ஏமனி மாடாடி3திவோ ராம
எவரி மனஸு ஏ வித4மோ தெலிஸி (ஏமனி)
அனுபல்லவி
மாம மரது3லு அனுஜுலு 1தல்லி-தண்ட்3ருலு
பா4மலு பரிஜனுலு ஸ்வ-வஸ1மௌடகே(மனி)
சரணம்
ராஜுலு முனுலு ஸுராஸுருலு வர
தி3க்3ராஜுலு மரி 2ஸூ1ருலு 3ஸ1ஸி1 த4ர தி3ன
ராஜுலு லோபடி3 நட3வனு த்யாக3-
ராஜ வினுத 4நய ப4யமுக3 முத்3து3க3 (ஏமனி)
பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- எங்ஙனம் பேசினாயோ, எவருடைய உள்ளம் எத்தகையதெனத் தெரிந்து!
- மாமன், கொழுந்தியர், பின்னோர், தாய்-தந்தையர், மனைவி, பணியாளர்கள் தன்வயப்படுவதற்கு எங்ஙனம் பேசினாயோ!
- அரசர்கள், முனிவர்கள், வானோர், அரக்கர், உயர் திசை மன்னர்கள், மேலும் சூரர்கள், பிறையணிவோன், பகலவன் ஆகியோர், உட்பட்டு நடப்பதற்கு, நயமாக, பயமாக, (ஆயின்) அழகாக, எங்ஙனம் பேசினாயோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ மாடாடி3திவோ/ ராம/
எங்ஙனம்/ பேசினாயோ/ இராமா/
எவரி/ மனஸு/ ஏ வித4மோ/ தெலிஸி/ (ஏமனி)
எவருடைய/ உள்ளம்/ எத்தகையது/ (என) தெரிந்து/
அனுபல்லவி
மாம/ மரது3லு/ அனுஜுலு/ தல்லி/-தண்ட்3ருலு/
மாமன்/ கொழுந்தியர்/ பின்னோர்/ தாய்/-தந்தையர்/
பா4மலு/ பரிஜனுலு/ ஸ்வ-வஸ1மு-ஔடகு/-(ஏமனி)
மனைவி/ பணியாளர்கள்/ தன்வயப்படுவதற்கு/ எங்ஙனம்...
சரணம்
ராஜுலு/ முனுலு/ ஸுர/-அஸுருலு/ வர/
அரசர்கள்/ முனிவர்கள்/ வானோர்/ அரக்கர்/ உயர்/
தி3க்3/-ராஜுலு/ மரி/ ஸூ1ருலு/ ஸ1ஸி1/ த4ர/
திசை/ மன்னர்கள்/ மேலும்/ சூரர்கள்/ பிறை/ யணிவோன்/
தி3ன ராஜுலு/ லோபடி3/ நட3வனு/ த்யாக3ராஜ/
பகலவன் ஆகியோர்/ உட்பட்டு/ நடப்பதற்கு/ தியாகராசனால்/
வினுத/ நய/ ப4யமுக3/ முத்3து3க3/ (ஏமனி)
போற்றப் பெற்றோனே/ நயமாக/ பயமாக/ (ஆயின்) அழகாக/ எங்ஙனம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தல்லி-தண்ட்3ருலு - தலி-த3ண்ட்3ருலு : இரண்டுக்கும் பொருள் ஒன்றே.
2 - ஸூ1ருலு - ஸூருலு : ஸூ1ருலு என்பதே சரியாகும்.
3 - ஸ1ஸி1 - ஸ1ஸ1.
Top
மேற்கோள்கள்
4 - நய ப4யமுக3 - நயமாக, பயமாக. வால்மீகி ராமாயணத்தில், இராமன் நயமாகப் பேசினதைப் பற்றி எங்கும் காணலாம். ஆனால், நாஸ்திக வாதமாடிய ஜாபாலி முனிவரிடம் இராமன் சினமுற்றுப் பேசினான் என அயோத்தியா காண்டத்தில் (அத்தியாயங்கள் 108 மற்றும் 109) காணலாம்.
Top
விளக்கம்
பிறையணிவோன் - சிவன்
Top
Updated on 22 Aug 2010
No comments:
Post a Comment