Sunday, July 18, 2010

தியாகராஜ கிருதி - அடு காராத3னி - ராகம் மனோரஞ்ஜனி - Atu Karadani - Raga Manoranjani

பல்லவி
1அடு காராத3னி பல்க-
னபி4மானமு லேக போயெனா

அனுபல்லவி
எடுலோர்துனு நே த3ய ஜூட3வய்ய
ஏ வேல்பு ஸேயு சலமோ தெலிஸி (அ)

சரணம்
வேத3 ஸா1ஸ்த்ரோபனிஷத்3-2விது3டை3
நிஜ தா3ரினி பட்டி தா3ஸுடை3
நாது3பை 3நெபமெஞ்சிதே த்யாக3ராஜ நுத (அ)


பொருள் - சுருக்கம்
தியாகராசன் போற்றுவோனே!

  • அங்ஙனம் செய்யலாகாதெனக் கூற (உனக்கு என்மீது) அன்பில்லாமற் போனதோ?

  • எந்தக் கடவுள், தெரிந்து செய்யும் சூழ்ச்சியோ?
  • அங்ஙனம் செய்யலாகாதெனக் கூற (உனக்கு என்மீது) அன்பில்லாமற் போனதோ?
  • (அல்லது)
  • எந்தக் கடவுள் செய்யும் சூழ்ச்சியோ (எனத்) தெரிந்து,
  • (அக்கடவுளை) அங்ஙனம் செய்யலாகாதெனக் கூற (உனக்கு என்மீது) அன்பில்லாமற் போனதோ?

    • வேத, சாத்திர, உபநிடதங்கள் கற்றறிந்தவனாகியும்,
    • உண்மை நெறியினைப் பற்றி,
    • (உனது) தொண்டனாகிய என்மீது குற்றங் கண்டால்?


  • எங்ஙனம் பொறுப்பேன் நான்?
  • தயை புரிவாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அடு/ காராது3/-அனி/ பல்கனு/
அங்ஙனம்/ செய்ய/ ஆகாது/ என/ கூற/

அபி4மானமு/ லேக/ போயெனா/
(உனக்கு என்மீது) அன்பு/ இல்லாமற்/ போனதோ/


அனுபல்லவி
எடுல/-ஓர்துனு/ நே/ த3ய/ ஜூட3வய்ய/
எங்ஙனம்/ பொறுப்பேன்/ நான்/ தயை/ புரிவாயய்யா/

ஏ/ வேல்பு/ ஸேயு/ சலமோ/ தெலிஸி/ (அ)
எந்த/ கடவுள்/ செய்யும்/ சூழ்ச்சியோ/ (எனத்) தெரிந்து/ (அக்கடவுளை), அங்ஙனம்...


சரணம்
வேத3/ ஸா1ஸ்த்ர/-உபனிஷத்3/-விது3டு3/-ஐன/
வேத/ சாத்திர/ உபநிடதங்கள்/ கற்றறிந்தவன்/ ஆகியும்/

நிஜ/ தா3ரினி/ பட்டி/ தா3ஸுடை3ன/
உண்மை/ நெறியினை/ பற்றி/ (உனது) தொண்டனாகிய/

நாது3பை/ நெபமு/-எஞ்சிதே/ த்யாக3ராஜ/ நுத/ (அ)
என்மீது/ குற்றங்/ கண்டால்/ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அடு காராத3னி - அங்ஙனம் செய்யலாகாது : புத்தகங்களில், இச்சொற்கள், சூழ்ச்சி செய்யும் கடவுளருக்குக் கூறும்படி, தியாகராஜர், இராமனை வேண்டுவதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப்பாடல், எந்த சூழ்நிலையில் இயற்றப்பெற்றது என்று தெரியவில்லை. அதனால், புத்தகங்களில் கூறியபடி பொருள் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

2 - விது3டை3 - (விது3டு3+ஐன) - (கற்றறிந்தவனாகியும்). இங்கு வரும், 'ஐன' என்ற சொல் 'ஆகியும்' (கற்றறிந்தவன் ஆகியும்) என்று பொருள்படும். அடுத்து வரும், 'தா3ஸுடை3ன' (தா3ஸுடு3+ஐன) என்ற சொல்லில் உள்ள 'ஐன', 'ஆகிய' (தொண்டன் ஆகிய) என்றும் பொருள்படும்.

Top

3 - நெபமெஞ்சிதே? - குற்றங் கண்டால்? - குற்றங் காணுதல் முறையோ எனப் பொருள்படும்.

உண்மை நெறி - சரணாகதி - இறைவனிடம் சரணடைதல் - கீதையில் (18-வது அத்தியாயம்) கண்ணன் கூறியதன்படி.

Top


Updated on 18 Jul 2010

No comments: