Friday, July 16, 2010

தியாகராஜ கிருதி - அபராத4முலனோர்வ - ராகம் ரஸாளி - வனாளி - வனாவளி - Aparadhamulanorva - Raga Rasali - Vanali - Vanavali

பல்லவி
1அபராத4முலனோர்வ ஸமயமு
க்ரு2ப ஜூடு3மு க4னமைன நா (அ)

அனுபல்லவி
சபல சித்துடை3 2மனஸெருக3னே
ஜாலி பெட்டுகொனி மொரலனிடு3 (அ)

சரணம்
ஸகல லோகுல ப2லமுலனெரிகி3
ஸம்ரக்ஷிஞ்சுசுனுண்ட33
நன்னொகனி ப்3ரோவ தெலிய கீர்தன
1தகமொனர்சு த்யாக3ராஜ நுத நா (அ)


பொருள் - சுருக்கம்
கீர்த்தனைகள் நூற்றுக்கணக்கில் இயற்றிடும், தியாகராசன் போற்றுவோனே!

  • எனது கொடிய குற்றங்களைப் பொறுக்க சமயமிது.
  • கருணை காட்டுவாய்.

    • நில்லா உள்ளத்தினனாகி, மனதறியாமலே, துயரடைந்து, (இவ்வமயம்) முறைகளிடுகின்றேன்.
    • அனைத்து மக்களையும், (அவரவர் வினைப்) பயனறிந்து நன்கு (நீ) பேணிக் கொண்டிருக்க, என்னொருவனைக் காக்க அறியாயோ?


  • எனது கொடிய குற்றங்களைப் பொறுக்க சமயமிது.
  • கருணை காட்டுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபராத4முலனு/-ஓர்வ/ ஸமயமு/
குற்றங்களை/ பொறுக்க/ சமயமிது/

க்ரு2ப/ ஜூடு3மு/ க4னமைன/ நா/ (அ)
கருணை/ காட்டுவாய்/ கொடிய/ எனது/ குற்றங்களை...


அனுபல்லவி
சபல/ சித்துடை3/ மனஸு/-எருக3கனே/
நில்லா/ உள்ளத்தினனாகி/ மனது/ அறியாமலே/

ஜாலி/ பெட்டுகொனி/ மொரலனு/-இடு3/ (அ)
துயர்/ அடைந்து/ (இவ்வமயம்) முறைகள்/ இடும்/ (எனது) குற்றங்களை...


சரணம்
ஸகல/ லோகுல/ ப2லமுலனு/-எரிகி3/
அனைத்து/ மக்களையும்/ (அவரவர் வினைப்) பயன்/ அறிந்து/

ஸம்ரக்ஷிஞ்சுசுனு/-உண்ட33/
நன்கு (நீ) பேணிக் கொண்டு/ இருக்க/

நன்னு/-ஒகனி/ ப்3ரோவ/ தெலிய/ கீர்தன/
என்/ ஒருவனை/ காக்க/ அறியாயோ/ கீர்த்தனைகள்/

1தகமு/-ஒனர்சு/ த்யாக3ராஜ/ நுத/ நா/ (அ)
நூற்றுக்கணக்கில்/ இயற்றிடும்/ தியாகராசன்/ போற்றுவோனே/ எனது/ குற்றங்களை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ராகம் - ரஸாளி - வனாளி - வனாவளி.

1 - அபராத4முலனோர்வ - அபராத4முலனுனோர்வ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - மனஸெருக3 - மனது அறியாமலே. ஒரு புத்தகத்தில், இதற்கு 'இறைவனுடைய மனது அறியாமலே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் வரும், 'சபல சித்துடை3' (நில்லா மனத்தினனாகி) என்பதனைக் கருத்தில் கொண்டு, அத்தகைய பொருள் சரியாகாது.

Top


Updated on 16 Jul 2010

No comments: