கலஸ1 1வார்தி4ஜாம் ஸததம் ப4ஜே
கமல லோசனாம் 2ஸ்ரீ ரமாம் மாம்
அனுபல்லவி
களப4 கா3மினீம் கரிபி4ராவ்ரு2தாம்
கமல நாப4 ஹ்ரு2த்கமல ஸ்தி2தாம் (க)
சரணம்
கமனீய ஜய த4ன தா4ன்ய ரூபாம்
3கனகாதி3 தை4ர்ய லக்ஷ்மீ ஸ்வரூபாம்
கமலாம் மஹா ஸந்தான ரூபாம்
கமலாலயாம் த்யாக3ராஜ 4மோக்ஷ ப்ரதா3ம் (க)
பொருள் - சுருக்கம்
- குடக்கடலில் தோன்றியவளை என்றும் தொழுவேனே.
- கமலக்கண்ணியை, இரமையை, இலட்சுமியை,
- இளம் கரி நடையாளை, இரு கரிகளால் சூழப்பெற்றவளை,
- கமல உந்தியோனின் இதயக் கமலத்துறைபவளை,
- இனிய ஜய, தன, தானிய, கனக, ஆதி, தைரிய, மகா, சந்தான இலட்சுமி உருவத்தினளை,
- கமலையை, கமலத்தினிலுறைபவளை,
- தியாகராசனுக்கு மோக்கமருள்பவளை,
- கமலக்கண்ணியை, இரமையை, இலட்சுமியை,
- குடக்கடலில் தோன்றியவளை என்றும் தொழுவேனே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கலஸ1/ வார்தி4ஜாம்/ ஸததம்/ ப4ஜே/
குட/ கடலில் தோன்றியவளை/ என்றும்/ தொழுவேனே/
கமல/ லோசனாம்/ ஸ்ரீ ரமாம்/ மாம்/
கமல/ கண்ணியை/ ஸ்ரீ ரமையை/ இலட்சுமியை/ குடக்கடலில்...
அனுபல்லவி
களப4/ கா3மினீம்/ கரிபி4:/-ஆவ்ரு2தாம்/
இளம் கரி/ நடையாளை/ இரு கரிகளால்/ சூழப்பெற்றவளை/
கமல/ நாப4/ ஹ்ரு2த்/-கமல/ ஸ்தி2தாம்/ (க)
கமல/ உந்தியோனின்/ இதய/ கமலத்து/ உறைபவளை/ குடக்கடலில்...
சரணம்
கமனீய/ ஜய/ த4ன/ தா4ன்ய/ ரூபாம்/
இனிய/ ஜய/ தன/ தானிய/ (இலட்சுமி) உருவத்தினளை/
கனக/-ஆதி3/ தை4ர்ய/ லக்ஷ்மீ/ ஸ்வரூபாம்/
கனக/ ஆதி/ தைரிய/ இலட்சுமி/ உருவத்தினளை/
கமலாம்/ மஹா/ ஸந்தான/ ரூபாம்/
கமலையை/ மகா/ சந்தான (இலட்சுமி)/ உருவத்தினளை/
கமல/-ஆலயாம்/ த்யாக3ராஜ/ மோக்ஷ/ ப்ரதா3ம்/ (க)
கமலத்தினில்/ உறைபவளை/ தியாகராசனுக்கு/ மோக்கம்/ அருள்பவளை/ குடக்கடலில்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வார்தி4ஜாம் - வாரிதி4ஜாம் : 'வார்தி4' மற்றும் 'வாரிதி4' இரண்டிற்குமே 'கடல்' என்றுதான் பொருள்.
4 - மோக்ஷ ப்ரதா3ம் - மோக்ஷ ரூபாம்.
Top
மேற்கோள்கள்
ஆதி சங்கரர் இயற்றியதாகக் கூறப்படும், அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரங்கள் இரண்டு உள்ளன. பெயர்களின் பொருள்; ஸ்தோத்திரம்.
Top
விளக்கம்
2 - ஸ்ரீ ரமா - 'ஸ்ரீ' என்றாலும் லட்சுமியைக் குறிக்கும். ஆனால், இவ்விடத்தில், அது, 'ரமா' என்பதற்கு அடைமொழியாகும்.
3 - கனக - அனேகமாக இது கஜ லட்சுமியைக் குறிக்கும்.
Top
3 - ஆதி3 - 'ஆதி லட்சுமி' மற்றும் 'மகா லட்சுமி' இரண்டுமே ஒன்றுதான். எனவே, இவ்விடத்தில், 'ஆதி3' என்பதற்கு 'ஆகிய' என்றும் பொருள் கொள்ளலாம்.
ஜய, தன, தானிய, கனக, ஆதி, தைரிய, மகா, சந்தானலட்சுமிகள் என்று இங்கு கூறப்பட்டிருந்தாலும், பொதுவாக, அட்டலட்சுமிகள் - ஆதி, தானிய, தைரிய, கஜ, சந்தான, விஜய, வித்யா மற்றும் தனலட்சுமிகளாவர்.
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமுள்ள பாடல்களின் பட்டியலில், இப்பாடலும் இடம் பெற்றுள்ளது.
குடக்கடல் - பாற்கடல்
Top
Updated on 14 Jul 2010
No comments:
Post a Comment