மார வைரி ரமணீ மஞ்ஜு பா4ஷிணீ
அனுபல்லவி
க்ரூர தா3னவேப4 வாரணாரி கௌ3ரீ (மா)
சரணம்
1காம ப3ந்த4 வாரண நிஷ்காம சித்த வரதே3
2த4ர்ம ஸம்வர்த4னி ஸதா3 வத3ன ஹாஸே
3த்யாக3ராஜ ஸு1ப4 ப2லதே3 (மா)
பொருள் - சுருக்கம்
- மதனின் பகைவனுக்கு இனியவளே! இன்சொல்லினளே!
- கொடிய அரக்கரெனும் வாரணங்களுக்கு சிங்கமே! கௌரி!
- இச்சைகளில் கட்டுண்டோருக்குத் தடங்கலே! இச்சைகளற்ற உள்ளத்தினருக்கு அருள்பவளே! அறம் வளர்த்த நாயகியே! எவ்வமயமும் புன்னகை தவழும் வதனத்தினளே! தியாகராசனுக்கு நற்பயன் அருள்பவளே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மார/ வைரி/ ரமணீ/ மஞ்ஜு/ பா4ஷிணீ/
மதனின்/ பகைவனுக்கு/ இனியவளே/ இனிய/ சொல்லினளே/
அனுபல்லவி
க்ரூர/ தா3னவ/-இப4/ வாரண/-அரி/ கௌ3ரீ/ (மா)
கொடிய/ அரக்கரெனும்/ வாரணங்களுக்கு/ சிங்கமே/ கௌரி/
சரணம்
காம/ ப3ந்த4/ வாரண/ நிஷ்காம/ சித்த/ வரதே3/
இச்சைகளில்/ கட்டுண்டோருக்கு/ தடங்கலே/ இச்சைகளற்ற/ உள்ளத்தினருக்கு/ அருள்பவளே/
த4ர்ம ஸம்வர்த4னி/ ஸதா3/ வத3ன/ ஹாஸே/
அறம் வளர்த்த நாயகியே/ எவ்வமயமும்/ வதனத்தினளே/ புன்னகை தவழும்/
த்யாக3ராஜ/ ஸு1ப4/ ப2லதே3/ (மா)
தியாகராசனுக்கு/ நற்பயன்/ அருள்பவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காம ப3ந்த4 - கர்ம ப3ந்த4.
2 - த4ர்ம ஸம்வர்த4னி - த4ர்ம வர்த4னி : இப்பாடல், திருவையாற்றிலுள்ள அம்மையைப் புகழ்ந்து இயற்றப்பட்டிருந்தால், 'த4ர்ம ஸம்வர்த4னி' (அறம் வளர்த்த நாயகி) என்று இருக்கவேண்டும்.
3 - த்யாக3ராஜ ஸு1ப4 ப2லதே3 - ஸு1ப4 ப2லதே3.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - காம ப3ந்த4 வாரண - இந்தப் போற்றியின் பொருள் சரிவர விளங்கவில்லை. ஏனெனில், 'வாரண' என்ற சொல்லுக்கு, 'தடங்கல்' என்றும் 'நீக்குதல்' என்றும் பொருள் கொள்ளலாம்.
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தினில், இப்பாடல், தியாகராஜர் இயற்றினாரா என்ற ஐயத்திற்கிடமான பாடல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மதனின் பகைவன் - சிவன்
வாரணம் - யானை
Top
Updated on 13 Jul 2010
No comments:
Post a Comment