கொலுவமரெ கதா3 கோத3ண்ட3 பாணி
அனுபல்லவி
நலுவகு பலுகுல செலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுனிகருதை3ன (கொ)
சரணம்
சரணம் 1
1வேகுவ ஜாமுன வெலயுசு தம்பு3ர
சேகொனி கு3ணமுல செலுவொந்த3 பாடு3சு
ஸ்ரீ-கருனிகாஸ்1ரித 2சிந்தாமணுனிகி
ஆகலி தீர பாலாரகி3ம்பனு 3ஜேஸே (கொ)
சரணம் 2
வினவய்ய 4ஸரி ப்ரொத்3து3 வேள நாது2னிகி
சனுவுன பன்னீட ஸ்நானமு காவிஞ்சி
க4னுனிகி 5தி3வ்ய போ4ஜனமுனு பெட்டி
கம்மனி விடெ3மொஸங்கு3சு மரவக 3ஸேவிஞ்சே (கொ)
சரணம் 3
பா4க3வதுலு கூடி3 பா3கு3க3 6க4ன நய
ராக3முலசே தீ3பாராத4னமொனரிஞ்சி
வேக3மே ஸ்ரீ ஹரி விருலபை பவ்வளிஞ்ச
ஜோகொ3ட்டி த்யாக3ராஜு ஸுமுகு2னி 3லேபே (கொ)
பொருள் - சுருக்கம்
கேளய்யா!
- கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
- நான்முகனுக்கும், நாமகளுக்கும், ருக்மிணிக்கும், லலிதைக்கும், சீதைக்கும், இலக்குவனுக்கும் அரிதான கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
- விடியற்காலை திகழ்ந்து, தம்புரா கையிலேந்தி,
- (அவன்) புகழை, காதலுடன் பாடிக்கொண்டு,
- மங்களமருள்வோனுக்கு, சார்ந்தோரின் சிந்தாமணிக்கு,
- விடியற்காலை திகழ்ந்து, தம்புரா கையிலேந்தி,
- பசி தீரப் பாலருந்துவிக்கப் புரியும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
- நள்ளிரவு வேளையில், நாதனுக்கு, கனிவுடன், பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து,
- மேலோனுக்கு, உயர்ந்த படையல்களை இட்டு,
- நள்ளிரவு வேளையில், நாதனுக்கு, கனிவுடன், பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து,
- மணக்கும் வெற்றிலையை அளித்துக்கொண்டு, மறவாது சேவிக்கும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
- பாகவதர்கள் கூடி, சிறப்பாக, கன, நய, இராகங்களுடன், தீபாராதனை செய்வித்து,
- விரைவில், அரி மலரணை மீது பள்ளிகொள்ளத் தாலாட்டி, (பின்னர்)
- பாகவதர்கள் கூடி, சிறப்பாக, கன, நய, இராகங்களுடன், தீபாராதனை செய்வித்து,
- தியாகராசன் இன்முகத்தோனை எழுப்பும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொலுவு/-அமரெ/ கதா3/ கோத3ண்ட3/ பாணி/
தொண்டு/ அமைந்தது/ அன்றோ/ கோதண்ட/ பாணியின்/
அனுபல்லவி
நலுவகு/ பலுகுல/ செலியகு/ ருக்மிணிகி/
நான்முகனுக்கும்/ நா/ மகளுக்கும்/ ருக்மிணிக்கும்/
லலிதகு/ ஸீதகு/ லக்ஷ்மணுனிகி/-அருதை3ன/ (கொ)
லலிதைக்கும்/ சீதைக்கும்/ இலக்குவனுக்கும்/ அரிதான/ தொண்டு...
சரணம்
சரணம் 1
வேகுவ ஜாமுன/ வெலயுசு/ தம்பு3ர/
விடியற்காலை/ திகழ்ந்து/ தம்புரா/
சேகொனி/ கு3ணமுல/ செலுவு-ஒந்த3/ பாடு3சு/
கையிலேந்தி/ (அவன்) புகழை/ காதலுடன்/ பாடிக்கொண்டு/
ஸ்ரீ/-கருனிகி/-ஆஸ்1ரித/ சிந்தாமணுனிகி/
மங்களம்/ அருள்வோனுக்கு/ சார்ந்தோரின்/ சிந்தாமணிக்கு/
ஆகலி/ தீர/ பாலு/-ஆரகி3ம்பனு/ ஜேஸே/ (கொ)
பசி/ தீர/ பால்/ அருந்துவிக்க/ புரியும்/ தொண்டு...
சரணம் 2
வினு/-அய்ய/ ஸரி ப்ரொத்3து3/ வேள/ நாது2னிகி/
கேள்/ அய்யா/ நள்ளிரவு/ வேளையில்/ நாதனுக்கு/
சனுவுன/ பன்னீட/ ஸ்நானமு/ காவிஞ்சி/
கனிவுடன்/ பன்னீரில்/ திருமஞ்சனம்/ செய்வித்து/
க4னுனிகி/ தி3வ்ய/ போ4ஜனமுனு/ பெட்டி/
மேலோனுக்கு/ உயர்ந்த/ படையல்களை/ இட்டு/
கம்மனி/ விடெ3மு/-ஒஸங்கு3சு/ மரவக/ ஸேவிஞ்சே/ (கொ)
மணக்கும்/ வெற்றிலையை/ அளித்துக்கொண்டு/ மறவாது/ சேவிக்கும்/ தொண்டு...
சரணம் 3
பா4க3வதுலு/ கூடி3/ பா3கு3க3/ க4ன/ நய/
பாகவதர்கள்/ கூடி/ சிறப்பாக/ கன/ நய/
ராக3முலசே/ தீ3ப/-ஆராத4னமு/-ஒனரிஞ்சி/
இராகங்களுடன்/ தீப/ ஆராதனை/ செய்வித்து/
வேக3மே/ ஸ்ரீ ஹரி/ விருலபை/ பவ்வளிஞ்ச/
விரைவில்/ ஸ்ரீ ஹரி/ மலர் (அணை) மீது/ பள்ளிகொள்ள/
ஜோகொ3ட்டி/ த்யாக3ராஜு/ ஸுமுகு2னி/ லேபே/ (கொ)
தாலாட்டி/ (பின்னர்) தியாகராசன்/ இன்முகத்தோனை/ எழுப்பும்/ தொண்டு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஜேஸே - ஸேவிஞ்சே - லேபே : ஜேயு - ஸேவிஞ்சு - லேபு : ஜேஸெடு3 - ஸேவிஞ்செடு3 - லேபெடு3.
Top
மேற்கோள்கள்
1 - வேகுவ ஜாமுன - பொழுது விடிவதற்கு முன்னம் மூன்று மணி நேரம்.
2 - சிந்தாமணி - விரும்பியதை வழங்கும் மணி
4 - ஸரி ப்ரொத்3து3 - நள்ளிரவு.
5 - தி3வ்ய போ4ஜனமு - நைவேத்தியம் எனப்படும் படையல்கள்.
6 - க4ன நய ராக3முலு - கன, நய ராகங்கள் - ராகங்களின் தொகுப்பு. தியாகராஜர் தமது 'நாத3 ஸுதா4 ரஸம்' என்ற ஆரபி4 கீர்த்தனையில், 'க4ன' என்பதற்குப் பதிலாக, 'து3ர' என்று குறிப்பிடுகின்றார் - (து3ர நய தே3ஸ்1ய).
'க4ன', 'நய' மற்றும் இசைக்கலைச் சொற்களின் விளக்கம்
Top
விளக்கம்
லலிதை - பார்வதி
தீபாராதனை - விளக்காலாத்தி
Top
Updated on 01 Sep 2010
No comments:
Post a Comment