Monday, July 12, 2010

தியாகராஜ கிருதி - ஹரி தா3ஸுலு - ராகம் யமுனா கல்யாணி - Hari Dasulu - Raga Yamuna Kalyani

பல்லவி
ஹரி தா3ஸுலு 1வெட3லு முச்சட கனி
ஆனந்த3மாயெ த3யாளோ

அனுபல்லவி
ஹரி கோ3விந்த3 நர ஹரி ராம க்ரு2ஷ்ணயனி
வருஸக3 2நாமமு கருணதோ ஜேயுசு (ஹ)

சரணம்
சரணம் 1
3ஸங்க3திகா3னு ம்ரு23ங்க3 கோ4ஷமுலசே
பொங்கு3சு வீது4லகேகு3சு மெரயுசு (ஹ)


சரணம் 2
சக்கனி ஹரிசே சிக்கிதிமனி 4மதி3
ஸொக்குசு நாமமே தி3க்கனி பொக3டு3சு (ஹ)


சரணம் 3
தி3ட்டமுக3 நடு3 கட்டுதோனடு3கு3லு
பெட்டுசு தாளமு பட்டி க3ல்க3ல்லனக3 (ஹ)


சரணம் 4
ஞானமுதோ ராம த்4யானமுதோ மஞ்சி
கா3னமுதோ மேனு தா3னமொஸங்கு3சு (ஹ)


சரணம் 5
ராஜ ராஜுனிபை ஜாஜுலு சல்லுசு
ராஜில்லுசு த்யாக3ராஜுனிதோ கூடி3 (ஹ)


பொருள் - சுருக்கம்
தயாளா!

  • அரியின் தொண்டர்கள் செல்லும் அழகினைக் கண்டு, ஆனந்தமாகியது.
    • 'அரியே', 'கோவிந்தா', 'நர சிங்கமே', 'இராமா', 'கண்ணா' யென, வரிசையாக, பெயர், கருணையுடன் பாடிக்கொண்டு,

    • ஒருமித்த குரலில், மிருதங்கத்தின் ஒலியுடன்,
    • பெருமிதத்துடன், வீதிகளுக்குச் சென்றுகொண்டு, மிளிர்ந்துகொண்டு,

    • சிறந்த அரியின் கையில் அகப்பட்டோமென, உள்ளத்தினில் சொக்கி,
    • (இறைவனின்) நாமமே புகலெனப் போற்றிக்கொண்டு,

    • திண்ணமாக, இடைக்கட்டுடன், அடிகளை வைத்துக்கொண்டு,
    • தாளத்திற்குகந்து, (சலங்கைகள்) கலீர் கலீரென,

    • ஞானத்துடனும், இராமனின் தியானத்துடனும், நல்ல இசையுடனும்,
    • உடல் தானமளித்துக்கொண்டு,

    • அரசர்க்கரசனின் மீது மல்லிகை மலர் தூவிக்கொண்டு,
    • களித்து, தியாகராசனுடன் கூடி,

  • அரியின் தொண்டர்கள் செல்லும் அழகினைக் கண்டு, ஆனந்தமாகியது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹரி/ தா3ஸுலு/ வெட3லு/ முச்சட/ கனி/
அரியின்/ தொண்டர்கள்/ செல்லும்/ அழகினை/ கண்டு/

ஆனந்த3மாயெ/ த3யாளோ/
ஆனந்தமாகியது/ தயாளா/


அனுபல்லவி
ஹரி/ கோ3விந்த3/ நர/ ஹரி/ ராம/ க்ரு2ஷ்ண/-அனி/
'அரியே'/ 'கோவிந்தா'/ 'நர/ சிங்கமே/, 'இராமா/, 'கண்ணா/ யென,

வருஸக3/ நாமமு/ கருணதோ/ ஜேயுசு/ (ஹ)
வரிசையாக/ பெயர்/ கருணையுடன்/ பாடிக்கொண்டு/ அரியின்...


சரணம்
சரணம் 1
ஸங்க3திகா3னு/ ம்ரு23ங்க3/ கோ4ஷமுலசே/
ஒருமித்த குரலில்/ மிருதங்கத்தின்/ ஒலியுடன்/

பொங்கு3சு/ வீது4லகு/-ஏகு3சு/ மெரயுசு/ (ஹ)
பெருமிதத்துடன்/ வீதிகளுக்கு/ சென்றுகொண்டு/ மிளிர்ந்துகொண்டு/ அரியின்...


சரணம் 2
சக்கனி/ ஹரி/ சே/ சிக்கிதிமி/-அனி/ மதி3/
சிறந்த/ அரியின்/ கையில்/ அகப்பட்டோம்/ என/ உள்ளத்தினில்/

ஸொக்குசு/ நாமமே/ தி3க்கு/-அனி/ பொக3டு3சு/ (ஹ)
சொக்கி/ (இறைவனின்) நாமமே/ புகல்/ என/ போற்றிக்கொண்டு/ அரியின்...


சரணம் 3
தி3ட்டமுக3/ நடு3/ கட்டுதோனு/-அடு3கு3லு/
திண்ணமாக/ இடை/ கட்டுடன்/ அடிகளை/

பெட்டுசு/ தாளமு/ பட்டி/ க3ல்க3ல்லு/-அனக3/ (ஹ)
வைத்துக்கொண்டு/ தாளத்திற்கு/ உகந்து/ (சலங்கைகள்) கலீர் கலீர்/ என/ அரியின்...


சரணம் 4
ஞானமுதோ/ ராம/ த்4யானமுதோ/ மஞ்சி/
ஞானத்துடனும்/ இராமனின்/ தியானத்துடனும்/ நல்ல/

கா3னமுதோ/ மேனு/ தா3னமு/-ஒஸங்கு3சு/ (ஹ)
இசையுடனும்/ உடல்/ தானம்/ அளித்துக்கொண்டு/ அரியின்...


சரணம் 5
ராஜ/ ராஜுனிபை/ ஜாஜுலு/ சல்லுசு/
அரசர்க்கு/ அரசனின் மீது/ மல்லிகை மலர்/ தூவிக்கொண்டு/

ராஜில்லுசு/ த்யாக3ராஜுனிதோ/ கூடி3/ (ஹ)
களித்து/ தியாகராசனுடன்/ கூடி/ அரியின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வெட3லு - வெட3லே.

2 - நாமமு - நாமமுலு.

4 - மதி3 - மதி.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
3 - ஸங்க3திகா3னு - சங்கதியாக. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு, 'ஒருமித்த குரலில்' (chorus) என்று பொருளாகும்.

ஆனால், 'சங்கதி' என்ற சொல்லுக்கு, இசையில் தனித்த பொருளுண்டு. Glossary of Carnatic Music Terminology நோக்கவும்.

உடல் தானமளித்துக்கொண்டு - உடலினால் இறைவன் தொண்டு பூண்டு
அரசர்க்கரசன் - இராமன்

Top


Updated on 12 Jul 2010

No comments: