு/ மீர/

கரமுன/ சிலுகனு/ பட்டி/ அதி3யு கா3க/
கரத்தினில்/ கிளியினை/ யேந்தி/ மேலும்/

ஹருனி/ அட்டு/-இட்டு/-ஆடி3ஞ்சின/-அட்டி/ நீ/ லீலலனு/ (எவரு)
அரனை/ அப்படி/ யிப்படி/ ஆட்டிவைத்த/ அத்தகைய/ உனது/ திருவிளையாடல்களை/ எவர்...


சரணம் 2
ஹரி/ ப்3ரஹ்மா-ஆது3லு/ நின்னு/ கொல்வ/-ஆ வேள/ ஸுர/
அரி/ பிரமாதியர்கள்/ உன்னை/ சேவிக்க/ அவ்வேளை/ வானோர்/

விரி போ3ணுலு/-அந்த3முதோ/ நில்வ/-அமர/ வார/
பூங்குழலியர்/ ஒயிலாக/ நிற்க/ வானோர்/ ஆடல்/

தருணுலு/ நாட்யமுசே/ கொல்வ/-அன்னியு/ ஜூசி/
அணங்குகள்/ நாட்டியமாடி/ சேவிக்க/ யாவற்றினையும்/ கண்டு/

கருணா/ ரஸமு/ ஜில்கி/ பில்வ/-அட்டி/ நீ/ த3யனு/-(எவரு)
கருணை/ ரசத்தினை/ சிந்தி/ அழைக்கும்/ அத்தகைய/ உனது/ தயையினை/ எவர்...


சரணம் 3
நாக3/ பூ4ஷணுனிகி/ ராணிவைன/ நின்னு/
அரவு/ அணிவோனின்/ இராணியாகிய/ உன்னை/

வினா/ க3தி/-எவரு/ நீல வேணி/ ப4க்துல/ பாலி/
அன்றி/ புகல்/ யாரே/ கருங்குழலி/ தொண்டர்/ பங்கில்/

பா43தே4யமைன/ ஸ1ர்வாணி/ ஸந்ததமுனு/
நற்பேறாகிய/ சர்வாணி/ எவ்வமயமும்/

த்யாக3ராஜு/ பல்கின/ வாணி/ ப்ரியமைன/ நின்னு/-(எவரு)
தியாகராசன்/ கூறிய/ சொற்களை/ விரும்பும்/ உன்னை/ எவர்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வரமௌ - வாரமு : இவ்விடத்தில், 'வரமௌ' சரியாகும்.

3 - நிர்ஜர தரு விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர கரமுன சிலுகனு பட்டி - ஸொக3ஸு மீர கரமுன சிலுகனு பட்டி நிர்ஜர தரு விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி.

5 - ஆ வேள ஸுர - ஆ வேளனு : இவ்விடத்தில், 'ஆ வேள ஸுர' என்பதே பொருந்தும்.

6 - அமர வார - அமர வர : இதற்கடுத்துவரும் 'தருணுலு நாட்யமுசே' என்ற சொற்களினால், 'அமர வார' என்பதே பொருந்தும். ஏனெனில், 'வார தருணுலு' என்பது 'ஆடல் அணங்கு'களைக் குறிக்கும்.

7 - நின்னு வினா க3தி - நின்னு வினாக3.

8 - 4க்துல பாலி - ப4க்துல.

9 - ப்ரியமைன நின்னு - ப்ரியமைனட்டி : 'ப்ரியமைனட்டி' என்ற சொல்லை பல்லவியுடன் இணைக்க இயலாது. அச்சொல் இங்கு தொக்கி நிற்கின்றது. எனவே, 'ப்ரியமைனட்டி' என்பது பொருந்தாது. 'ப்ரியமைனட்டி நின்னு' என்றிருந்தால் ஏற்கலாம்.

Top

மேற்கோள்கள்
2 - நீலாயதாக்ஷி - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் பார்வதியின் பெயர்

4 - ஹருனி அட்டிட்டாடி3ஞ்சின - அரனை அப்படி யிப்படி ஆட்டிவைத்த - இது சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த 'சிவனா-சக்தியா' என்ற போட்டியினைக் குறிக்கலாம். சிவ - சக்தி போட்டி நடனம்

முருகன் பிறப்பதற்குமுன், சிவனுக்கும், உமைக்கும் ஏற்பட்ட காதல் சரசம், 100 தெய்வ ஆண்டுகள் (மனிதர்களின் 36,000 ஆண்டுகள்) நீடித்ததாக, வால்மீகி ராமாயணம் (பால காண்டம், அத்தியாயம் 36) கூறும். இதனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

Top

விளக்கம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
வானோர் தரு - பாரிசாதம்
கருணைரசம் - நவரசங்களில் ஒன்று
அரவணிவோன் - சிவன்
சர்வாணி - பார்வதி
Top


Updated on 21 Aug 2010

1 comment:

varun said...

amazing work.
http://www.dhivyarajashruthi.in