Sunday, August 29, 2010

தியாகராஜ கிருதி - கருண ஜூட3வம்ம - ராகம் தோடி - Karuna Judavamma - Raga Todi

பல்லவி
கருண ஜூட3வம்ம கமல வைரி
கலா த4ருனி 1கொம்ம

அனுபல்லவி
4ரனு ஸரியு தொ3ரகனி பஞ்ச நத3
நக32நாயகி 34ர்ம ஸம்வர்த4னி (க)

சரணம்
சரணம் 1
அனேக ஜக3தா3தா4ரிவி
நீவனே மதி3னி நெர நம்மிதி
கானேமனே வாட3னோயனி நீ மதி3-
நெஞ்சனே 4வத்33னுசுனாதனி
வேடு3து3னே
நாது3பை வினே சாடி3
சாலுனே நீது33யகு நேனு பாத்ரு-
டௌ3து3னே குவலய நயனே ஸு-வஸன
ஜக4னே விது4 நிப4 வத3னே ஸந்ததமு (க)


சரணம் 2
5மத3முன தெலியக ஜேஸின கர்ம
விதா3ரி நீவனி நம்மிதினே நீ
பதா3ரவிந்த3 யுக3ள ப4க்தினிம்மனி
தா3னமடி3கி3தினே நீகு தோசதே3மி
உதா3ரி நீ த3யனு தா3ச ராது3
3ரி தா3பு லேகனு ஸதா3 மொரலிட3
வினதா3 செவுலு எவருதா3 ப்3ரோதுரிக
ஸதா3ஸி1வ ஹிதே முதா3ன ஸததமு (க)


சரணம் 3
பராஸ1க்தி நாயொக சித்தமு
தாமராகு நீரு வித4மு தல்லடி3ல்ல
ராது3 அந்து3னகேமி ப2லமு
61ம்ப3ராரி வைரிகியர்த41ரீரி
புராண புருஷுட3கு3 ராமுனிகியா
புராரிகினி நீகு ராஜ த4ரி
மச்சரான வேரெஞ்ச ராது3 அனு த்யாக3-
ராஜுனிக விடு3வ ராது3 ஸததமு (க)


பொருள் - சுருக்கம்
  • கமலப் பகைவனின் பிறை யணிவோன் இல்லாளே!
  • புவியினில், ஈடு காணாத, திருவையாறு நகரத் தலைவியே, அறம் வளர்த்த நாயகியே!
  • குவலயக் கண்ணாளே! நல்லாடைகள் திகழும் இடையாளே! மதி நிகர் வதனத்தினளே!
  • கொடையாளியே! சதாசிவனுக்கு இனியவளே!
  • பராசக்தியே! சம்பராரியின் பகைவனுக்கு பகுதி உடலினளே! மதியணிபவளே!

  • கருணை புரிவாயம்மா.

    • அனேக உலகங்களுக்கு ஆதாரம் நீயேயென உள்ளத்தினில் மிக்கு நம்பினேன்;
    • ஆயின், என்ன சொல்வானோயென உனது மனத்தினில் எண்ணவே வேண்டாமென அவனை (இராமனை) வேண்டுவனே;
    • என்மீது கேட்ட அவதூறு போதுமே;
    • உனது தயையினக்கு நான் தகுந்தவன் ஆவனே.

    • செருக்கினால், அறியாது செய்த வினைகளைக் களைபவள் நீயென நம்பினேனே;
    • உனது திருவடி தாமரை இணைகளின் பற்றினை யருள்வாயென இரந்தேனே;
    • உனக்குத் தோன்றாததேனோ?
    • உனது தயையினை ஒளிக்கலாகாது;
    • புகலோ, மறைவோயின்றி எவ்வமயமும் முறையிட, கேளாதோ செவிகட்கு?
    • எவர்தான் காப்பரினி?

    • எனதொரு உள்ளம் தாமரை இலை நீர் போன்று தள்ளாடலாகாது; அதனாலென்ன பயன்?
    • பழம்பொருளாகிய இராமனுக்கும், அப்புரமெரித்தோனுக்கும், பொறாமையினால், வேறென் றெண்ணலாகாதெனும் தியாகராசனை, உனக்கு இனி கை விடலாகாது.


  • மகிழ்வுடன், எவ்வமயமும், கருணை புரிவாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அம்ம/ கமல/ வைரி/
கருணை/ புரிவாய்/ அம்மா/ கமல/ பகைவனின்/

கலா/ த4ருனி/ கொம்ம/
பிறை/ யணிவோன்/ இல்லாளே/


அனுபல்லவி
4ரனு/ ஸரியு/ தொ3ரகனி/ பஞ்ச நத3/
புவியினில்/ ஈடு/ காணாத/ திருவையாறு/

நக3ர/ நாயகி/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (க)
நகர/ தலைவியே/ அறம்/ வளர்த்த நாயகியே/


சரணம்
சரணம் 1
அனேக/ ஜக3த்/-ஆதா4ரிவி/
அனேக/ உலகங்களுக்கு/ ஆதாரம்/

நீவு/-அனே/ மதி3னி/ நெர/ நம்மிதி/
நீயே/ யென/ உள்ளத்தினில்/ மிக்கு/ நம்பினேன்/

கானி/-ஏமனே வாட3னோ/-அனி/ நீ/ மதி3னி/-
ஆயின்/ என்ன சொல்வானோ/ என/ உனது/ மனத்தினில்/

எஞ்சனே/ வத்3து3/-அனுசுனு/-ஆதனி/
எண்ணவே/ வேண்டாம்/ என/ அவனை (இராமனை)/

வேடு3து3னே/ நாது3பை/ வினே/ சாடி3/
வேண்டுவனே/ என்மீது/ கேட்ட/ அவதூறு/

சாலுனே/ நீது3/ த3யகு/ நேனு/ பாத்ருடு3-/
போதுமே/ உனது/ தயையினக்கு/ நான்/ தகுந்தவன்/

ஔது3னே/ குவலய/ நயனே/ ஸு-வஸன/
ஆவனே/ குவலய/ கண்ணாளே/ நல்லாடைகள் திகழும்/

ஜக4னே/ விது4/ நிப4/ வத3னே/ ஸந்ததமு/ (க)
இடையாளே/ மதி/ நிகர்/ வதனத்தினளே/ எவ்வமயமும்/ கருணை...


சரணம் 2
மத3முன/ தெலியக/ ஜேஸின/ கர்ம/
செருக்கினால்/ அறியாது/ செய்த/ வினைகளை/

விதா3ரி/ நீவு/-அனி/ நம்மிதினே/ நீ/
களைபவள்/ நீ/ என/ நம்பினேனே/ உனது/

பத3/-அரவிந்த3/ யுக3ள/ ப4க்தினி/-இம்மனி/
திருவடி/ தாமரை/ இணைகளின்/ பற்றினை/ யருள்வாய் என/

தா3னமு-அடி3கி3தினே/ நீகு/ தோசதா3/-ஏமி/
இரந்தேனே/ உனக்கு/ தோன்றாதது/ ஏனோ/

உதா3ரி/ நீ/ த3யனு/ தா3ச/ ராது3/
கொடையாளியே/ உனது/ தயையினை/ ஒளிக்க/ ஆகாது/

3ரி/ தா3பு/ லேகனு/ ஸதா3/ மொரலு/-இட3/
புகலோ/ மறைவோ/ இன்றி/ எவ்வமயமும்/ முறை/ யிட/

வினதா3/ செவுலு/ எவருதா3/ ப்3ரோதுரு/-இக/
கேளாதோ/ செவிகட்கு/ எவர்தான்/ காப்பர்/ இனி/

ஸதா3ஸி1வ/ ஹிதே/ முதா3ன/ ஸததமு/ (க)
சதாசிவனுக்கு/ இனியவளே/ மகிழ்வுடன்/ எவ்வமயமும்/ கருணை...


சரணம் 3
பராஸ1க்தி/ நா-ஒக/ சித்தமு/
பராசக்தியே/ எனது ஒரு/ உள்ளம்/

தாமர/-ஆகு/ நீரு/ வித4மு/ தல்லடி3ல்ல/
தாமரை/ இலை/ நீர்/ போன்று/ தள்ளாட/

ராது3/ அந்து3னகு/-ஏமி/ ப2லமு/
ஆகாது/ அதனால்/ என்ன/ பயன்/

1ம்ப3ர/-அரி/ வைரிகி/-அர்த4/ ஸ1ரீரி/
சம்பர/ அரியின்/ பகைவனுக்கு/ பகுதி/ உடலினளே/

புராண/ புருஷுட3கு3/ ராமுனிகி/-ஆ/
பழம்/ பொருளாகிய/ இராமனுக்கும்/ அந்த/

புர/-அரிகினி/ நீகு/ ராஜ/ த4ரி/
புரம்/ எரித்தோனுக்கும்/ உனக்கு/ மதி/ யணிபவளே/

மச்சரான/ வேரு/-எஞ்ச/ ராது3/ அனு/ த்யாக3ராஜுனி/-
பொறாமையினால்/ வேறு (என்று)/ எண்ண/ ஆகாது/ எனும்/ தியாகராசனை/

இக/-விடு3வ/ ராது3/ ஸததமு/ (க)
இனி/ கை விட/ ஆகாது/ எவ்வமயமும்/ கருணை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கொம்ம - கொம்ம மாயம்ம.

2 - நாயகி - நாயிகே.

5 - மத3முன - மதா3ன : 'மத3முன' என்பதே சரியெனத் தோன்றுகின்றது.

Top

மேற்கோள்கள்
3 - 4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாறு க்ஷேத்திரத்தினில் அம்மையின் பெயர்.

6 - 1ம்ப3ராரி வைரி - சிவன். கண்ணனின் மைந்தனாகிய பிரத்தியும்னன் மாரனின் மறுபிறப்பாகக் கருதப்படும். பிரத்தியும்னன், 'சம்பரன்' என்ற அரக்கனைக் கொன்றான். எனவே, அவனுக்கு (மாரனாகிய பிரத்தியும்னனுக்கு) பகைவன் சிவனாகும்.

Top

விளக்கம்
4 - ஆதனி வேடு3து3னே - 'அவனை வேண்டுவனே' - சில புத்தகங்களில், 'அவனை' என்ற சொல், 'இராமனை'க் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது சரணத்தில், தியாகராஜர், 'இராமனுக்கும் - சிவனுக்கும் பொறாமையினால்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, இங்கு, 'ஆதனி' (அவனை) என்பது இராமனைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்தும்.

கமலப் பகைவன் - மதி
கமலப் பகைவனின் பிறை யணிவோன் - சிவன்
குவலயம் - நீலத் தாமரை
பகுதி உடலினள் - அருத்த நாரீசுரரைக் குறிக்கும்
பழம்பொருள் - இறைவன்

Top


Updated on 29 Aug 2010

No comments: