Thursday, July 8, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம ராம மாம் - ராகம் யமுனா கல்யாணி - Rama Rama Rama Mam - Raga Yamuna Kalyani

பல்லவி
1ராம ராம ராம மாம் பாஹி

சரணம்
சரணம் 1
வனமுன சனி முனி ஜன க3ணமுனு கனு-
கொ3னி நெனருன க4னமுன பாலிஞ்சின (ரா)


சரணம் 2
வனஜ நயன நினு மனஸுன தி3ன தி3னமுனு
கனுகொ3னு நனுனனகு4னி ஸேயவே (ரா)


சரணம் 3
ஸுர நர வர நுத சரண கமல யுக3
கர த்4ரு2த கி3ரி வர அரமர ஸேயக (ரா)


சரணம் 4
2முர 32 ஹர ஹரி பரிசர கருணா-
கர க3ர த4ர நுத கரி வரத3 வரத3 (ரா)


சரணம் 5
1ரணனுகொனி நிரதமுனனு நினு ஹ்ரு2த்-
4ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு (ரா)


சரணம் 6
கலி யுக3முன நெலகொன்ன இதரலே
விபு4டு3ல கனி நினுகா3 மதி3னி ப4ஜிந்துனு (ரா)


சரணம் 7
3ஹு வசனமுலெந்து3கு இக நீவே
இஹ பரமுலு மரி நா ஸர்வஸ்வமு (ரா)


சரணம் 8
ஸரஸிஜ ப4வ ஸுர பதி வந்தி3த பத3
புர ஹர நுத பாலித த்யாக3ராஜ (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • கமலக்கண்ணா!
  • வானோர், சிறந்த மனிதர் போற்றும், திருவடிக் கமல இணையோனே! கரத்தினில் புனித மலை சுமந்தோனே!
  • முரன், கரனை வதைத்தோனே! வானரர் சேவகம் கொண்டோனே! கருணாகரனே! நஞ்சு மிடற்றோன் போற்றும், கரி வரதா! வரதா!
  • மலரோன், வானோர் தலைவன் வணங்கும் திருவடியோனே! புரமெரித்தோன் போற்றுவோனே! தியாகராசனைப் பேணுவோனே!

  • என்னைக் காப்பாய்.
    • வனத்திற்குச் சென்று, முனிவர்களை (தேடிக்) கண்டு, கனிவுடன், சிறக்கக் காத்தாய்.

    • உன்னை, மனதினில் தினந்தினமும் கண்டுகொள்ளும் என்னைப் பாவமற்றவனாகச் செய்வாயய்யா.
    • (என்னை) வேறாக்காதே (நான் உன்னவன்).
    • (உன்னிடம்) சரணடைந்து, இடையறாது, உன்னை இதயக் கமலத்தினில் மலர்களினால் தொழுவேன்.
    • கலி யுகத்தினில் நிலைபெற்ற மற்றெந்த கடவுளரையும் கண்டு, நீயாக (எண்ணி), உள்ளத்தினில் தொழுவேன்.
    • மிக்கு வசனங்கள் எதற்கு? இனி நீயே இம்மை, மறுமை, மற்றும், எனது அனைத்துமே.


  • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ மாம்/ பாஹி/
இராமா/ இராமா/ இராமா/ என்னை/ காப்பாய்/


சரணம்
சரணம் 1
வனமுன/ சனி/ முனி ஜன க3ணமுனு/
வனத்திற்கு/ சென்று/ முனிவர்களை/

கனுகொ3னி/ நெனருன/ க4னமுன/ பாலிஞ்சின/ (ரா)
(தேடிக்) கண்டு/ கனிவுடன்/ சிறக்க/ காத்த/ இராமா...


