Sunday, July 11, 2010

தியாகராஜ கிருதி - ஸாக3ருண்டு3 - ராகம் யமுனா கல்யாணி - Sagarundu - Raga Yamuna Kalyani - Prahlada Bhakti Vijayam

பல்லவி
ஸாக3ருண்டு3 வெட3லெனிதோ3 ஸாரெகு கன ராரே

அனுபல்லவி
பா3கு33 ப்ரஹ்லாது3னி வர யோகி3னி கௌகி3ட ஜேர்சி (ஸா)

சரணம்
சரணம் 1
மந்த3ர த4ருடா3னந்த3 கந்து3டு3 தன
ஹ்ரு23யாரவிந்த3ம்பு3ன நெலகொன்ன ஸௌந்த3ர்யமுலனு தலசுசு (ஸா)


சரணம் 2
வாரணமுலபை பே4ரீ வாத்3யம்பு3லு ம்ரோயக3 ஸுர
வார ஸ்த்ரீல நாட்யபு வருஸல ஜூசுசு வேட்3கக3 (ஸா)


சரணம் 3
ராஜில்லின ஸ்ரீ த்யாக3ராஜ ஸகு2னி மனஸார
பூஜிஞ்சுசுனுண்டு33னுஜ ராஜ குமார ஸஹிதுடை3 (ஸா)


பொருள் - சுருக்கம்
  • கடலரசன் புறப்பட்டனன் இதோ.
  • யாவரும் காண வாரீர்!

    • மந்தர மலையைச் சுமந்தோன், ஆனந்தத்தின் மூலம், தனது இதயக் கமலத்தினில் நிலைபெற்ற எழிலினை நினைத்துக் கொண்டு,
    • வாரணங்களின் மீது பேரி வாத்தியங்கள் முழங்க,
    • வானோரின் நடன மங்கையரின் நாட்டிய வரிசைகளைக் கண்டுகொண்டு,
    • பிரகலாதனை, உயர் யோகியினை, இறுகத் தழுவிக் கொண்டு,
    • திகழும், தியாகராசனுக்கு இனியோனை மனதார தொழுதுகொண்டிருக்கும், அரக்கர் அரச குமாரனுடன்,

  • களிப்புடன், கடலரசன் புறப்பட்டனன்.

  • யாவரும் காண வாரீர்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாக3ருண்டு3/ வெட3லெனு/-இதோ3/ ஸாரெகு/ கன/ ராரே/
கடலரசன்/ புறப்பட்டனன்/ இதோ/ யாவரும்/ காண/ வாரீர்/


அனுபல்லவி
பா3கு33/ ப்ரஹ்லாது3னி/ வர/ யோகி3னி/ கௌகி3ட/ ஜேர்சி/ (ஸா)
இறுக/ பிரகலாதனை/ உயர்/ யோகியினை/ தழுவி/ கொண்டு/ கடலரசன்...


சரணம்
சரணம் 1
மந்த3ர/ த4ருடு3/-ஆனந்த3/ கந்து3டு3/ தன/ ஹ்ரு23ய/-
மந்தர மலையை/ சுமந்தோன்/ ஆனந்தத்தின்/ மூலம்/ தனது/ இதய/

அரவிந்த3ம்பு3ன/ நெலகொன்ன/ ஸௌந்த3ர்யமுலனு/ தலசுசு/ (ஸா)
கமலத்தினில்/ நிலைபெற்ற/ எழிலினை/ நினைத்துக் கொண்டு/ கடலரசன்...


சரணம் 2
வாரணமுலபை/ பே4ரீ/ வாத்3யம்பு3லு/ ம்ரோயக3/ ஸுர/
வாரணங்களின் மீது/ பேரி/ வாத்தியங்கள்/ முழங்க/ வானோரின்/

வார/ ஸ்த்ரீல/ நாட்யபு/ வருஸல/ ஜூசுசு/ வேட்3கக3/ (ஸா)
நடன/ மங்கையரின்/ நாட்டிய/ வரிசைகளை/ கண்டுகொண்டு/ களிப்புடன்/ கடலரசன்...


சரணம் 3
ராஜில்லின/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸகு2னி/ மனஸார/
திகழும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனை/ மனதார/

பூஜிஞ்சுசுனு-உண்டு3/ த3னுஜ/ ராஜ/ குமார/ ஸஹிதுடை3/ (ஸா)
தொழுதுகொண்டிருக்கும்/ அரக்கர்/ அரச/ குமாரன்/ உடன்/ கடலரசன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

பிரகலாதனை, அவனுடைய தந்தையான, இரணிய கசிபு, நாக பாசத்தினால் கட்டி கடலில் எறியும்படி உத்திரவிட, அங்ஙனமே எறியப்பட்ட பிரகலாதனை, கடலரசன் மீட்டு, அவனை தன்னுடைய நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துவரும் காட்சியினை, தியாகராஜர் இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார்.

மந்தர மலையைச் சுமந்தோன் - அரியைக் குறிக்கும்
ஆனந்தத்தின் மூலம் - அரியைக் குறிக்கும்
தியாகராசனுக்கு இனியோன் - அரியைக் குறிக்கும்
அரக்கர் அரச குமாரன் - பிரகலாதன்

Top


Updated on 11 Jul 2010

No comments: