Monday, July 5, 2010

தியாகராஜ கிருதி - நீ தா3ஸானுதா3ஸுடு3 - ராகம் ஹமீர் கல்யாணி - Ni Dasanudasudu - Raga Hamir Kalyani

பல்லவி
நீ தா3ஸானுதா3ஸுட3னனி பேரே ஏமி ப2லமு

அனுபல்லவி
பேத3 ஸாது4லந்து3 நீகு ப்ரேம லேக போயெ (நீ)

சரணம்
சரணம் 1
ஸரிவாரிலோ நன்னு சௌக ஜேஸிதிவி கானி
கருணிம்ப லேக நீது3 கர்மமனெத3வு கானி (நீ)


சரணம் 2
1ரோஸமு லேதா3யெ 2ருசிர வாக்குலு போயெ
தா3ஸுல ப்3ரோசிதிவட த்யாக3ராஜிலலோ (நீ)


பொருள் - சுருக்கம்
  • உனது அடியார்க்கு அடியனெனப் பெயரே; என்ன பயன்?

    • ஏழை சாதுக்களிடம் உனக்கு அன்பு இல்லாமற் போனது!

    • ஈடானோரில் என்னை இழிவு செய்தாயே யன்றி,
    • கருணை காட்டாது, 'உனது தலையெழுத்து' என்றா யன்றோ?

    • வெட்கம் இலதாயிற்று; அருமையான வாக்குறுதிகள் போயின;
    • தொண்டர்களைக் காத்தாயாம்!


  • தியாகராசனுக்கு, இங்கு, உனது அடியார்க்கு அடியனெனப் பெயரே; என்ன பயன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ தா3ஸ/-அனுதா3ஸுட3னு/-அனி/ பேரே/ ஏமி/ ப2லமு/
உனது/ அடியார்க்கு/ அடியன்/ என/ பெயரே/ என்ன/ பயன்/


அனுபல்லவி
பேத3/ ஸாது4லு-அந்து3/ நீகு/ ப்ரேம/ லேக/ போயெ/ (நீ)
ஏழை/ சாதுக்களிடம்/ உனக்கு/ அன்பு/ இல்லாமற்/ போனது/


சரணம்
சரணம் 1
ஸரிவாரிலோ/ நன்னு/ சௌக/ ஜேஸிதிவி/ கானி/
ஈடானோரில்/ என்னை/ இழிவு/ செய்தாயே/ யன்றி/

கருணிம்ப/ லேக/ நீது3/ கர்மமு/-அனெத3வு/ கானி/ (நீ)
கருணை/ காட்டாது/ 'உனது/ தலையெழுத்து/ என்றாய்/ அன்றோ/


சரணம் 2
ரோஸமு/ லேது3-ஆயெ/ ருசிர/ வாக்குலு/ போயெ/
வெட்கம்/ இலதாயிற்று/ அருமையான/ வாக்குறுதிகள்/ போயின/

தா3ஸுல/ ப்3ரோசிதிவி-அட/ த்யாக3ராஜு/-இலலோ/ (நீ)
தொண்டர்களை/ காத்தாயாம்/ தியாகராசனுக்கு/ இங்கு/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரோஸமு லேதா3யெ - ரோஸமு லேஸமு லேதா3யெ.

Top

மேற்கோள்கள்
2 - ருசிர வாக்குலு - அருமையான வாக்குறுதிகள் - வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 18-வது அத்தியாயம்), சரண் கேட்டு வந்த விபீடணனுக்கும், அவனைப்போல் தன்னிடம் சரண் கோரி வருவோருக்கும், ராமன் கொடுத்த வாக்குறுதி -

"ஒருமுறையாகிலும், 'உன்னுடைய அடைக்கலம் கோருகின்றேன்' என்று எவன் இரக்கின்றானோ,
அவனுக்கு, அனைத்து உயிரினங்களினின்றும், அபயம் அளிக்கின்றேன்; இது என்னுடைய விரதமாம்."(33)

Top

விளக்கம்
இங்கு - 'புவியில்' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 05 Jul 2010

No comments: