Saturday, July 10, 2010

தியாகராஜ கிருதி - விதி41க்ராது3லகு - ராகம் யமுனா கல்யாணி - Vidhi Sakradulaku - Raga Yamuna Kalyani

பல்லவி
விதி41க்ராது3லகு தொ3ரகுனா இடுவண்டி
ஸன்னிதி4 வேடு3க ஜூதாமு ராரே

அனுபல்லவி
ஸுதீ4 ஜன ரக்ஷகி
4ர்மாம்பு3தி4 ஸா1யி ஸேவ ஜூட3 (வி)

சரணம்
சரணம் 1
உடு3-பதி முகு2லெல்ல வருஸகா3 பி3ருது3லனு பட்டி
அடு33டு3கு3 ஜய ஜயமனகா3 ஆ வேல்புல வெல
படு3சுலு நிஜ நாட்யமாட3கா3 ஆ ஸமயமுன பஸிடி3
ஸும வர்ஷமு குரியக3 வடி3 வடி3கா3மர கோடுலு
தட333 பூ4மினி த3ண்ட3முலிட3கா3
ஸந்தோஷமுனனு கட3-கண்டினி ஜூசு ஸொக3ஸு (வி)


சரணம் 2
ஸ்ரீ ரமணினி ஜூசி பல்கக3 1நவ ரத்னால
ஹாரபு ஸருலல்லாட33 ஆ மொலக நக3வு
கௌ3ரவமந்தடனு மெரயக3னா வேள ஸனக
நாரதா3து3லெல்ல பொக33கா3 கீரமுனனு பூனி ஸரிக3
சீர காந்தி மெரயகா3 ஸ்1ரு2ங்கா3ரி கொலுவுயுண்டு3
ஸு1க்ர வாரபு ஸொக3ஸெல்ல ஜூட3 (வி)


சரணம் 3
தருணாருண வத3ன கமலினி அத்யந்தமைன
கருணா ரஸ பூர்ண நேத்ரினி ஸ்ரீ பஞ்ச நத3
புரமுன நெலகொன்ன தல்லினி ஸ்ரீ த்யாக3ராஜ
பரிபாலினி 2ஸர்வ ரூபிணி1ரணாக3த வத்ஸலினி
வர மணுலு த4343யனி
மெரயு கங்கண யுத கர பர தே3வினி ஸேவிம்ப (வி)


பொருள் - சுருக்கம்
  • பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ இத்தகைய சன்னிதி?
  • வேடிக்கை பார்ப்போம், வாரீர்!

    • அறிஞர்களைக் காப்பவள்,
    • அறக் கடலினில் துயில்பவள்,

  • சேவையினைக் காணப் பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • மதி வதனத்தினர் யாவரும், வரிசையாக விருதுகளையேந்தி, அடிக்கடி 'வெற்றி, வெற்றி' யென,
    • அந்த வானோரின் விலை மாதர்கள் தமது நடனமாட,
    • அவ்வமயம் பொன் மலர் மழை பொழிய,
    • அவசரவசரமாக, அமர கோடிகள் தடபடென, நிலத்தினில் தெண்டனிட,

  • மகிழ்வுடன், கடைக் கண்ணினால் காணும் சொகுசு பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • திருமகளைக் கண்டு பகர,
    • நவரத்தின மாலைச் சரங்களசைந்தாட,
    • அந்த புன்னகையின் கௌரவம் யாவற்றிலும் மிளிர,
    • அவ்வேளை, சனகர், நாரதர் முதலானோர் யாவரும் புகழ,
    • கிளியினை யேந்தி,
    • சரிகைச் சேலையொளி மிளிர,

  • சிங்காரி கொலுவிருக்கும், வெள்ளிக் கிழமை சொகுசெல்லாம் காண பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

    • இளங்காலைப் பரிதி (நிகர்) கமல வதனத்தினளை,
    • மிக்கு கருணை உணர்வு நிரம்பிய கண்ணாளை,
    • திருவையாறு நகரத்தினில் நிலைபெற்ற அம்மையை,
    • தியாகராசனைப் பேணுபவளை,
    • அனைத்துருவினளை,
    • புகலடைந்தோரிடம் கனிவுடையவளை,
    • உயர் மணிகள் தக தகயென ஒளிரும் வளையல்களணி கை,

  • பரதேவியினைச் சேவிக்க பிரமன், இந்திராதியருக்கும் கிடைக்குமோ?

  • வேடிக்கை பார்ப்போம், வாரீர்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விதி4/ ஸ1க்ர-ஆது3லகு/ தொ3ரகுனா/ இடுவண்டி/
பிரமன்/ இந்திராதியருக்கும்/ கிடைக்குமோ/ இத்தகைய/

ஸன்னிதி4/ வேடு3க/ ஜூதாமு/ ராரே/
சன்னிதி/ வேடிக்கை/ பார்ப்போம்/ வாரீர்/


அனுபல்லவி
ஸுதீ4 ஜன/ ரக்ஷகி/
அறிஞர்களை/ காப்பவள்/

4ர்ம/-அம்பு3தி4/ ஸா1யி/ ஸேவ/ ஜூட3/ (வி)
அற/ கடலினில்/ துயில்பவள்/ சேவையினை/ காண/ பிரமன்...


சரணம்
சரணம் 1
உடு3/-பதி/ முகு2லு/-எல்ல/ வருஸகா3/ பி3ருது3லனு/ பட்டி/
தாரை/ அரசன் (மதி)/ வதனத்தினர்/ யாவரும்/ வரிசையாக/ விருதுகளை/ ஏந்தி/

அடு3கு3-அடு3கு3/ ஜய/ ஜய/-அனகா3/ ஆ/ வேல்புல/ வெல/
அடிக்கடி/ வெற்றி/ வெற்றி/ யென/ அந்த/ வானோரின்/ விலை/

படு3சுலு/ நிஜ/ நாட்யமு/-ஆட3கா3/ ஆ ஸமயமுன/ பஸிடி3/
மாதர்கள்/ தமது/ நடனம்/ ஆட/ அவ்வமயம்/ பொன்/

ஸும/ வர்ஷமு/ குரியக3/ வடி3 வடி3கா3/-அமர/ கோடுலு/
மலர்/ மழை/ பொழிய/ அவசரவசரமாக/ அமர/ கோடிகள்/

தட333/ பூ4மினி/ த3ண்ட3முலு/-இட3கா3/
தடபடென/ நிலத்தினில்/ தெண்டன்/ இட/

ஸந்தோஷமுனனு/ கட3/-கண்டினி/ ஜூசு/ ஸொக3ஸு/ (வி)
மகிழ்வுடன்/ கடை/ கண்ணினால்/ காணும்/ சொகுசு/ பிரமன்...


சரணம் 2
ஸ்ரீ/ ரமணினி/ ஜூசி/ பல்கக3/ நவ/ ரத்னால/
திரு/ மகளை/ கண்டு/ பகர/ நவ/ ரத்தின/

ஹாரபு/ ஸருலு/-அல்லாட33/ ஆ/ மொலக நக3வு/
மாலை/ சரங்கள்/ அசைந்தாட/ அந்த/ புன்னகையின்/

கௌ3ரவமு/-அந்தடனு/ மெரயக3/-ஆ/ வேள/ ஸனக/
கௌரவம்/ யாவற்றிலும்/ மிளிர/ அந்த/ வேளை/ சனகர்/

நாரத3/-ஆது3லு/-எல்ல/ பொக33கா3/ கீரமுனனு/ பூனி/ ஸரிக3/
நாரதர்/ முதலானோர்/ யாவரும்/ புகழ/ கிளியினை/ யேந்தி/ சரிகை/

சீர/ காந்தி/ மெரயகா3/ ஸ்1ரு2ங்கா3ரி/ கொலுவு/-உண்டு3/
சேலை/ ஒளி/ மிளிர/ சிங்காரி/ கொலுவு/ இருக்கும்/

ஸு1க்ர/ வாரபு/ ஸொக3ஸு/-எல்ல/ ஜூட3/ (வி)
வெள்ளி/ கிழமை/ சொகுசு/ எல்லாம்/ காண/ பிரமன்...


சரணம் 3
தருண/-அருண/ வத3ன/ கமலினி/ அத்யந்தமைன/
இளம் காலை/ பரிதி (நிகர்)/ வதன/ கமலத்தினளை/ மிக்கு/

கருணா/ ரஸ/ பூர்ண/ நேத்ரினி/ ஸ்ரீ பஞ்ச நத3/
கருணை/ உணர்வு/ நிரம்பிய/ கண்ணாளை/ ஸ்ரீ திருவையாறு/

புரமுன/ நெலகொன்ன/ தல்லினி/ ஸ்ரீ த்யாக3ராஜ/
நகரத்தினில்/ நிலைபெற்ற/ அம்மையை/ ஸ்ரீ தியாகராசனை/

பரிபாலினி/ ஸர்வ/ ரூபிணி/ ஸ1ரணு/-ஆக3த/ வத்ஸலினி/
பேணுபவளை/ அனைத்து/ உருவினளை/ புகல்/ அடைந்தோரிடம்/ கனிவுடையவளை/

வர/ மணுலு/ த43/ த43/-அனி/
உயர்/ மணிகள்/ தக/ தக/ யென/

மெரயு/ கங்கண/ யுத/ கர/ பர/ தே3வினி/ ஸேவிம்ப/ (வி)
ஒளிரும்/ வளையல்கள்/ கூடிய (அணி)/ கை/ பர/ தேவியினை/ சேவிக்க/ பிரமன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸர்வ ரூபிணி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது 'ஸர்வ ரூபிணினி' என்றோ 'ஸர்வ ரூபினி' என்றோ இருக்கவேண்டும்.

Top

மேற்கோள்கள்
1 - நவ ரத்ன - நவரத்தினங்கள் - வைரம், முத்து, மாணிக்கம், பவளம், மரகதம், கோமேதகம், வைடூரியம், நீலம், புருடராகம்.

Top

விளக்கம்



Updated on 10 Jul 2010

No comments: