ஸரஸீ-ருஹ நயனே ஸரஸிஜாஸனே
ஸ1ரதி3ந்து3 நிப4 வத3னே அம்ப3
அனுபல்லவி
பரம க்ரு2பா நிதி4 நீவேயனி நினு
நிரதமு நம்மிதி ப்3ரோவவே தல்லி (ஸ)
சரணம்
ஸ்வர ராக3 லய ஸ்1ருதி மர்மம்பு3லு
நாரதா3தி3 முனுலகுபதே3ஸி1ஞ்சே
வர தா3யகி அம்ரு2த வர்ஷிணி
மரவகு லலிதே த்யாக3ராஜ நுதே (ஸ)
பொருள் - சுருக்கம்
- கமலக் கண்ணீ! கமலத்தினில் அமர்பவளே! இலையுதிர்கால மதி நிகர் வதனத்தினளே! அம்பா!
- தாயே!
- சுரம், ராகம், லயம், சுருதி மருமங்களினை நாரதர் முதலான முனிவர்களுக்கு உபதேசிக்கும் வரம் அருள்பவளே! அமிழ்தினைப் பொழிபவளே! லலிதா! தியாகராசனால் போற்றப் பெற்றவளே!
- பரம கருணைக் கடல் நீயேயென உன்னை எவ்வமயமும் நம்பினேன்.
- காப்பாய்.
- மறவாதே.
- பரம கருணைக் கடல் நீயேயென உன்னை எவ்வமயமும் நம்பினேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரஸீ-ருஹ/ நயனே/ ஸரஸிஜ/-ஆஸனே/
கமல/ கண்ணீ/ கமலத்தினில்/ அமர்பவளே/
ஸ1ரத்3/-இந்து3/ நிப4/ வத3னே/ அம்ப3/
இலையுதிர்கால/ மதி/ நிகர்/ வதனத்தினளே/ அம்பா/
அனுபல்லவி
பரம/ க்ரு2பா/ நிதி4/ நீவே/-அனி/ நினு/
பரம/ கருணை/ கடல்/ நீயே/ யென/ உன்னை/
நிரதமு/ நம்மிதி/ ப்3ரோவவே/ தல்லி/ (ஸ)
எவ்வமயமும்/ நம்பினேன்/ காப்பாய்/ தாயே/
சரணம்
ஸ்வர/ ராக3/ லய/ ஸ்1ருதி/ மர்மம்பு3லு/
சுரம்/ ராகம்/ லயம்/ சுருதி/ மருமங்களினை/
நாரத3/-ஆதி3/ முனுலகு/-உபதே3ஸி1ஞ்சே/
நாரதர்/ முதலான/ முனிவர்களுக்கு/ உபதேசிக்கும்/
வர/ தா3யகி/ அம்ரு2த/ வர்ஷிணி/
வரம்/ அருள்பவளே/ அமிழ்தினை/ பொழிபவளே/
மரவகு/ லலிதே/ த்யாக3ராஜ/ நுதே/ (ஸ)
மறவாதே/ லலிதா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
திரு TK Govinda Rao அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்ற ஐயத்திற்குரிய பாடல்களின் பட்டியலில் இப்பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது.
அமிழ்தினைப் பொழிபவளே - 'அம்ருத வர்ஷிணி ராகமே' என்றும் கொள்ளலாம்.
Top
Updated on 13 Jul 2010
No comments:
Post a Comment