சரணம் 2
வனஜ/ நயன/ நினு/ மனஸுன/ தி3ன தி3னமுனு/
கமல/ கண்ணா/ உன்னை/ மனதினில்/ தினந்தினமும்/

கனுகொ3னு/ நனு/-அனகு4னி/ ஸேயவே/ (ரா)
கண்டுகொள்ளும்/ என்னை/ பாவமற்றவனாக/ செய்வாயய்யா/


சரணம் 3
ஸுர/ நர/ வர/ நுத/ சரண/ கமல/ யுக3/
வானோர்/ மனிதரில்/ சிறந்தோர்/ போற்றும்/ திருவடி/ கமல/ இணையோனே/

கர/ த்4ரு2த/ கி3ரி/ வர/ அரமர ஸேயக/ (ரா)
கரத்தினில்/ சுமந்தோனே/ மலை/ புனித/ (என்னை) வேறாக்காதே/


சரணம் 4
முர/ க2ர/ ஹர/ ஹரி/ பரிசர/
முரன்/ கரனை/ வதைத்தோனே/ வானரர்/ சேவகம் கொண்டோனே/

கருணாகர/ க3ர/ த4ர/ நுத/ கரி/ வரத3/ வரத3/ (ரா)
கருணாகரனே/ நஞ்சு/ (ஏந்துவோன்) மிடற்றோன்/ போற்றும்/ கரி/ வரதா/ வரதா/


சரணம் 5
1ரணு/-அனுகொனி/ நிரதமுனனு/ நினு/ ஹ்ரு2த்/
(உன்னிடம்) சரண்/ அடைந்து/ இடையறாது/ உன்னை/ இதய/

ஸரஸிஜமுனு/ விருலனு/ பூஜிந்துனு/ (ரா)
கமலத்தினில்/ மலர்களினால்/ தொழுவேன்/


சரணம் 6
கலி/ யுக3முன/ நெலகொன்ன/ இதரலு/-ஏ/
கலி/ யுகத்தினில்/ நிலைபெற்ற/ மற்று/ எந்த/

விபு4டு3ல/ கனி/ நினுகா3/ மதி3னி/ ப4ஜிந்துனு/ (ரா)
கடவுளரையும்/ கண்டு/ நீயாக (எண்ணி)/ உள்ளத்தினில்/ தொழுவேன்/


சரணம் 7
3ஹு/ வசனமுலு/-எந்து3கு/ இக/ நீவே/
மிக்கு/ வசனங்கள்/ எதற்கு/ இனி/ நீயே/

இஹ/ பரமுலு/ மரி/ நா/ ஸர்வஸ்வமு/ (ரா)
இம்மை/ மறுமை/ மற்றும்/ எனது/ அனைத்துமே/


சரணம் 8
ஸரஸிஜ ப4வ/ ஸுர/ பதி/ வந்தி3த/ பத3/
மலரோன்/ வானோர்/ தலைவன்/ வணங்கும்/ திருவடியோனே/

புர/ ஹர/ நுத/ பாலித/ த்யாக3ராஜ/ (ரா)
புரம்/ எரித்தோன்/ போற்றுவோனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம மாம் பாஹி - சில புத்தகங்களில் பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

4 - ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது 'ஸரஸிஜமனு விருலனு பூஜிந்துனு' (இதயக்) கமலமெனும் மலரினால் தொழுவேன்' என்றோ 'ஸரஸிஜமுன விருலனு பூஜிந்துனு' (இதயக் கமலத்தினில் மலர்களினால் தொழுவேன்) என்றோ இருக்கவேண்டும்.

4 - பூஜிந்துனு - பூஜிந்து.

Top

மேற்கோள்கள்
2 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்.

3 - 2 - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்.

Top

விளக்கம்
புனித மலை - கோவர்த்தன மலை
வேறாக்காதே - உன்னவன் என
நஞ்சு மிடற்றோன் - சிவன்
கரி வரதன் - கஜேந்திரனைக் குறிக்கும்
புரமெரித்தோன் - சிவன்

Top


Updated on 09 Jul 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு - விருலனு என்றால் மலர்களை என்று தானே பொருள். விருலதோ அல்லது விருலசே என்றால் தானே மலர்களால் என்று பொருள். விருலனு என்பதற்கு மலர்களினால் என்பது பொருளானால், ஹ்ருத் ஸரஸிஜமனு விருலனு பூஜிந்து என்று இருக்கலாமல்லவா.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

எல்லா புத்தகங்களிலும், 'ஹ்ரு2த்-ஸரோஜமுனு விருலனு' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இது, நீங்கள் கூறியபடி, 'ஹ்ரு2த்-ஸரோஜமனு விருலனு' என்றோ, 'ஹ்ரு2த்-ஸரோஜமுன விருலனு' என்றோ இருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன். இதனை நான் விளக்கத்தினில் கொடுத்துள்ளேன்.

வணக்கம்
கோவிந்தன்