Saturday, July 17, 2010

தியாகராஜ கிருதி - எவரிதோ நே - ராகம் மானவதி - Evarito Ne - Raga Manavati

பல்லவி
எவரிதோ நே தெல்புது3 ராம
நா லோனி ஜாலினி

அனுபல்லவி
1கவகொ3னி ஸதா34ஜன ஸேய
கார்யமுலன்னி வேராயெ (எ)

சரணம்
3ண நாது2 ஸேய கோரக3
கடு3 வானருடை3 தீரெகா3
2கு3ண-மய மாயாம்பு33 ஸமீர
கோ3பால த்யாக3ராஜ நுத (எ)


பொருள் - சுருக்கம்
இராமா! குண மயமான மாயை முகிலினைக் கலைக்கும் புயலே, கோபாலா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • எவரிடம் நான் தெரிவிப்பேன், எனதுள்ளத் துயரினை?

    • இடைவிடாது, எவ்வமயமும் பஜனை செய்தும், காரியங்கள் யாவும் வேறாயின.
    • பிள்ளையார் பிடிக்கப் போய், வெறும் குரங்காய் முடிந்ததே.


  • எவரிடம் நான் தெரிவிப்பேன், எனதுள்ளத் துயரினை?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரிதோ/ நே/ தெல்புது3/ ராம/
எவரிடம்/ நான்/ தெரிவிப்பேன்/ இராமா/

நா/ லோனி/ ஜாலினி/
எனது/ உள்ள/ துயரினை/


அனுபல்லவி
கவகொ3னி/ ஸதா3/ ப4ஜன/ ஸேய/
இடைவிடாது/ எவ்வமயமும்/ பஜனை/ செய்தும்/

கார்யமுலு/-அன்னி/ வேராயெ/ (எ)
காரியங்கள்/ யாவும்/ வேறாயின/


சரணம்
3ண நாது2/ ஸேய/ கோரக3/
பிள்ளையார்/ பிடிக்க/ போய்/

கடு3/ வானருடை3/ தீரெகா3/
வெறும்/ குரங்காய்/ முடிந்ததே/

கு3ண/-மய/ மாயா/-அம்பு33/ ஸமீர/
குண/ மயமான/ மாயை/ முகிலினை (கலைக்கும்)/ புயலே/

கோ3பால/ த்யாக3ராஜ/ நுத/ (எ)
கோபாலா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - கு3ண-மய - குண மயமான. புத்தகங்களில், இதை, இறைவனின் போற்றியாகக் கொள்ளப்பட்டுள்ளது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, இறைவனை 'குண மயமானவன்' என்று கூறுவது தவறாகும் - அது 'ஸகுண' என்பதற்குச் சமமாகாது. இறைவன் குணங்களுக்கு அப்பாற்பட்டவன். எனவே, இதனை, அடுத்துவரும், 'மாயா' (மாயை)யின் தன்மையினை விளக்குவதாக இங்கு பொருள் கொள்ளப்பட்டது. இது குறித்து, கீதையில் (அத்தியாயம் 14), கண்ணன் கூறியது -

Top

"சத்துவம், ராஜஸம், தாமஸம் எனும் பிரக்ருதியினின்று தோன்றிய குணங்கள்
வலிய தோள்களோனே! உடலெடுத்த, அழிவற்றவனை (ஜீவான்மாவை) உடலில் கட்டுகின்றன."(5)
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

"பிரக்ருதி, மாயை மற்றும் பிரதானம் ஆகிய சொற்கள் 'பரியாயம்' (synonyms) ஆகும்." - பிரம்ம சூத்திரம் 1.1.5 - விளக்கம் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - கவகொ3னி - 'கவ' என்ற சொல்லுக்கு 'இருமை' (இரட்டை) என்று பொருளாகும். அதாவது, 'இன்பம்-துன்பம்' போன்ற ஒன்றுக்கொன்று எதிராக வருவன. ஆனால் 'கவலு' என்பது 'தொடர்பு அறாது மறையோதும் முறையினை'க் குறிக்கும். புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'இடையறாது' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. பரம்பரையாக வரும், இந்தப் பொருளையே, இங்கும் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பொருள் இவ்விடத்தில் பொருந்தும்.

குணம் - முக்குணம் - தாமதம், இராசதம், சத்துவம்

Top


Updated on 17 Jul 2010

No comments: